’அஜயனின் ரெண்டாம் மோஷனம்’ (அஜயனின் ரெண்டாவது திருட்டு) என்ற மலையாள வாக்கியத்தின் சுருக்கம் தான் ‘ஏ.ஆர்.எம்’.
1990 ஆம் ஆண்டு கால கட்டத்தில் கேரளாவில் உள்ள கிராமத்தில் வாழும் நாயகன் டோவினோ தாமஸ் அரசாங்க தேர்வு எழுதி வேலைக்காக காத்துக்கொண்டிருக்கும் நேரத்தில்,,,, பல ஆண்டுகளுக்கு முன் வானில் இருந்து விழும் ஏரி கற்களைக் கொண்டு நாட்டை ஆளும் அரசன் பொற் கொல்லர்களை வைத்து செய்த சியோதி என்ற பழம்பெரும் அதிசய விளக்கு சிலையை டோவினோ தாமஸின் தாத்தா, கிராம கோவிலில் திருட முயன்றதால், டோவினோ தாமஸை கிராம மக்கள் திருடனாகவே பார்த்து அவ்வபோது அவமானப்படுத்துகிறார்கள்.
இதனால் இவரது குடும்பம் மீது அந்த திருட்டுப்பழி தொடர்ந்து தலைமுறை தலைமுறையாக நீடித்து வருகிறது.
இதற்கிடையே, அதிசய விளக்கு சிலை பற்றி ஆவணப்படம் எடுக்க கிராமத்துக்கு வரும் ஹரிஷ் உத்தமன் அந்த அதிசய விளக்கு சிலையை திருட திட்டம் போடுவதோடு, விளக்கு சிலையை திருடும் திட்டத்தை நிறைவேற்ற டோவினோ தாமஸ் மூலமாக முயற்சி செய்கிறார்.
முடிவில் ஹரிஷ் உத்தமன் திட்டப்படி டோவினோ தாமஸ் அதிசய விளக்கு சிலையைஅவரிடம் ஒப்படைத்தாரா ? இல்லையா என்பதை சொல்லும் படம்தான் ‘ஏ.ஆர்.எம்’ (அஜயனின் ரெண்டாம் மோஷனம்)
நாயகனாக நடித்திருக்கும் டோவினோ தாமஸ் ஆக்ரோஷம் நிறைந்த மனிதன் மணியனாக ,, அஜயன் கதாபாத்திரத்தில் காதல் ,அமைதி ,நிதானம் கலந்த நடிப்பிலும் , வீரமிக்க மிரட்டலான குஞ்சிக்கெழு என்ற கதாபாத்திரம் என மூன்று கதாபாத்திரங்களுக்கும் தோற்றம் மூலமாக வித்தியாசத்தை வெளிப்படுத்தி கதைக்கு பக்க பலமாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகிகளாக நடித்திருக்கும் கீர்த்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் என இவர்களுடன் பசில் ஜோசப், ரோஹிணி, ஹரிஷ் உத்தமன், நிஷ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் இயல்பான நடிப்பில் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் , ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம்
சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விக்ரம் மோர் மற்றும் பீனிக்ஸ் பிரபு, களரி சண்டைக் காட்சியை வடிவமைத்த பி.வி.சிவகுமார் குருக்கள் ஆகியோரது பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது.
சலீம் லஹிரின் தலைமையில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
ஒரு சிலையை கருவாக வைத்து 1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் பயணிக்கும் கதையை அனைத்து தரப்பினரும் ரசிக்கும் தரமான படமாக படத்தை இயக்கியுள்ளார்
அறிமுக இயக்குநர் ஜிதின் லால்
ரேட்டிங் - 3.5 / 5
Comments