நாயகன் மோகன் மனைவி அனுமோல் கல்லூரியில் படித்து வரும் மகள் ஸ்வாதி ஆகியோருடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.
மகள் ஸ்வாதி மீது அதிக அன்போடு இருக்கிறார் மோகன்.
ஒரு நாள் இரவு ஸ்வாதி மோகனுக்கு போன் செய்து விட்டு தற்கொலை செய்து கொள்கிறார்.
மகளின் தற்கொலையால் நிலை குலைந்து போகும் மோகன் மகளின் தற்கொலைக்கான உண்மையான காரணத்தை தேடிச் செல்ல,,,, சமூகத்தில் நடக்கும் அதிர்ச்சிகரமான குற்ற செயல்கள் பற்றியும், அதன் பின்னணி பற்றியும் தெரிய வருகிறது.
அதனை நோக்கி பயணிப்பவர், தனது மகளின் மரணத்திற்கு குற்ற பின்னணியில் இருப்பவர்களின் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார். மகளின் மரணத்திற்கு மட்டுமில்லாமல் சமூகத்திற்காக அவர்களை கூண்டோடு அழிக்க களத்தில் இறங்கும் மோகன், அவர்களுக்கு கொடுத்த தண்டனை என்ன ? குற்ற செயல்களின் பின்னணியில் உள்ள முக்கிய நபர் யார் ?என்பதை சொல்லும் படம்தான் ‘ஹரா’.
நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் மோகன் தன் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரத்தில் கதைக்கேற்றபடி இயல்பாக நடித்துள்ளார் .
மோகனின் மனைவியாக நடித்திருக்கும் அனுமோல், மகளாக நடித்திருக்கும் ஸ்வாதி, வில்லனாக நடித்திருக்கும் சுரேஷ் மேனன், அமைச்சராக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், முதலமைச்சராக நடித்திருக்கு பழ கருப்பையா, அனிதா நாயர் என படத்தில் நடித்திருக்கும் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .
இளம் நாயர்களாக நடித்திருக்கும் அறிமுக நடிகர்கள் சந்தோஷ் பிரபாகர் மற்றும் கெளசிக் ராம் இருவரும், நாயகன் மோகனுக்கு மட்டும் இன்றி படத்திற்கும் பக்கபலமாக பயணித்திருக்கிறார்கள்.
யோகி பாபுவும் ,சிங்கம் புலியும் சிரிக்க வைக்க முயற்சித்திருக்கிறார்கள் .
ஒளிப்பதிவாளர்கள் பிரகாஷ் முனுசாமி, மோகன் குமார் மற்றும் விஜய் ஸ்ரீ ஜி ஆகியோரது ஒளிப்பதிவும், ராஷாந்த் அர்வினின் இசையும் பக்க பலம்.
இயக்குனர் விஜய் ஸ்ரீ ஜி ஆக்ஷன் கலந்த சஸ்பென்ஸ் திரில்லராக கதைக்களம் அமைத்தாலும் அழுத்தமில்லாத திசைமாறும் திரைக்கதையினால் காட்சிகளில் வேகத்தடை,, கதை , திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருந்தால் நீண்ட வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிக்க வந்திருக்கும் மோகனுக்கு அவரது திரில்லர் பட வரிசையில் இந்த படமும் அமைந்திருக்கும் .
ரேட்டிங் - 2.5 / 5
Comentários