மிக பெரிய தொழிலதிபரான ஹரிஷ் பெராடி தன் தொழிலை கவனிக்காமல் ஆன்மிக வழியில் சென்று விட அவரின் மகனான முகேஷ் கம்பெனியின் புதிய சேர்மன் ஆகிறார் .
மேற்படி தந்தை வழியில் தொழிலை நடத்த முடியாமல் முகேஷ் நிதி நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறார். தன் தொழில் நஷ்டமடையாமல; காப்பாற்ற கல்லூரியில் மனைவியின் முன்னாள் காதலன் வியாபார ஆலோசகர் அர்ஜுனை சந்திக்கிறார்.
பின்னர் வீட்டிற்கு திரும்பி வரும் வழியில் மர்ம நபர்களால் முகேஷ் கொல்லப்படுகிறார்.
போலீஸ் தரப்பில் முகேஷின் கொலை விசாரணை நடந்து வரும் நிலையில் அர்ஜூனும் மர்ம நபர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்.
நாயகி நிக்கி கல்ராணியின் அப்பாவான முகேஷின் கொலையை தொடர்ந்து அவரது அம்மாவும் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். இதனால், நிக்கி கல்ராணிக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க, அந்த பாதுகாப்பையும் மீறி நிக்கி கல்ராணியை கொலை செய்ய மர்ம கும்பல் முயற்சிக்கிறது.
அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணி தப்பித்தாலும், அந்த கும்பல் தொடர்ந்து அவரை துரத்த, அடர்ந்த வனப்பகுதியில் அந்த கும்பலிடம் நிக்கி கல்ராணி சிக்கிக் கொள்கிறார்.
அவர்களிடம் இருந்து நிக்கி கல்ராணியை காப்பாற்றும் அர்ஜுன், வனப்பகுதியில் உள்ள தனது வீட்டில் அவருக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.
இந்நேரத்தில் நிக்கி கல்ராணி அடைக்கலம் கொடுத்த அர்ஜுனையே கொலை செய்ய முயற்சிக்கிறார்.
முடிவில் அர்ஜுனை நிக்கி கல்ராணி கொலை செய்ய முயற்சி செய்வதற்கான காரணம் என்ன ?
நிக்கி கல்ராணியின் பெற்றோர்களின் கொலைகளுக்கு பின்னணியாக இருந்த மர்ம நபர் யார் ? என்பதை சொல்லும் படம்தான் ‘விருந்து’
கதையின் நாயகனாக அர்ஜுன் ஆக்ஷன் ஹீரோவாக கதையின் வேகத்திற்கு இணையாக அதிரடி நாயகனாக ரசிகர்களுக்கு ஆக்ஷன் விருந்து படைத்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் நிக்கி கல்ராணி கதைக்கேற்றபடி இயல்பாக நடிக்கிறார் .
இரண்டாவது நாயகனாக நடித்திருக்கும் கிரீஷ் நெய்யார்,படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் ஹரிஷ் பெராடி மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
ரதீஷ் வேகாவின் இசையில், ரஃபீக் அகமது, ஹரி நாராயண், மோகன் ராஜன் ஆகியோரது வரிகளில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை அசத்தல் .
ரவிச்சந்திரன் மற்றும் பிரதீப் நாயரின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம் .
சமீப காலமாக பத்திரிகை செய்திகளில் வரும் மூட நம்பிக்கைகளின் பிரதிபலிப்பான நரபலியை மையமாக கொண்ட கதையுடன் சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லரான திரைக்கதையுடன் சுவாரஸ்யமாக, பரபரப்பான திருப்பங்களுடன் படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் தாமர கண்ணன்
ரேட்டிங் - 3 / 5
Comments