இந்திய ராணுவத்தின் ரகசிய ஏஜெண்ட்டாக இருக்கும் விஜய் ஆண்டனி அமைச்சர் ஏ.எல்.அழகப்பன் மகனை கொலை செய்துவிட்டு தப்பித்து விடுகிறார் .
தன்னுடன் வேலை செய்யும் நண்பனின் தங்கையை காதலித்து திருமணம் செய்துக்கொள்கிறார்.
அவரை கொலை செய்ய துரத்தும் முன்னாள் எதிரியின் தாக்குதலில் மனைவியோடு அவரும் இறந்து விட்டார் என்று நம்பப்படுகிறது.
அதன் பின் தலைமறைவாகி உயர் அதிகாரியான சரத்குமாரின் கீழ் ரகசிய ஏஜெண்ட்டாக நிழல் உலகில் வலம் வரும் விஜய் ஆண்டனி காதலி தியாவை திருமணம் செய்து கொள்கிறார்.
ஒரு மழை நாளில் தம்பதிகள் வெளியே மகிழ்ச்சியாக செல்லும் போது அமைச்சர் ஏ.எல்.அழகப்பன் ஆட்களின் தாக்குதலில் மனைவி உயிரிழக்கிறார். ஆனால், உயிருக்கு போராடும் அவரை காப்பாற்றும் நண்பர் சரத்குமார் , மீண்டும் அவரது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று கருதி, இறந்தவர் இறந்ததாகவே இருக்கட்டும் என்று நினைத்து, அவரை யாருக்கும் தெரியாமல் அந்தமானுக்கு அழைத்துச் செல்கிறார்.
அந்தமானில் அடையாளமில்லாமல் வாழப் பழகும் விஜய் ஆண்டனிக்கு நாயகி மேகா ஆகாஷ் வளர்க்கும் நாய்குட்டியும், ப்ருத்வி அம்பார் நட்பும் கிடைக்கிறது.
பர்மா உணவகம் நடத்தும் சரண்யா பொன்வண்ணனின் மகனாக,,,, கிடைத்த வேலையை செய்து கொண்டு ஜாலியாக இருப்பவர் ப்ருத்வி அம்பார் .
இந்நிலையில் விஜய் ஆண்டனிக்கு அந்தமான் நகர தாதாவான வட்டிக்கு கடன் கொடுக்கும் தனஞ்செயா மற்றும் காவல்துறை அதிகாரியான முரளி சர்மாவினால் பிரச்னை ஆரம்பிக்கிறது.
முடிவில் இருரவது பிரச்சனைகளில் இருந்து விஜய் ஆண்டனி விடுபட்டாரா?
தன் அடையாளத்தை மறைத்து அவர்களை எதிர்க்க விஜய் ஆண்டனி சந்தித்த போராட்டங்கள் என்ன ? என்பதை விஜய் ஆண்டனியின் முந்தைய படத்தின் தொடர்ச்சியாக சொல்வதே ‘மழை பிடிக்காத மனிதன்’.
கதையின் நாயகனாக விஜய் ஆண்டனி ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான ஆக்ஷனில் அதிரடி நாயகனாக மாஸ் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் நிற்கிறார் .
நாயகியாக நடித்திருக்கும் மேகா ஆகாஷ் ,வில்லனாக நடித்திருக்கும் டாலி தனஞ்செயா, போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் முரளி சர்மா ,சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் சரத்குமார் மற்றும் சத்யராஜ் ,சரண்யா பொன்வண்ணன், தலைவாசல் விஜய், சுரேந்தர் தாக்கூர் ஆகியோரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம் .
விஜய் ஆண்டனி, அச்சுதமணி மற்றும் ராய் ஆகியோரின் இசையும் ,விஜய் மில்டனின் ஒளிப்பதிவும், பிரவீன் கே.எல்-இன் படத்தொகுப்பும் சிறப்பாக இருக்கின்றது .
ஆரம்பத்தில் யாருடைய ஆதரவில்லாமல் அடையாளம் இல்லாமல் அந்தமானில் வாழும் ரகசிய ஏஜெண்ட்டாக இருக்கும் அதிகாரி சந்திக்கும் சிக்கல்களையும், அவரை எதிர்க்கும் வில்லன்களையும் எதிர்த்து மீண்டும் அங்கிருந்து எப்படி தப்பித்துச் செல்வதை மையமாக கொண்ட கதையுடன் அழுத்தமில்லாத திரைக்கதை அமைப்பில் ஆக்க்ஷன் கலந்த படமாக ஒளிப்பதிவு செய்து இயக்கியுள்ளார் விஜய் மில்டன்.
ரேட்டிங் - 3 / 5
Comentários