தன் சொந்த நிலத்தில் விவசாயம் செய்து பூ வியாபாரம் செய்து வரும் விவசாயியான விதார்த்திற்கு ஒரு மகன் கிருத்திக் மோகன் ,மகள் மற்றும் மனைவி வாணி போஜனுடன் இயல்பான வாழ்க்கையுடன் வாழ்ந்து வருகிறார்.
தாய்மொழியில் கல்வி பயின்றால் மட்டுமே சுயமாக சிந்திக்க முடியும், என்ற கோட்பாடு கொண்ட நாயகன் விதார்த், தனது மகனை அரசுப் பள்ளியில் படிக்க வைக்கிறார். அவரது மகனும் நன்றாக படித்து பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடத்தை பிடிப்பதோடு மருத்துவம் படிக்க ஆசைப்படுகிறார். மத்திய அரசு அப்போது அமல்படுத்தும் மருத்துவக் கல்வி நுழைவுத்தேர்வான நீட் தேர்வு விதார்த்தின் மகனுக்கு ஒரு தடையாக இருக்கிறது,
விதார்த் கஷ்டப்பட்டு மகனை கோச்சிங் கிளாசில் சேர்க்கிறார்..தனது மகனின் ஆசையை நிறைவேற்றுவதற்காக கடுமையாக போராடும் விதார்த். ஒரு கட்டத்தில் விதார்த்தின் மகன் நீட் தேர்வு எழுத தேர்வு மையம் வட இந்திய மாநிலமான ஜெய்ப்பூருக்கு மகனை அழைத்து செல்கிறார் .
ஜெய்ப்பூரில் கொளுத்தும் வெயிலில் மூலம் ஏற்பட்ட மன அழுத்தம் மற்றும் உடல் சோர்வினால் திடீரென் நடுரோட்டில் இறந்து விடுகிறார்.
தன் அப்பாவின் இறப்புக்கு நீதி கேட்கும் விதார்த்தின் மகன் கிருத்திக் மோகன்அரசின் மீதே வழக்கு தொடுக்க வழக்கறிஞர் ரஹ்மான் துணையாக நின்று, சட்ட ரீதியாக அரசை எதிர்த்து வாதாட முடிவில் விதார்த்தின் கிருத்திக் மோகனுக்கு வெற்றி கிடைத்ததா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘அஞ்சாமை’
இயல்பான நடிப்பில் விவசாயியாக நடிக்கும் விதார்த் அவரது மகனாக நடித்திருக்கும் கிருத்திக் மோகன், ஆரம்பத்தில் நேர்மையான காவல் அதிகாரியாக பின்பு வழக்கறிஞராக மாறி கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ரஹ்மான், விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் வாணி போஜன், விஜய் டிவி ராமர் .தான்யா என நடித்த அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
ஒளிப்பதிவாளர் கார்த்திக்கின் ஒளிப்பதிவும் ,ராகவ் பிரசாத்தின் இசையும் படத்திற்கு பக்க பலம் .
தமிழக மாணவர்கள் நீட் தேர்வு எழுத சென்ற தேர்வு மையத்தில் அவர்கள் பட்ட இன்னல்களையும் நீட் தேர்வை வைத்து திடீரென உருவான கோச்சிங் சென்டர் மையங்கள் நடுத்தர ஏழை மக்களிடம் ஈவு இரக்கமில்லாமல் பணம் சம்பாதித்ததை நீட் தேர்வின் அட்டூழியங்களாக காட்சிகளில் தோலுரிப்பதுடன்
முடிவில் வியாபாரமான கல்வியின் மூலம் மாணவர்கள் மட்டும் இன்றி பெற்றோர்களும் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதை உணர்ச்சிபூர்வமான காட்சிகளை வைத்து கை தட்டலான வசனங்களுடன் அனைவரும் பாராட்டும்படியான படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் இயக்குனர் சுப்புராமன்.
ரேட்டிங் - 3. 5 / 5
留言