1998 ஆம் வருடத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள கருங்குளம் கிராமத்தில் வறுமை சூழ்ந்த குடும்பத்தில் தந்தையை இழந்த சிறுவனான பொன் வேல் தாய் ஜானகி மற்றும் , சகோதரி திவ்யா துரைசாமியுடன் வாழ்ந்து வரும் நிலையில் அங்குள்ள பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறான்.
பள்ளி படிப்பில் முதல் மாணவனாக திகழும் பொன்வேல் பள்ளி வார விடுமுறை நாட்களில் குடும்ப வறுமை காரணமாக தன் தாய் வாங்கிய கடனை அடைப்பதற்காக பக்கத்தில் உள்ள கிராமங்களில் வாழைத்தார்களை அறுத்து அதை லாரியில் ஏற்றும் பணியை தன் தாயுடனும், சகோதரியுடனும் செய்து வருகிறான்.
விடுமுறை நாட்களில் பொன்வேலுடன் பள்ளியில் ஒன்றாக படிக்கும் ராகுலும் இந்த வேலையை செய்தாலும் இருவரும் அதில் இருந்து எப்போது விடுதலை கிடைக்கும் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறார்கள் .
இந்நிலையில் தனது பள்ளியில் நடக்கும் ஆண்டு விழாவில் நடனம் ஆடுவதற்காக அவனது பள்ளி ஆசிரியை நிகிலா விமல் பொன்வேலை தேர்ந்தெடுக்கிறார் .
ஆனாலும் பொன்வேலின் தாயார் விடுமுறை நாளான அன்று அவனை வாழைத் தார் சுமக்க அவனது சகோதரியுடன் அனுப்பி விடுகிறார்.
வாழைத்தார் சுமப்பதற்காக லாரியில் ஏறிய பொன்வேலை சகோதரி திவ்யா துரைசாமி பள்ளி ஆண்டு விழாவில் நடனத்திற்கான ஒத்திகை நடக்க இருப்பதால் அவன் விரும்பியபடி பொன்வேலை லாரியிலிருந்து கீழே இறக்கி பள்ளிக்கு அனுப்பி விடுகிறாள்.
அவன் பள்ளிக்குச் சென்று அந்த தனது ஆசிரியையுடன் சேர்ந்து ஆண்டு விழாவில் எப்படி நடனம் ஆட வேண்டும் என்பதைக் கற்றுக் கொள்கிறான். .
பள்ளியில் நடன ஒத்திகை மதியமே முடிந்து விடும் நிலையில் பசியினால் வீட்டிற்கு வரும் பொன்வேல்,,, தாயிக்கு தெரியாமல் சாப்பிடும் நேரத்தில் வாழை அறுக்க வேலைக்கு செல்லாமல் பள்ளிக்கு சென்றதை கண்டித்து ஆத்திரத்தில் கோபமடைய ,,, தாய்க்கு பயந்த பொன்வேல் இரவு வயக்காட்டில் படுத்து விட்டு விடிந்தவுடன் தன் வீட்டிற்கு வரும்போது மிக பெரிய கோர விபத்தினால் கிராம மக்கள் அனைவரும் துயர சம்பவத்தில் அழுது கொண்டிருக்கின்றனர்.
முடிவில் கிராம மக்களை மிகப்பெரிய துயரத்தில் ஆழ்த்திய அந்த துயர சம்பவம் என்ன ? என்பதை சொல்லும் படம்தான் 'வாழை'
கதையின் நாயகன் சிவனைந்தனாக நடித்திருக்கும் சிறுவன் பொன்வேல்,கதாபாத்திரத்துடன் இணைந்து உடல் மொழியில் இயல்பான நடிப்பில் ரசிகர்களின் பாராட்டை பெறுகிறான் .
சிவனைந்தனின் நண்பனாக சேகர் என்ற வேடத்தில் நடித்திருக்கும் ராகுல்,,சிவனைந்தனின் அம்மாவாக நடித்திருக்கும் ஜானகி, அக்காவாக நடித்திருக்கும் திவ்யா துரைசாமி, கலையரசன்,ஆசிரியையாக நடித்திருக்கும் நிகிலா விமல் , பத்மன் ,ஜெ சதீஷ்குமார் என படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் கதாபாத்திரங்களாக வாழ்ந்துள்ளனர் .
சந்தோஷ் நாராயணின் இசையில் பாடல்களுடன் ,கதையோடு பயணிக்கும் பின்னணி இசை அசத்தல் .
தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .
தன் சுய சரிதையை,,,, வலி மிகுந்த கடினமான வாழ்க்கை பயணத்துடன் வறுமையால் அவதிப்படும் விவசாய மக்களுக்கு நேர்ந்த துயர சம்பவத்தை அடிப்படையாக கொண்ட கதையுடன் மண் மணம் மாறாத கிராம மக்களின் இயல்பான வாழ்வியல் அழகுடன் திரைக்கதையில் காட்சிகள் ஒவ்வொன்றையும் மிக நேர்த்தியாக செதுக்கி உருவாக்கியிருப்பதுடன் ,,,,மத்திய ,,, மாநில விருதுகளுக்கு தகுதியுள்ள சிறந்த படமாக செதுக்கியுள்ளார் இயக்குநர் மாரி செல்வராஜ்.
ரேட்டிங் - 4 / 5
Comments