top of page

'சாலா ' - விமர்சனம் !

1983ம் ஆண்டில் வட சென்னையிலுள்ள ராயபுரத்தில் மதுக்கடையை நடத்தும் அருள்தாஸ் மற்றும் சத்யா இவர்களுக்குள் உள்ள விரோதத்தில் மதுக்கடையில் பார்வதி பாரை குத்தகைக்கு எடுத்து நடத்தும் பிரச்சனையில் சத்யா கொல்லப்பட, கோஷ்டி மோதலில் அருள்தாஸின் உயிரை காப்பாற்றும் சிறுவனான தீரனை தன் மகனாக பாவித்து தத்தெடுத்து வளர்கிறார்.


இப் பிரச்சனையால் பார்வதி பார் மூடப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது.


இந்நிலையில் சத்யாவின் உறவினர் சார்லஸ் வினோத் அருள்தாஸை வெட்டி சாய்த்து தன் கனவான பார்வதி பாரை மீண்டும் எடுத்து நடத்த வேண்டிய சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.


அதே போல் வாலிபனான தீரனும் வளர்ந்து பார்வதி பாரை வழக்கு முடிந்தவுடன் அருள்தாஸிற்கு குத்தகைக்கு எடுத்து கொடுத்து நன்றி கடன் செலுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.


இந்நிலையில், அனாதை குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைக்கும் பள்ளி ஆசிரியை சமூக ஆர்வலர் ரேஷ்மா வெங்கடேஷ் பள்ளிகள், கோயில்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு அருகில் உள்ள மதுக்கடைகளை மூட தீவிரமாக எதிர்த்து குரல் கொடுத்து போராடுகிறார்.


தீரன் நடத்தும் மதுக்கடைக்கு முன் ரேஷ்மா வெங்கடேஷ் மதுவுக்கு எதிரான போராட்டம் நடத்துகிறார். ஆரம்பத்தில் ஆத்திரப்படும் தீரன் ரேஷ்மா வெங்கடேஷின் சமூக அக்கறையை கண்டு வியந்து காதலிக்க தொடங்குகிறார்.


மற்றொரு பக்கம் 23 ஆண்டுகளாக நடந்த வழக்கில் மூடப்பட்ட பார்வதி பார் மீண்டும் குத்தகைக்கு விடலாம் என்று நீதிமன்ற தீர்ப்பு வருகிறது.


பார்வதி பாரை மீண்டும் கைப்பற்றுகிறார் அருள்தாஸ். ஒரு கட்டத்தில் தங்கதுரை பணம் சம்பாதிக்க சட்டவிரோத முறையில் மதுவை தயாரித்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மது கடைகளுக்கும் விற்பனை செய்கிறார் .


மற்றொரு பக்கம் அருள்தாஸும் ,,, சார்லஸ் வினோத்தும் நேரடியாக மோத வேண்டிய சூழ்நிலை உருவாகிறது .


முடிவில் சார்லஸ் வினோத் தன் திட்டப்படி அருள்தாஸை வெட்டி சாய்த்தாரா ? 23 ஆண்டுகளின் கனவான பார்வதி பாரை சார்லஸ் வினோத் கைப்பற்றினாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'சாலா '



ஆறடி உயரத்தில் கம்பீரமான உடலமைப்பில் நாயகனாக அறிமுகமாகியிருக்கும் தீரன் ஆக்‌ஷன் ஹீரோவுக்கான அனைத்து தகுதிகளுடன் நடனம் மற்றும் சண்டைக்காட்சிகளில் அதிரடி நாயகனாக அசத்துகிறார்.


நாயகியாக நடித்திருக்கும் ரேஷ்மா வெங்கடேஷுக்கு புரட்சிகரமான வேடம் இயல்பான நடிப்பதனால் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்துவிடுகிறார்.


வில்லனாக நடித்திருக்கும் சார்லஸ் வினோத்,. நாயகனின் நண்பராக வரும் ஸ்ரீநாத் ,அருள்தாஸ், சம்பத் ராம், யோகிராம், என மற்ற நடிகர்கள் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் .


தீசன் இசையில் பாடல்கள் மற்றும் பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது. ஒளிப்பதிவாளர் ரவீந்திரநாத் குருவின் ஒளிப்பதிவு தரம்.


சமூக அவல பிரச்சனையான மதுவுக்கு எதிரான கதையுடன் மதுப்பழக்கத்தால் மக்கள் எப்படி சீரழிகிறார்கள் என்பதை திரைக்கதையில் அழுத்தமாக சொல்வதுடன் சமூக அக்கறையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி மதுவுக்கு எதிரான பிரசார படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் எஸ்.டி.மணிபால்.



ரேட்டிங் - 3 / 5

Comments


bottom of page