top of page

‘லப்பர் பந்து’ - விமர்சனம் !

  • mediatalks001
  • Sep 21, 2024
  • 2 min read

கடலூர் மாவட்டத்தில் கிரிக்கெட் விளையாட்டில் கெத்து காட்டும் ‘அட்ட கத்தி’ தினேஷ், தனது மனைவி ஸ்வஸ்விகா , மகள் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாய் கீதா கைலாசத்துடன் வாழ்ந்து வரும் நிலையில்,,, பெயிண்ட் வேலையை விட கிரிக்கெட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்.


விஜயகாந்த் ரசிகரான இவர் எந்த ஊரில் கிரிக்கெட் நடந்தாலும் விஜயகாந்த் பாட்டை போட்டு கெத்து காட்டி விளையாட கிளம்பி விடுவார்.


இளைஞர் ஹரிஷ் கல்யாண், சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்தாலும், சாதி பாகுபாட்டால் தனது சொந்த ஊர் கிரிக்கெட் அணியால் நிராகரிக்கப்படுகிறார். இதனால், வாய்ப்பு வழங்கும் அணிகளில் விருந்தாளி வீரராக விளையாடி தனது கிரிக்கெட் தாகத்தை தீர்த்துக் கொள்கிறார்.

இந்த இருவருக்கும் இடையே கிரிக்கெட் மூலம் ஆரம்பிக்கும் ஈகோ மோதல், ஒரு கட்டத்தில் இருவரது வாழ்க்கையிலும் சிக்கலை ஏற்படுத்துகிறது.


இந்நிலையில் ஹரிஷ் கல்யாண் ,, தினேஷின் மகள் என்று தெரியாமலேயே சஞ்சனா கிருஷ்ணமுர்த்தியை காதலிக்கிறார். மேலும் ஹரிஷ் கல்யாண் தன் மகளை காதலிப்பதை தினேஷ் அறிந்தவுடன் மோதல் பெரிய அளவில் விஸ்வரூபம் எடுக்கிறது.

இவர்களது பிரச்சனையால் ஸ்வஸ்விகா தன் தாய் வீட்டிற்கு சென்று விட,,, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தியை ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் செய்து கொடுக்க மறுக்கும் தினேஷ் ,வேறு மாப்பிள்ளை தேடுகிறார்.


இதற்கிடையே ஜாலி பிரண்ட்ஸ் கிரிக்கெட் குழுவிலிருந்து காளி வெங்கட் வெளியேற,,, காளி வெங்கட் புதியதாக அடேங்கப்பா கிரிக்கெட் அணியை ஆரம்பிக்கிறார் .

காளி வெங்கட் ஆதரவாக தினேஷும் ,,ஹரிஷ் கல்யாண் இருவரும் ஒன்றாக இணைந்து ஆட வேண்டிய சூழ்நிலை உருவாகிறது .


முடிவில் தினேஷும் ,,ஹரிஷ் கல்யாண் இருவரும் ஒன்றாக ஆடி ஜாலி பிரண்ட்ஸ் அணியை தோற்கடித்தார்களா?

ஹரிஷ் கல்யாண் - சஞ்சனா கிருஷ்ணமுர்த்தி காதல் தினேஷின் சம்மதத்துடன் திருமணத்தில் முடிந்ததா? என்பதை சொல்லும் படம்தான் ‘லப்பர் பந்து’.

அட்ட கத்தி’ தினேஷ் கிரிக்கெட் வீரராக பூமாலை என்கிற கெத்தாக கதையுடன் இணைந்து இயல்பான நடிப்பில் மனைவியிடம் காட்டும் பயம், காதல் மாறாத குணம், மகளிடம் காட்டும் பாசம், ஹரிஷ் கல்யாணிடம் காட்டும் வெறுப்பு, கோபம் என கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


தினேஷிற்கு இணையாக நடிப்பில் போட்டி போட்டு நாயகனாக நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாண்,, தினேஷின் மனைவியாக நடித்திருக்கும் ’கோரிப்பாளையம்’ புகழ் ஸ்வஸ்விகா, ஹரிஷ் கல்யாணின் காதலியாகவும், தினேஷின் மகளாகவும் நடித்திருக்கும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி , காளி வெங்கட், ஹரிஷ் கல்யாணின் நண்பராக வரும் பால சரவணன், தினேஷின் நண்பராக நடித்திருக்கும் ஜென்சன் திவாகர் , கிரிக்கெட் போட்டியின் வர்ணனையாளராக நடித்திருக்கும் கதிர் ,தினேஷின் அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம், டி.எஸ்.கே, ஹரிஷ் கல்யாணின் அம்மாவாக நடித்திருக்கும் தேவதர்ஷினி என அனைவரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ற தேர்வாக இருக்கிறார்கள்.



ஒளிப்பதிவாளர் தினேஷ் புருஷோத்தமனின் ஒளிப்பதிவும் ,இசையமைப்பாளர் ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம்


படத்தொகுப்பாளர் மதன்.ஜி மற்றும் கலை இயக்குநர் வீரமணி கணேஷ் ஆகியோரது பணி சிறப்பு .


கிரிக்கெட் விளையாட்டை மையமாக கொண்ட கதையுடன் ,, ரசிகர்கள் விரும்பும் ஜனரஞ்சகமான திரைக்கதையுடன் குடும்ப உறவு, காதல், ஜாதி பாகுபாடு, சாப்பிடும் உணவில் அரசியல் என அனைத்து தரப்பினரும் கொண்டாட கூடிய தரமான படைப்பாக இயக்கியுள்ளார் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து.



ரேட்டிங் - 3.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page