top of page

'ராயன்' - விமர்சனம் 2.5 / 5

mediatalks001

சிறு வயதில் தாய், தந்தை இல்லாத தனுஷ், இரண்டு தம்பிகளான சந்தீப், காளிதாஸ் மற்றும் தங்கை துஷாரா ஆகியோர் அன்போடு தனுஷின் கட்டுப்பாட்டில் வளர்ந்து வருகிறார்கள் .அவர் வசிக்கும் இடத்தை சுற்றி ரவுடிகளின் சாம்ராஜ்யமாக இருப்பதால் அதில் அவர் ஈடுபடக்கூடிய சூழல் இருந்தாலும், அவற்றில் இருந்து ஒதுங்கியிருப்பதோடு, தனது தம்பிகளையும் அந்த பக்கம் செல்லவிடாமல் பாஸ்புட் உணவகம் நடத்திக் கொண்டு தம்பிகள், தங்கையுடன் வாழ்ந்து வருகிறார் தனுஷ்.


சென்னையில் மிக பெரிய தாத்தாக்களாக சரவணன் மற்றும் எஸ்.ஜே.சூர்யா செயல்பட்டு வருகிறார்கள்.


இவர்கள் இருவரும் எந்த மோதலும் இல்லாமல் சமரசத்தில் இருக்கிறார்கள். இந்நிலையில் போலீஸ் அதிகாரியாக வரும் பிரகாஷ் ராஜ், இருவருக்கும் இடையே சண்டை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதன்படி மோதல் நடக்கிறது.

இதில் எதிர்பாராதவிதமாக தனுஷின் தம்பி சந்தீப் கிஷன் மாட்டிக் கொள்கிறார்.


இந்த மோதலில் சரவணனின் மகன் கொலை செய்யப்பட, கொலை வெறியில் இருக்கும் சரவணன் சந்தீப்பை வீட்டுக்கு அனுப்ப தனுஷை மிரட்டுகிறார் .


ஆனால் தனுஷோ தன் தம்பிகளோடு சேர்ந்து சரவணன் வீட்டுக்கு சென்று சரவணனை வெட்டி சாய்க்கிறார்.


சரவணனை கொலை செய்தது யார் என உயர் அதிகாரியான பிரகாஷ் ராஜ் குழப்பத்தில் இருக்க ,,,,மற்றொரு பக்கம் எஸ்.ஜே.சூர்யாவின் ஆட்களும் கொலை செய்தது யார் என தேடுகிறார்கள்.


முடிவில் தனுஷை எஸ்.ஜே.சூர்யா கண்டுபிடித்தாரா ? தனுஷின் வாழ்க்கை என்ன ஆனது? அவரது தம்பிகள் மற்றும் தங்கையின் வாழ்க்கை அவர் நினைத்தது போல் அமைந்ததா ? இல்லையா ? என்பதை ரத்த வாடையுடன் சொல்லும் படம்தான் 'ராயன்'



ராயன் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தனுஷ் தம்பிகள் மற்றும் தங்கை மீது பாசம் காட்டுவது, தம்பிக்கு ஆபத்து என்றவுடன் ஆக்ரோஷ நாயகனாக ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பில் இயல்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .


தனுஷின் தம்பிகளாக நடித்திருக்கும் சந்தீப் கிஷன் மற்றும் காளிதாஸ் ஜெயராம், வயதுக்கு ஏற்ப துள்ளல் நடிப்பை கொடுத்திருக்கிறார்கள்.

தனுஷின் தங்கையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் தனது அண்ணனுக்கு நடந்த துரோகத்திற்கு எதிராக எதையும் செய்ய துணியும் கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்து இருக்கிறார்.


வில்லனாக நடித்திருக்கும் எஸ்.ஜே.சூர்யா , செல்வராகவன், பிரகாஷ்ராஜ், சரவணன், திலீபன், அபர்ணா பாலமுரளி, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் சிறப்பாக நடித்துள்ளனர் .


ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் , ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் .


இயக்குநராக முதல் படத்தில் கொடுத்த மிகப்பெரிய வெற்றியால் இரண்டாவது இயக்கம் 50 வது படம் என்பதால் ஒட்டு மொத்த ரசிகர்களை மட்டுமே மனதில் வைத்து இரண்டாம் பாதிக்கு பின் படம் பார்ப்பவர்கள் முகம் சுழிக்குமளவில் ரத்தமும் சதையும் கலந்த படமாக படத்தை இயக்கியுள்ளார் தனுஷ் .


ரேட்டிங் - 2.5 / 5




Comments


©2020 by MediaTalks. 

bottom of page