top of page

'தலைமை செயலகம்' ZEE 5 ஒரிஜினல் – விமர்சனம்


தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் கிஷோர் மீது டெல்லியில் ஆள்பவர்களின் சூழ்ச்சியினால் ஊழல் வழக்கு சுமத்தப்பட்டு சில வருடங்களாக அந்த வழக்கு நடைபெற்று வருகிறது.


ஆந்திர மாநில நீதிமன்றத்தில் நடைபெறும் இந்த வழக்கில் சாட்சிகள் அனைத்தும் முதல்வருக்கு எதிராக இருக்கும் நிலையில் தீர்ப்பு தள்ளிவைக்கப்படுகிறது.

இதற்கிடையில் கிஷோரிடம் நெருங்கி பழகும் நண்பராக ஷ்ரேயா ரெட்டி இருப்பதால் இவர்களது நட்பை கேவலமாக சித்தரித்து ஷ்ரேயா ரெட்டியை வெறுக்கிறார் அவரது மகள்

மற்றொரு பக்கம் முதல்வருக்கு சாதகமாக தீர்ப்பு வராமல் அவருக்கு எதிராக தீர்ப்பு வந்து கிஷோர் சிறைக்குச் சென்றால் கிஷோரின் மூத்த மகளும் அமைச்சருமான ரம்யா நம்பீசன், கிஷோரின் இரண்டாவது மருமகனான நிரூப் நந்தகுமார் இருவரும் முதல்வர் பதவிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.

எதிரணியினர் கிஷோரை சிறைக்கு அனுப்ப போராடும் நிலையில்,,,,, பதவிக்கு ஆசைப்படும் ரம்யா நம்பிசனும் கிஷோரை காப்பாற்ற போராடுகிறார்.

இதற்கிடையில் ஜார்கண்ட் மாநிலத்தில் ஒரு முக்கிய நபரை கொலை செய்து விட்டு மேலும் பல கொலைகளுடன் EX.M.P.க்களை கொன்று தப்பி சென்ற துர்கா என்கிற பெண்ணை தேடப்படும் கொலையாளியாக சிபிஐ அதிகாரியான ஆதித்யா மேனன் ஒரு பக்கம் தேடுகிறார் .

இந்நேரத்தில் போலீஸ் உளவாளியாக செயல்படும் ஒரு அதிகாரி கொடூரமாக கொல்லப்பட உயர் அதிகாரியாக இருக்கும் பரத்,,,, தர்ஷா குப்தாவிடன் இணைந்து வழக்கை விசாரிக்கிறார்.

ஒரு கட்டத்தில் துர்காவை தேடும் சிபிஐ அதிகாரியான ஆதித்யா மேனனுடன் பரத் இணையும் சந்தர்ப்பம் வருகிறது .

இந்நிலையில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருக்கும் கிஷோர் இறுதி தீர்ப்பு வர சில நாட்கள் இருக்கும்போது பொது குழுவை கூட்டி தீர்ப்பு தனக்கு எதிராக தீர்ப்பு வந்து தான் சிறைக்கு சென்றால் அடுத்த முதல்வர் யார் என்பதை ரகசியமாக ஒரு கடிதமாக எழுதி அதற்கு சீல் வைத்து அனைவரது முன்னிலையில் கட்சியின் செயலாளரான சந்தான பாரதியிடம் ஒப்படைக்கிறார் .

முடிவில் ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முதலமைச்சராக இருக்கும் கிஷோருக்கு எதிராக தீர்ப்பு அமைந்ததா ?

தேடப்படும் கொலையாளியான துர்கா என்பவர் யார்.? அடுத்த முதல்வர் யார் என்பதை ரகசியமாக எழுதிய கடிதத்தில் அடுத்த முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் என்ன ? என்கிற கேள்விகளுக்கு பதில் சொல்லும் தொடர்தான் தான் 'தலைமை செயலகம்'

தமிழ்நாட்டின் முதலமைச்சராக முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் நடிகர் கிஷோர்.

அவரது மகளாக அமைச்சராக வரும் ரம்யா நம்பிசன் ,“கொற்றவை” கதாபாத்திரத்தில் கதையுடன் இணைந்து பயணிக்கும் ஷ்ரேயா ரெட்டி, சிபிஐ அதிகாரியாக வரும் ஆதித்யா மேனன் ,போலீஸ் அதிகாரியாக நடித்த பரத், அவரது காதலியாக தர்ஷா குப்தா , கனி குஸ்ருதி, நிரூப் நந்தகுமார், சாரா பிளாக் , சித்தார்த் விபின், ஒய் ஜி மஹேந்திரன் , சந்தான பாரதி, கவிதா பாரதி, நமோ நாராயணன் என நடித்த நடிகர்கள் அனைவரும் இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .

ஜிப்ரானின் பின்னணி இசையுடன் ,,, கதையின் வேகத்திற்கு இணையாக wide angle ரவிஷங்கரின் ஒளிப்பதிவு தொடருக்கு பக்க பலம்.


மிக தெளிவான தமிழக அரசியல் களம் கொண்ட அழுத்தமான கதை,,,, திரைக்கதையுடன்,,,நேர்த்தியான ஜீவனுள்ள முத்திரை பதிக்கும் வசனங்களுடன் அனைவரும் பாராட்டும் இயல்பான அரசியல் தொடராக இயக்கியுள்ளார் இயக்குனர் வசந்த பாலன்.


ரேட்டிங் - 3.5 / 5

Comments


bottom of page