cast :
Aju Varghese,Anarkali Marikar,Gokul Suresh,Ganesh Kumar
Crew
Directed by Arun Chandu, Produced by Ajith Vinayaka Films, Executive Producer : Krishand, Written by Arun Chandu - Siva Sai
Cinematography by Surjith S Pai, Music by Sankar Sharma, Edited by Ceejay Achu, VFX : Merak, iCo-Edited by Aravind Manmadhan, Sound Design : Sankaran AS, KC Sidharthan, Sound Mix: Vishnu Sujathan, Subtitles : Vivek Ranjith (BreakBorders)
Production Controller : Sajeev Chandiroor, Lyrics : Manu Manjith, Rahul Menon (English rap), Art Director : M BawaCostumes : Bucy Baby John, Makeup : Ronex Xaviour
2040 -ம் காலக்கட்டத்தில் மழை வெள்ளத்தில் நிலப்பரப்புகள் மூழ்குவதோடு, ஏலியன்களின் படையெடுப்பு, அரசின் அடக்குமுறை, பெட்ரோல் வாகனங்களுக்கு பதிலாக மின்சார வாகனங்களை பயன்படுத்தும் கட்டாயம், உள்ளிட்டவைகளால் அச்சத்தோடு வாழும் மக்களை, கண்காணிக்க ஒவ்வொரு வீட்டிலும் அரசின் கருவி ஒன்று பொருத்தப்பட, அதை காவல்துறையும் கண்காணிக்கிறது.
இப்படி ஒரு காலக்கட்டத்தில், ஏலியனை வேட்டையாடிய முன்னாள் ராணுவ வீரர் கணேஷ் குமார் இயற்கை அச்சுறுத்தல்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதத்தில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு பாதுகாப்பு உபகரணங்களுடன் கூடிய கட்டிடத்தில் ராகவன் என்ற ஒரு ரோபோவை தனக்கு உதவிக்காக வைத்துக் கொண்டு வாழ்ந்து வருகிறார்.
இவர்களுடன் உதவியாளர்களாக கோகுல் சுரேஷ் மற்றும் அஜு வர்க்கீஸ் இருக்கிறார்கள்.
ராணுவ வீரர் கணேஷ் குமார் பற்றி ஆவணப்படம் எடுப்பதற்காக தொலைக்காட்சி நிறுவனம் சந்திக்கிறது. அப்போது தனது வாழ்க்கைப் பற்றியும், தான் எதிர்கொண்ட ஏலியன் சம்பவங்கள் பற்றியும் கணேஷ் குமாரும், அவரது உதவியாளர்களும் விவரிக்கிறார்கள்.
இந்நிலையில் ஒருநாள் இவர்கள் இருக்கும் இடத்திற்கு பெண் ஏலியனான அனார்கலி மரிகார் வருகிறார் அவர் வேறு யாருமில்லை வேற்று கிரகத்திலிருந்து வந்த ஒரு ஏலியன் இவரை பார்த்ததும் கோகுல் சுரேஷ்க்கு காதல் மலர்கிறது .
முடிவில் கோகுல் சுரேஷ்- பெண் ஏலியனான அனார்கலி மரிகார் இருவரது காதல் வெற்றி பெற்றதா ?
ஏலியன் அனார்கலி மரிகார் இறுதியில் தனது கிரகஹத்திற்கு சென்றாரா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘ககனாச்சாரி’ (மலையாளம்)
மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் மகன் கோகுல் சுரேஷ், அஜு வர்கீஸ், கணேஷ் குமார் மற்றும் ஏலியனாக நடித்திருக்கும் அனார்கலி மரிகார் ஆகியோர் கதையின் முதன்மை வேடத்தில் நடித்திருக்கிறார்கள்.
இதில், அனார்கலி மரிகார் வசனம் பேசாமல் பார்வையிலேயே பலவித உணர்வுகளை வெளிப்படுத்தி நடித்திருக்கிறார். மற்ற மூவருமே மேடையில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.
இவர்கள் பேசுவதில் பல விசயங்கள் எதிர்காலத்தின் முக்கியமானவைகளாக இருந்தாலும், அதை முழுக்க முழுக்க நகைச்சுவை பாணியில் சொல்லி சிரிக்க வைக்கிறார்கள்
சங்கர் சர்மாவின் இசையில் பின்னணி இசை கதைக்கு ஏற்றவாறு இருக்கிறது.
ஒளிப்பதிவாளர் சுர்ஜித் எஸ்.பய் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்க்கிறது.
அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சியாலும், காலநிலை மாற்றத்தினாலும் பூமியும், அதில் வாழும் மக்கள் இனம் எதிர்காலத்தில் எத்தகைய அச்சுறுத்தல்களை சந்திக்கப்போகிறது, என்ற கற்பனை, படம் பார்ப்பவர்களுக்கு சற்று பயத்தை ஏற்படுத்தும் கற்பனை கதையை நகைச்சுவை கலந்து புதுமையான முறையில் சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் அருண் சந்து.
இப்படம் மலையாளத்தில் கடந்த ஜூன் 21ஆம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்றிருப்பதால் இப்படத்தை இந்தியா முழுவதும் ஜூலை 5 ஆம் தேதி ஜெமினி பிலிம்ஸ் சர்க்யூட் நிறுவனம் வெளியிடுகிறது.
ரேட்டிங் ; 3 / 5
Comments