இரண்டாம் உலகப்போருடன் 1943 ஆம் ஆண்டு ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவில் சுதந்திர போராட்டம் நடந்து கொண்டிருக்கும் போது காசிமேட்டில் வாழும் மீனவரான நாயகன் யோகி பாபு, ஆங்கிலேயர்களிடம் கைதியாக பிடிபட்டு இருக்கும் தனது தம்பியை காப்பாற்ற பாட்டியுடன் செல்கிறார்.
அப்போது ஜப்பான் நாடு சென்னையில் கடற்கரையோரம் உள்ள வெள்ளையர்களின் முகாமில் குண்டு வீசப்போகிறார்கள் என்ற தகவல் பரவுகிறது.
முகாமில் உள்ள மக்கள் பதற்றத்தில் தப்பியோடுகின்றனர். முகாமில் தம்பியை பார்க்கும் யோகி பாபு அங்கிருந்து அவரை தப்பித்து வர சொல்லி விட்டு அவரது பாட்டியுடன் கரையில் தான் கொண்டு வந்த படகில் ஏறிக் கொள்கிறார்.தப்பித்து வரும் தம்பியை மீண்டும் போலீஸ் பிடித்துக் கொள்கிறது.
யோகி பாபு படகில் ஏறிக்கொள்ளும்போது பிராமணரான சின்னி ஜெயந்த், நூலகரான எம்.எஸ்.பாஸ்கர்,வட இந்தியரான சாம்ஸ், மலையாளியான சா ரா, சின்னி ஜெயந்தின் மகளான கவுரி கிஷன், கர்ப்பிணியான மதுமிதா மற்றும் அவரது மகன் ஏறிக் கொள்கிறார்கள்.
கடலுக்குள் சென்றால் தப்பித்து விடலாம் என்று படகை கடலுக்குள் கொண்டு செல்கிறார் யோகி பாபு. இந்நேரத்தில் நடுவழியில் ஆங்கிலேய போலீஸ் அதிகாரியும் அந்த படகில் ஏறி கொள்கிறார்அதிக எடை தாங்காத போட்டில் 10 பேரில் 7 பேர் மட்டுமே இருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில் ஆங்கிலேய போலீஸ் அதிகாரிக்கு தீவிரவாதி ஒருவன் இந்த படகில் பயணிக்கிறான் என்கிற தகவல் கிடைக்கிறது ,,,அதே நேரத்தில் மிக பெரிய சுறா ஒன்று படகின் அருகே வருகிறது .
முடிவில் படகில் பயணிக்கும் தீவிரவாதியை ஆங்கிலேய போலீஸ் அதிகாரி கண்டுபிடித்தாரா ? சுறாவை பார்த்து அலறிய அனைவரும் அதனிடம் இருந்து தப்பித்தார்களா ? என்பதை சொல்லும் படம்தான் 'போட்'
கதையின் நாயகனாக குமரன் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் யோகி பாபு இது என் ஊர், என் போட் என்று சொல்லும்போது இன்று சென்னையை பூர்விகமாக வாழும் மனிதனின் மனதாக பிரதிபலித்து இருக்கிறார்.
இவருக்கு துணையாக வரும் பாட்டி, பிராமின் பெண்ணாக வரும் கவுரி கிஷன் ,ஆச்சாரம் பற்றி பேசும் சின்னி ஜெயந்த், முகமது ஜின்னா பற்றி பேசும் சா ரா,எம்.எஸ்.பாஸ்கர், மதுமிதா, ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள்.
ஜிப்ரான் இசையில் பாடல்களும் . பின்னணி இசையும் படத்திற்கு பலம்.
ஒளிப்பதிவாளர் மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
படகில் பயணிக்கும் மனிதர்களின் உணர்வுகளை மட்டுமே மையமாக வைத்து மற்ற உயிரினங்களிடமும் அன்பாக இருக்க வேண்டும் என்கிற கருத்தை அழுத்தமாக சொல்லி ,,, அரசியல் கலந்த வசனங்களுடன் படத்தை இயக்கியிருக்கிறார் இயக்குனர் சிம்பு தேவன்.
ரேட்டிங் - 3.5 / 5
ความคิดเห็น