கோயம்புத்தூர் மாவட்டத்தில் சாய்பாபா காலனி காவல் நிலையத்தில் நேர்மையான காவல்துறை உயர் அதிகாரியாக வேலை செய்கிறார் நாயகன் விதார்த் .
அவரது மனைவியான நாயகி ஸ்வேதா டோரதி அதிக சத்தம் மற்றும் இருட்டை பார்த்தால் சட்டென்று பயந்து மயக்கமடைந்து விடும் பாதிப்பு உடையவர்.
அவருடைய பயத்தை போக்க வேண்டும் என்பதற்காக புறநகரில் உள்ள பெரிய வீடு ஒன்றில் விதார்த் தன் மனைவியுடன் வாழ்ந்து வருகிறார்.
இந்நேரத்தில் சாய் பாபா காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் இரவு 11 .40 மணியளவில் முகம் தெரியாத ஒரு மர்ம நபர் எதிர்படும் ஆட்களை கடுமையாக தாக்குவதாக புகார்கள் வருகிறது.
அந்த மர்ம மனிதனை தேடி செல்லும் காவலர்கள் சிலரும் கடுமையாக தாக்கப்பட்டு படுகாயம் அடைகிறார்கள்.
மனைவியின் பிரச்சனைக்காக இரவில் அவருடன் வீட்டில் இருக்கும் விதார்த் தகவல் அறிந்ததும் மனைவியை தைரியப்படுத்திவிட்டு அந்த மர்ம மனிதரை பிடிக்க தானே நேரடியாக தனிப்படையுடன் களத்தில் இறங்குகிறார்.
முடிவில் விதார்த் தலைமையிலான தனி படை குழுவினர் அந்த மர்ம மனிதனை பிடித்தார்களா? யார் அந்த மர்ம மனிதன் ? என்பது ஒரு கதை.
இத்துடன் மற்றொரு கதையாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் தன் காதல் மனைவியான சஹானாவுடன் சந்தோசமாக வாழ்ந்து வரும் ஐடி துறையில் பணியாற்றும் விபின் அதே நாள் இரவு 7 மணிக்கு மேல் வேலைக்கு செல்கிறார்.
இரவு 8 மணியளவில் அவரது மனைவி சஹானா வீட்டில் இருக்கும் மருத்துவ அறிக்கை ஒன்றை பார்த்துவிட்டு, அது குறித்து மருத்துவர் கஜராஜிடம் மருத்துவ அறிக்கையை விசாரிக்கிறார்.
அவர் சொல்லும் தகவல்களை கேட்டு அதிர்ச்சியடைந்து அவசர அவசரமாக வீட்டுக்கு வருகிறார்.
அவரை மருத்துவமனையில் இருந்து அவருக்கு தெரியாமல் பின்தொடர்ந்து கண்காணிக்கும் அவரது கணவர் விபின் சஹானாவின் பின்னால் பதற்றத்துடன் வீட்டுக்குள் நுழைகிறார்.
பதட்டத்துடன் வீட்டுக்குள் நுழைந்த விபினால் சஹானாவுக்கு என்ன நடந்தது ?என்பது மற்றொரு கதை.
ஒரே இரவில் வெவ்வேறு நேரங்களில் நடைபெறும் இந்த இரண்டு கதைகளும் ஒரு கட்டத்தில் திரைக்கதையில் ஒன்றாக இணைந்து எதிர்பாராத திருப்பங்களை கொண்ட படம்தான் ‘லாந்தர்’.
A C P யாக நேர்மையான காவல் அதிகாரியாக நடிக்கும் விதார்த் ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான நடிப்பில் மனித நேயத்துடன் பணியாற்றும் காவல் அதிகாரியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகியாக நடித்திருக்கும் ஸ்வேதா டோரத்தி, இளம் தம்பதிகளாக நடித்திருக்கும் விபின் மற்றும் சஹானா, பசுபதிராஜ், கஜராஜ், மீனா புஷ்பராஜ், மதன் அர்ஜுனன் என படத்தில் நடித்திருப்பவர்கள் கதையுடன் இணைந்து சிறப்பாக நடித்துள்ளனர்
ஒளிப்பதிவாளர் ஞான சவும்தார் ஒளிப்பதிவும் , எம் எஸ் பிரவீன் இசையும் படத்திற்கு பக்க பலம் .
ஒரு இரவில் வெவ்வேறு நேரங்களில் நடக்கும் இரண்டு கதைகளை மையமாக வைத்து , விறு விறுப்பான திரைக்கதையுடன் கதையில் எந்த லாஜிக்கும் பார்க்காமல் வேகமாக பயணிக்கும் காட்சிகளுடன் சஸ்பென்ஸ் திரில்லர் கலந்த க்ரைம் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ஷாஜி சலீம் .
ரேட்டிங் - 3 / 5
Comments