பியானோ வாசிப்பதில் திறமையான இசைக்கலைஞர் பார்வையில்லாத பிரஷாந்த்.
லண்டனில் நடைபெறும் இசைப் போட்டியில் பங்கேற்று மிகப் பெரிய பியானோ கலைஞனாக வேண்டும் என்பது அவரது லட்சியம்.
அதற்காக மற்றவர்களுக்கு பியானோ வகுப்பு எடுத்து அதற்கான பணம் சேர்ந்தாலும் ஒரு ஓட்டலில் உள்ள மதுபானக்கூடம் ஒன்றில் பியானோ வாசிக்கும்வேலை அவருக்கு கிடைக்கிறது.
ஓட்டலில் பியானோ வாசிக்கும் போது நடிகர் காத்திக்கின் நட்பு கிடைக்க,,, கார்த்திக் அவருடைய மனைவி சிம்ரனின் திருமண நாள் அன்று சர்ப்ரைஸ் செய்ய சிறு இசை நிகழ்ச்சி நடத்த பிராசாந்தை வீட்டிற்கு அழைக்கிறார்.
அவரது வீட்டிற்கு சென்றதும் அங்கு கார்த்திக் இறந்து கிடக்க,,,,, சமுத்திரக்கனி, மற்றும் சிம்ரனும், இணைந்து இந்த கொலையை செய்ய, இதை பிரசாந்த் பார்க்கிறார்,
முடிவில் அதிர்ச்சியான சூழ்நிலையில் பார்வையற்றவராக இருக்கும் பிரஷாந்த் கண் முன் நடக்கும் சம்பவங்களால் அவருக்கு ஏற்பட்ட சிக்கல்கள் என்ன ?
அதிலிருந்து அவர் தப்பித்தாரா? இல்லையா? என்பதை காட்சிக்கு காட்சி திருப்பங்களோடு திரில்லருடன் பதட்டமும், சுவாரஸ்யமும் நிறைந்த படம்தான் ‘அந்தகன்’.
கதையின் நாயகனாக பிரஷாந்த் பார்வையற்றவர் கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடிப்பில் எதிர்பார்க்காத சம்பவங்கள் தன் கண் முன் நடப்பதை பார்த்து பதற்றமடையும் பிரஷாந்த், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் இருப்பது, தன்னை கொலை செய்ய வருபவரிடம் இருந்து தப்பிப்பது, பார்வையற்ற தன்னை சுற்றி இருக்கும் ஆபத்துகளை நினைத்து பயப்படுவது என அனைத்து காட்சிகளிலும் அனுபவ நடிப்பால் உடல் மொழியில் சிறு சிறு அசைவுகளை கூட மிக நுணுக்கமாக இயல்பான நடிப்பில் தியேட்டரில் கைதட்டல் பெறுவதுடன்ரசிகர்களை தன் வசப்படுத்துமளவில் பலமான திரைக்கதை அமைப்பினால் இப் படத்தின் மூலம் கோலிவுட்டின் டாப் இடத்திற்கு பிரஷாந்த் வருவது நிச்சயமான உறுதி .
கதையின் முக்கிய கதாபாத்திரத்தில் பிரமாதமாக நடித்திருக்கும் சிம்ரன்,பிரஷாந்தின் காதலியாக நடிக்கும் பிரியா ஆனந்த்,போலீஸ் இன்ஸ்பெக்டர் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரக்கனி, . அவரது மனைவியாக நடித்திருக்கும் வனிதா விஜயகுமார், மனோபாலா
நடிகர் கார்த்திக்காகவே நடித்திருக்கும் நவரச நாயகன் கார்த்திக், பூவையார், ஊர்வசி, யோகி பாபு, இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார், ஆதேஷ் பாலா ,பெசன்ட் ரவி ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களும் , பின்னணி இசையும் படத்தின் பக்க பலம் !
ஒளிப்பதிவாளர் ரவி யாதவின் ஒளிப்பதிவும் , படத்தொகுப்பாளர் சதீஷ் சூர்யாவின் படத்தொகுப்பும் படத்திற்கு சிறப்பு !
பாலிவுட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அந்தாதுன்’ படத்தின் ரீமேக் இப் படத்தின் கதை என்றாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றபடி சில மாற்றங்களுடன் பார்வையற்றவராக பிரஷாந்த் தோன்றிய சில நிமிடங்களில்
பதட்டம் நிறைந்த சுவாரஸ்யமான திருப்பத்துடன் அடுத்தடுத்த காட்சிகளை எதிர்பார்க்கும் திரைக்கதையுடன் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து பிரஷாந்த் ரசிகர்கள் முதல் படம் பார்க்கும் அனைவரும் திரில்லர் அனுபவத்தை ரசிக்கும்படி சஸ்பென்ஸ் கலந்த திரில்லர் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் தியாகராஜன்.
ரேட்டிங் - 4 / 5
Comments