தாழ்த்தப்பட்ட மக்களான ஜாதியின் அடிப்படையில் ஒடுக்கப்படும் மக்கள் எந்த விதத்திலும் மேலே வந்துவிடக் கூடாது என்று நினைக்கும் ஜாதி வெறியர்கள், தங்களிடம் இருக்கும் அரசியல் அதிகாரம் மூலம் அந்த வேலையை சரியாக செய்து வருவதோடு, வறுமை மூலமாக அம்மக்களை கொத்தடிமைகளாக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.
அதை கடந்து படித்து முன்னேற வேண்டும், என்று நினைக்கும் இளைஞர்களை தங்களது வன்முறையால் கொலை செய்து விடுகிறார்கள்.
அவர்களின் இத்தகைய செயலால், 3ம் வகுப்பு வரை கூட படிக்க முடியாமல் இருக்கும் சமூகத்தில் இருந்து வரும் நாயகன் அலெக்ஸ், 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுவிட்டு மேலே படிக்க முடியாமல் வாகன வண்டிகளை
பழுதுபார்ப்பவராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் வாழும் பகுதியின் அருகில் உள்ள பொறியியல் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் சத்யராஜ், அங்கு நடக்கும் அநீதிக்கு எதிராக குரல் கொடுத்து வருவதோடு, நன்றாக படிக்கும் ஏழை மாணவர்களை பொறியியல் கல்லூரியில் சேர்க்க முயற்சிக்கிறார். அதன்படி, நாயகன் அலெக்ஸ் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று இட ஒதுக்கீடு மூலம் பொறியியல் கல்லூரியில் இடம் பெறுகிறார். கல்லூரியில் சேர்ந்ததும், இனி நம் கஷ்டம் அனைத்தும் தீர்ந்துவிட்டது என்று நினைக்கும் அலெக்ஸ், கல்லூரியின் முதல் நாளில் இருந்தே ஜாதிய வன்முறை கொடுமைக்கு ஆளாகிறார்.
உடன் படிக்கும் சக மாணவர்கள் மட்டுமல்லாமல் கல்லூரியில் உள்ள சில பேராசிரியர்கள் மூலமாகவும் வன்முறைக்கு ஆளாகும் அலெக்ஸ்,,,, வன்முறைக்கு எதிராக களத்தில் அதிரடியாய் இறங்க ,,,,முடிவில்
எதிர்பார்க்காத சம்பவங்களுடன் ஜாதிய வன்முறைக்கு எதிராக எழுச்சியான படம்தான் ‘தோழர் சேகுவேரா’
கதையின் நாயகனாக நடித்திருக்கும் ஏ.டி.அலெக்ஸ், கதாபாத்திரத்திற்கு ஏற்ற இயல்பான நடிப்பில் வன்முறை காட்சிகளில் பாதிக்கப்படும் போது அதிரடி நாயகனாக கதையுடன் இணைந்து அசத்தலான நடிப்பில் சிறப்பாக நடிக்கிறார் .
சேகுவேரா கதாபாத்திரத்தில் கல்லூரி பேராசியராக நடிக்கும் சத்யராஜ், அனுபவம் வாய்ந்த நடிப்பில் திரைக்கதைக்கு பக்க பலமாக இருக்கிறார் .
நாஞ்சில் சம்பத், கூல் சுரேஷ், மொட்ட ராஜேந்திரன் ஆகியோர் சிறப்பாக நடிக்கின்றனர் .
படத்திற்கு பக்க பலமாய் ஒளிப்பதிவாளர் சாம் அலன், இசையமைப்பாளர் பி.எஸ்.அஸ்வின், படத்தொகுப்பாளர் கெளதம்
தாழ்த்தப்பட்ட, குரல்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் அவலங்களை அதிகார வர்க்கத்தின் அராஜகத்தால் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்க புறப்படும் ஒரு ஏழை இளைஞனின் வாழ்வியலை அதிரடி ஆக்ஷனுடன் தரமான படமாக இயக்கியுள்ளார் இயக்குனர் ஏ.டி. அலெக்ஸ்
ரேட்டிங் 3.5 / 5
Comments