top of page

இங்க 'நான் தான் கிங்கு' - விமர்சனம் !

Updated: May 20


நாயகன் சந்தானம் ஜாதகத்தை வைத்து வரன்கள் பார்க்கும் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் . தாய் தந்தை இல்லாத சந்தானம், நண்பன் விவேக் பிரசன்னாவிடம் 25 லட்சம் கடன் வாங்கி ஒரு குடியிருப்பு ப்ளாட் ஒன்றை வாங்குகிறார்.


இதனால் அவருக்கு 25 லட்சம் ரூபாய் கடன் ஏற்படுகிறது. இந்த கடனை யார் தீர்க்கிறார்களோ அவர்களது மகளை திருமணம் செய்வதென முடிவெடுக்கும் நிலையில் , சந்தானத்திற்கு இரத்தினபுரி ஜமீன் தம்பி ராமையாவின் மகளான ப்ரியாலயாவை பெண் பார்க்க அவரது வீட்டிற்கு செல்கிறார் .

ஜமீன் குடும்பத்தால் தனது கடன் பிரச்சனை தீர்ந்து விடும் என்று எண்ணுகிறார் சந்தானம்.


ராஜ மரியாதையோடு அவரை வரவேற்று சந்தானத்திற்கு பெரும் மரியாதை செய்கின்றனர் ஜமீனான தம்பி ராமையாவும் அவரது மகனான பால சரவணனும் .


ப்ரியாலயாவை நிச்சயம் அன்றே திருமணம் செய்து கொள்கிறார் சந்தானம். திருமணம் முடிந்த அடுத்த நாளே ஜமீன் பங்களா மீதே பல கோடிகளுக்கு கடன் இருக்கிறது என்று .சந்தானத்திற்கு தெரிகிறது

அதற்காக திருமணம் முடிந்ததும் ஜமீன் பங்களாவை வங்கி எடுத்துக் கொள்கிறது.


அதிர்ச்சியில் மனமுடைந்த சந்தானம். வேறு வழியின்றி, தனது மனைவி ப்ரியாலயா, தம்பி ராமையாவையும் பால சரவணனையும் அழைத்துக் கொண்டு சென்னை வருகிறார் .


வேறு வழியின்றி அவர்களுடன் வாழ்ந்து வரும் சந்தானம் ஒரு கட்டத்தில் தன் நண்பனான விவேக் பிரசன்னாவின் உருவத்தில் இருக்கும் தீவிரவாதியான மற்றொரு  விவேக் பிரசன்னா தன் வீட்டில் மின்சாரம் பாய்ந்து இறந்து விட , அதனால் அவர் எதிர்கொள்ளும் சம்பவங்களை எப்படி சமாளித்தார் என்பதை காமெடி கலாட்டாவாக சொல்லும் படம்தான் ' இங்க நான்தான் கிங்கு'


நாயகன் சந்தானம் வழக்கமான காமெடி நடிப்புடன் கதையின் நாயகனாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்


நாயகி அழகான ப்ரியாலயா கதைக்கேற்றபடி நடிப்பில் இயல்பு .


மறைந்த மனோபாலா ,முனிஷ் காந்த் , சேஷு , பாலசரவணன், தம்பி ராமையா, மாறன், விவேக் பிரசன்னா, என படத்தின் மற்ற கதாபாத்திரங்களில் நடித்த அனைவரும் சிறப்பான நடிப்பைக் கொடுத்திருந்தனர்.


இமானின் இசையுடன் பின்னணி இசையும் ஓம் நாராயணின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


வழக்கமான சந்தானம் பார்முலா காமெடி கதையுடன் வித்தியாசமாக தீவிரவாத கும்பலை திரைக்கதையில் இணைத்து காமெடி நட்சத்திர பட்டாளத்துடன் கோடை விடுமுறையை மக்கள் கொண்டாடும் ஜாலியான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஆனந்த் நாராயண்.




Comentários


bottom of page