top of page

‘சாமானியன்' -பட விமர்சனம்! மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை களத்தில் மீண்டும் நாயகனாக ராமராஜன் !

மதுரையில் வாழ்ந்து வரும் முன்னாள் ராணுவ வீரரான நாயகன் ராமராஜன் சக நண்பர் எம் எஸ் பாஸ்கருடன் முஸ்லிமான ராதாரவியை சந்திக்க சென்னை வருகிறார் .

திடீரென மூவரும் ஒவ்வொரு திசையில் தனியார் வங்கியில் பணிபுரியும் போஸ் வெங்கட் வீட்டிற்கு எம் எஸ் பாஸ்கரும் , உதவி மேலாளராக பணிபுரியும் ஸ்மிருதி வெங்கட்டின் கணவனது வீட்டில் ராதாரவியும் துப்பாக்கி முனையில் நுழைய .... சம்பந்தப்பட்ட வங்கியில் ராமராஜன் நுழைந்து துப்பாக்கி மற்றும் வெடிகுண்டு முனையில் அங்கிருப்பவர்களை சிறை வைக்கிறார்.

அந்த வங்கியில் கோடிக்கணக்கான பணம் மற்றும் தங்க நகைகள் இருந்தாலும், அவற்றை எடுக்காமல், வங்கியின் உதவி மேலாளரிடம் இருந்து ரூ.2.75 லட்சம் கேட்பவர், வங்கி மேலாளரிடம் ரூ.3.50 லட்சத்திற்கான மூன்றாண்டுகள் வட்டியை மொத்தமாக கேட்கிறார்.

மூன்றாவதாக, வங்கியின் மற்றொரு அதிகாரி வசித்து வரும் வீட்டை காலி செய்து, மதுரையில் உள்ள இளம் தம்பதி மற்றும் அவர்களது குழந்தையை அழைத்து வந்து குடி வைக்க வேண்டும் என்று நிபந்தனை வைக்கிறார்.

வங்கியை சிறை பிடித்த ராமராஜனை கைது செய்ய வரும் போலீஸ் உயர் அதிகாரி கே எஸ் ரவிகுமாரிடம் ராமராஜன் சில நிபந்தனைகளை விதிக்க ,,,,இதன் பின்னணியில் என்ன இருக்கிறது என போலீசாரே குழப்பமாவதுடன் தமிழக டிவி சேனல்கள் அனைத்தும் இந்த பிரச்சனையை பூதாகரமாக ஆக்குகின்றனர் .

இந்த நிலையில், ராமராஜன் சொன்ன இடத்திற்கு மதுரையில் போலீசார் சென்று பார்க்கும் போது அங்கு மூன்று சமாதிகள் மட்டுமே இருக்கிறது . முடிவில் இறந்து போன மூன்று பேர் யார் ? இறந்து போன மூவருக்கும் ராமராஜனுக்கும் என்ன தொடர்பு ?

தனியார் வங்கியை வெடிகுண்டுடன் துப்பாக்கி முனையில் சிறை பிடித்த காரணத்தின் பின்னணி என்ன? என்பதை சாமானிய மக்களுக்கான விழிப்புணர்வுடன் தனியார் வங்கிகளின் அட்டூழியங்களை தோலுரிக்கும் படம்தான் ‘சாமானியன்’'


நீண்ட வருடங்களுக்கு பின் கதையின் நாயகனாக ராமராஜன் தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் தனியார் வங்கிகள் மக்களை ஏமாற்றி அவர்களின் சிந்தனையை சிதைத்து தற்கொலைக்கு தூண்டும் இந்த காலக்கட்டத்திற்கு ஏற்ற ஒரு கதையில் சங்கரநாராயணன் என்ற முன்னாள் ராணுவ வீரராக கதையின் நாயகனான ரசிக்கும்படியான அனுபவ நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


ராமராஜனின் நண்பர்களாக நடித்திருக்கும் எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் ராதாரவி, இளம் தம்பதிகளாக நடித்திருக்கும் லியோ சிவகுமார் மற்றும் லக்‌ஷா சரண் ,வங்கி அதிகாரியாக நடித்திருக்கும் போஸ் வெங்கட், கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளராக நடிக்கும் மிரட்டும் வில்லனாக மைம் கோபி, காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருக்கும் கே.எஸ்.ரவிக்குமார், தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் அபர்ணதி, supergood சுப்பிரமணி ,போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் கஜராஜ், ஸ்ம்ருதி வெங்கட், வினோதினி என அனைவரும் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர் .

இளையராஜாவின் இசையில் சிறப்பான இரண்டு பாடல்கள் இருந்தாலும், இளையராஜா - ராமராஜன் கூட்டணியின் பழைய பாடல்கள் சில இடங்களில் இடம்பெற்றிருப்பது ரசிகர்கள் கொண்டாடும் விதமாக . பின்னணி இசை காட்சிகளுக்கு உயிரோட்டமாக அமைந்துள்ளது .


ஒளிப்பதிவாளர் சி.அருள் செல்வன் ஒளிப்பதிவு தரம் !


சொந்த வீடு வாங்கும் ஆசையில் தனியார் வங்கியில் கடன் வாங்கி வீட்டை வாங்கும் இளம் தம்பதியினர் மாத வட்டியுடன் சேர்ந்த தொகையை தாமதமாக கட்டுவதால் மன சிதைவை உண்டாக்குமளவில் அவர்களை தரம் தாழ்ந்து பார்க்கும் பகல் கொள்ளையடிக்கும் வங்கிகளின் திருட்டுத்தனத்தை கதையாக வைத்து,,,,, வங்கி கடன் மூலம் அவதிப்படும் மக்களின் நிலையை திரைக்கதையில் அழுத்தமாக சொல்லி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு அதை சாமானிய மக்களும் புரிந்து கொள்ளும்படி தெளிவான கதையாக அனைவரும் ரசிக்கும் வகையில் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் கே.கார்த்திக் குமார்.


ரேட்டிங் - 3.5 / 5


மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் கதை களத்தில் மீண்டும் நாயகனாக ராமராஜன் !

Commentaires


bottom of page