திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் சேத்தனின் தெருக்கூத்து ஜமாவில் பெண் வேடமான திரவுபதி வேடம் அணிந்து வருபவர் பாரி இளவழகன்.
அவருக்கு ஒரு நாளாவது ராஜபார்ட்டான அர்ஜூனன்வேடம் அணிய வேண்டும் என்ற தீராத ஆசை.
ஆனால் பாரி இளவழகன் அர்ஜூனன் வேடம் அணிவதற்கு கூத்து வாத்தியார் சேத்தன் எதிர்ப்பு தெரிவித்து அவரது வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார்.
இந்நேரத்தில் பாரி இளவழகனுக்கும் சேத்தனின் மகளான அம்மு அபிராமிக்கும் சின்ன வயதிலேயே காதல் இருந்து வருகிறது.
இந்நிலையில் அம்மு அபிராமியை பெண் கேட்டு சேத்தன் வீட்டுக்கு தனது தாயுடன் செல்கிறார் பாரி இளவழகன்.
இதனால் ஆத்திரமடையும் சேத்தன் பெண் தர மறுத்ததுடன் அவரை அவமானப்படுத்தி அனுப்புகிறார் .
ஒரு கட்டத்தில் சேத்தனின் எதிர்ப்பையும் மீறி எதிர்காலத்தில் தான் இருக்கும் தெருக்கூத்து ஜமாவை வாத்தியாராக தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும் என்று விரும்புகிறார் பாரி இளவழகன் . தொடர்ந்து வாத்தியாரான சேத்தன், அவரது வளர்ச்சியை தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார்.
அனைத்தையும் தாங்கிக்கொண்டு தொடர்ந்து சேத்தனின் ஜமாவில் பயணிக்கும் பாரி இளவழகன் தான் நேசிக்கும் கலைக்காக வாழ்க்கையில் தன் தாயின் இறப்புடன் பல இழப்புகளை சந்தித்து பல அவமானங்களை எதிர்கொள்கிறார்.
முடிவில் ஜமாவின் வாத்தியாராகி அர்ஜூனன் வேடம் போட ஆசைப்பட்ட பாரி இளவழகனின் கனவு நிறைவேறியதா ?
சேத்தனின் எதிர்ப்பை மீறி அம்மு அபிராமியை பாரி இளவழகன் திருமணம் செய்தாரா? இல்லையா ? என்பதை கிராமங்களில் இன்றும் நடைபெற்று கொண்டிருக்கும் தெருக்கூத்து ஜமாவின் இயல்பான வாழ்வியலை சொல்லும் படம்தான் 'ஜமா'
கதையின் நாயகனாக கல்யாணம் என்ற கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கும் பாரி இளவழகன் தெருக்கூத்தில் பெண் வேடம் போட்டு ஆடும் போது உடல்மொழியில் பெண் நளினத்துடன் சிறு சிறு அசைவுகளை கூட மிக நுணுக்கமாக இயல்பாக மிக சிறப்பாக நடித்திருக்கும் பாரி இளவழகன்,,,, படத்தை சிறப்பாக இயக்கியத்துடன் சிறந்த நடிகருக்கான விருதுக்கும் தகுதியானவர் என்பதை நிரூபித்துள்ளார் .
தெருக்கூத்து ஜமாவின் வாத்தியாராக தாண்டவம் என்ற கதாபாத்திரத்தில் மிரட்டலாக நடித்திருக்கும் சேத்தன், துணிச்சலான பெண்ணாக நாயகியாக நடித்திருக்கும் அம்மு அபிராமி , பாரி இளவழகனின் தந்தையாக சிறப்பான நடிப்பில் ஸ்ரீகிருஷ்ண தயாள், பாரியின் அம்மாவாக நடித்திருக்கும் மணிமேகலை, பூனை என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் வசந்த் மாரிமுத்து உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் தங்கள் கதாபாத்திரத்தை நடிப்பில் இயல்பாக நடித்துள்ளனர் .
படத்திற்கு பக்க பலமாக இளையராஜாவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் .
ஒளிப்பதிவாளர் கோபால் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு படத்திற்கு மற்றொரு பலம் .
தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்வியலை அழுத்தமான திரைக்கதையுடன் தெருக்கூத்து கலையை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் விதமாக எதார்த்தம் கலந்த இயல்பான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் பாரி இளவழகன்
ரேட்டிங் - 4 / 5
Comentários