ஒரு இரவு நேரத்தில் ஏற்காடு மலை சாலையில் பதட்டமான சூழ்நிலையில் காரை ஓட்டிச் செல்லும் நாயகன் சதீஷ், திடீரென்று குறுக்கே வரும் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விடுகிறார்.
விபத்தில் இருசக்கர வாகனத்தை ஒட்டி வரும் நபர் உயிரிழக்க,, பயந்து போன அவர் இறந்து போன நபரின் உடலை தனது கார் டிக்கியில் வைத்துக்கொண்டு காரை ஓட்டும் சதீஷ் சோதனைச் சாவடியில் போலீசாரின் பிடியில் சிக்கிக்கொள்கிறார்.
அங்கிருக்கும் காவலர்களிடம் இருந்து தப்பிக்க முயலும்போது சப்-இன்ஸ்பெக்டர் பாவல் நவகீதனுடன் ஏற்படும் பிரச்சனையில் காருடன் அவரை காவல் நிலையத்தில் உட்கார வைத்து விடுகிறார் பாவல் நவகீதன் .
மற்றொரு பக்கம் அதே இரவில் இளம் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட, அந்த கொலையாளியை கைது செய்வதில் காவல்துறை தீவிரம் காட்டி வருகிறது.
அதே சமயம், அந்த காவல் நிலையத்தில் இருக்கும் இரண்டு சப்-இன்ஸ்பெக்டர்களான அஜய்ராஜிக்கும் , பாவல் நவகீதனுக்கும் ஈகோ யுத்தம் நடந்துக் கொண்டிருக்கிறது.
முடிவில் ஒரு இரவில் நடந்த இந்த சம்பவங்களின் பின்னணியில் மர்மமாக கொலை செய்யப்பட்ட அந்த இளம் பெண் யார் ?
சதீஷின் காரில் ஏற்பட்ட விபத்தினால்தான் இருசக்கர வாகனத்தை ஒட்டி வரும் நபர் இறந்தாரா ?அல்லது கொல்லப்பட்டு இறந்தாரா ?
ஒரு இரவில் நடந்த இந்த சம்பவங்களுக்கும் நாயகன் சதீஷுக்கும் தொடர்பு உள்ளதா ? என்பதை எதிர்பாராத திருப்பங்களுடன் சொல்லும் விறுவிறுப்பான கிரைம் த்ரில்லர் படம்தான் ‘சட்டம் என் கையில்’.
கதையின் நாயகனாக நடித்திருக்கும் சதீஷ் அழுத்தமான கதாபாத்திரத்தில் கதையுடன் இணைந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
கதையின் முக்கிய கதாபாத்திரங்களில் சப்-இன்ஸ்பெக்டராக நடிக்கும் அஜய்ராஜ், மற்றொரு சப்-இன்ஸ்பெக்டராக நடித்திருக்கும் பாவல் நவகீதன் இருவருமே இயல்பான நடிப்பில் சிறப்பாக நடித்துள்ளனர் .
ரித்திகா, மைம் கோபி, கே.பி.ஒய்.சதீஷ், வெண்பா , வித்யா பிரதீப், பாவா செல்லதுரை, ராம்தாஸ், அஜய் தேசாய் என படத்தில் நடித்த மற்ற நடிகர்கள் திரைக்கதைக்கு பக்க பலம் .
ஒளிப்பதிவாளர் பி.ஜி.முத்தையாவின் ஒளிப்பதிவும் ,இசையமைப்பாளர் எம்.எஸ்.ஜோன்ஸ் ரூபெர்ட் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பக்க பலம் ..
ஒரு இரவில் நடக்கும் கொலை சம்பவத்தை மையமாக கொண்ட கதையுடன் அதனால் ஏற்படும் சம்பவங்களை விறுவிறுப்பாக எதிர்பாராத திருப்பங்களுடன் ரசிக்க வைக்கும் திரைக்கதையுடன் சஸ்பென்ஸ் கலந்த கிரைம் த்ரில்லராக பாராட்டும்படி படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சாச்சி.
ரேட்டிங் - 3 .5 / 5
Comments