top of page

'PT சார்' - பட விமர்சனம் பாலியல் வன் கொடுமைக்கு எதிராக அதிரடியாய் பாடம் எடுக்கும் 'PT சார்'




ஈரோடு மாவட்டத்தில் மிக பெரிய செல்வந்தராக வாழ்ந்து வரும் தியாகராஜன் கல்வி நிறுவனங்களின் தாளாளராக கல்லூரி மற்றும் பள்ளிகளை நடத்தி வருகிறார்.

அவரது பள்ளியில் உடற் கல்வி எனும் P.T ஆசிரியராக பணியாற்றும் நாயகன் ஹிப்ஹாப் ஆதிக்கு ஜாதகத்தில் சிறு வயதில் இருந்து ஒரு தோஷம் இருப்பதால் கண் முன் என்ன பிரச்சனை நடந்தாலும் அதை கண்டுக்கொள்ளாமல் ஒதுங்கிப் போகுமளவில் அவரை பாதுகாப்பாக வளர்க்கிறார் அவரது அம்மா தேவதர்ஷினி .

இந்நிலையில் ஹிப்ஹாப் ஆதியின் எதிர் வீட்டில் வசிக்கும் இளவரசுவின் மகளான கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவி அனிகா சுரேந்திரன் கல்லூரியில் நடக்கும் கல்லூரி விழாவில் மாடர்னான உடை அணிந்துக் கொண்டு செல்கிறார்.

விழா முடிந்து வரும் வழியில் சில இளைஞர்கள் அனிகா சுரேந்திரனை பாலியல் துன்புறுத்தல் செய்து அதனை வீடியோ எடுத்து இணைய தளத்திலும் வெளியிடுகிறார்கள்,

இது மிகவும் வைரலாக பரவ,,,, இப் பிரச்சனைக்கு முழு காரணம் இவள் மாடர்னாக உடை அணிந்து வந்ததுதான் என அனிகா சுரேந்திரன் மீது அருகில் இருப்பவர்கள் பழி சுமத்துகின்றனர்.

அந்த பிரச்சனையால் மனமுடைந்த அனிகா சுரேந்திரன் ஆற்று பாலத்தில் குதித்து தற்கொலை செய்துக் கொள்கிறார்.

வழக்கை விசாரிக்கும் போலீசார் . அனிகா சுரேந்திரனின் உடலை பரிசோதனை செய்ய அதிலிருந்து ஒரு கடிதத்தை கைப்பற்றுகின்றனர் .

கடிதத்தை பற்றி தெரிந்து கொண்ட ஹிப்ஹாப் ஆதி அதை கைப்பற்ற நினைக்கும்போது அந்த கடிதத்தை கல்லூரி நிர்வாக தலைவர் தியாகராஜனிடம் பணத்திற்கு ஆசைப்பட்டு போலீசார் ஒப்படைக்க ,,,அனிகா சுரேந்திரனின் மரணம் தற்கொலை அல்ல கொலை என்று வழக்கு தொடரும் ஹிப்ஹாப் ஆதி அதற்கு காரணமான தியாகராஜனை எதிர்த்து போராடுகிறார் .


முடிவில் இக் கொலை வழக்கில் தியாகராஜனை எதிர்த்து போராடும் ஹிப்ஹாப் ஆதிக்கு நீதி மன்றத்தின் இறுதி தீர்ப்பு சாதகமாக அமைந்ததா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'P T சார்'

கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி,,, துறு துறு இளைஞனாக ,, ஆங்கில ஆசிரியரான காஷ்மீரா பரதேசியை காதலிக்கும் காட்சிகளில் காதல் நாயகனாக,,,, வழக்கம் போல குழந்தைகளையும், பெண்களையும் கவரும் விதத்தில் இயல்பான நடிப்பிலும், பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக வெகுண்டெழும் காட்சிகளில் அதிரடி நாயகனாகவும் கதையுடன் இணைந்து பாராட்டும்படியான நடிப்பில் பட்டையை கிளப்புகிறார் .

கல்வி நிறுவனங்களின் தலைவராக அமைதியான நடிப்பில் மிரட்டியிருக்கும் நடிகர் தியாகராஜன்,,,,,கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் அனிகா சுரேந்திரன் , ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்திருக்கும் காஷ்மீரா பரதேசி

இளவரசு , இளைய திலகம் பிரபு, கே.பாக்யராஜ், ஆர்.பாண்டியராஜன், முனிஷ்காந்த், பட்டிமன்றம் ராஜா, தேவதர்ஷினி வினோதினி, ஒய்.ஜி.மதுவந்தி, சுட்டி அரவிந்த், ஆர்.ஜே.விக்கி, அபிநட்சத்திரா என நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .

ஹிப் ஹாப் ஆதியின் இசையில் பாடல்களும்,,பின்னணி இசையும் கதைக்கு பக்க பலம் !

ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் !

சமூகத்தில் இளம் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் பெண்ணை பற்றிய கதையுடன்

அதனை வேறு விதமாக பார்க்கும் சமூகத்தின் கண்களை அழுத்தமாக பதிவு செய்வதோடு , காலம் காலமாக பெரும் புள்ளிகளின் ஆளுமையில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் தொந்தரவுகளை திரைக்கதையில் தோலுரிப்பதுடன் இன்றைய சமுதாயத்திற்கு ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்.


ரேட்டிங் - 3.5 / 5


பாலியல் வன் கொடுமைக்கு எதிராக அதிரடியாய் பாடம் எடுக்கும் 'PT சார்'

Comments


bottom of page