top of page

' வேட்டையன் '  - விமர்சனம் !

mediatalks001

Casting : Rajinikanth, Amitabh Bachchan, Fahadh Faasil, Rana Daggubati, Manju Warrier, Kishore, Rithika Singh, Dushara Vijayan, G M Sundar, Abirami, Rohini, Rao Ramesh, Ramesh Thilak, Rakshan


Directed By : T.J. Gnanavel


Music By : Anirudh Ravichander


Produced By : Lyca Productions - Subaskaran


என்கவுண்டர் ஸ்பெலிஸ்ட் உயர் அதிகாரியான ரஜினிகாந்த் கன்னியாகுமரி மாவட்டத்தில் குற்றங்களை தடுப்பதற்கும், குற்றவாளிகளை அழிப்பதற்கும் சட்டத்தை விட என்கவுண்டரில் தாதாக்களை சுட்டு தள்ளி ரவுடிகளை அலற வைக்கிறார்.

ரஜினிகாந்துக்கு எதிராக    மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி அமிதாப் பச்சன், சட்டத்தின் மூலம் குற்றவாளிகளை தண்டித்தால் மட்டுமே சட்டம் அனைவருக்கும் சமம் என்கவுண்டர் தனி உரிமை மனித மீறல் என ரஜினிகாந்த்  செய்யும் என்கவுண்டர்களுக்கு எதிராக இருக்கிறார்.

 

இந்நேரத்தில் சென்னையில்  எதற்கும் பயப்படாத துணிவான ஆசிரியையான துஷாரா விஜயன் அவர் வேலை செய்யும் பள்ளி வளாகத்திலேயே கற்பழித்து கொடூரமாக கொலை செய்யப்பட,,,,, அவ்  வழக்கில் குற்றவாளி என்று கைது செய்யப்படும் இளைஞர் போலீஸ் காவலில் இருந்து தப்பித்து விடுகிறார். அவரை என்கவுண்டர் செய்வதற்காக கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு வருகிறார் ரஜினிகாந்த், 

அந்த இளைஞன் பிடிபடும் நிலையில் வழக்கை விசாரிக்கும் அதிகாரியான கிஷோரின் பேச்சை கேட்டு உண்மை அறியாமல் அந்த இளைஞரை என்கவுண்டர் செய்து விடுகிறார் ரஜினிகாந்த் .

அந்த என்கவுண்டரில் மனித உரிமை மீறப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டும் அமிதாப் பச்சன் தலைமையிலான விசாரணைக் குழு, அதன் பின்னணியை விசாரிக்கும் போது என்கவுண்டரில் கொல்லப்பட்டவன் உண்மையான குற்றவாளி அல்ல  அப்பாவி என தெரிந்து கொள்ளும் ரஜினிகாந்த்,,,

முடிவில் துஷாரா விஜயனை கொன்ற மர்ம நபரையும் அவனுக்கு பின்னணியில் இருந்த அதிகாரம் மற்றும் அரசியல் பலம் கொண்ட ஒரு பெரும் புள்ளியையும்   ரஜினிகாந்த் கண்டுபிடித்து கைது செய்தாரா ? என்பதை சொல்லும் படம்தான் 'வேட்டையன்' 


அதியன் என்ற கதாபாத்திரத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரஜினிகாந்த் வழக்கமான ஸ்டைலில் திரையரங்கையே அதிர வைத்து ரசிகர்களை கொண்டாட வைக்கிறார் .

மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவராக நடித்திருக்கும் அமிதாப் பச்சன் அமைதியான நடிப்பில் உணர்வுப்பூர்வமாக நடித்திருக்கிறார்.

 

போலீஸ் இன்பார்மர்  கதாபாத்திரத்தில் பகத் பாசில், அப்பாவி மக்களிடம் கொள்ளையடிக்க நினைக்கும் கல்வி வியாபாரியாக நடித்திருக்கும் ராணா டகுபதி ,ரஜினிகாந்தின் மனைவியாக நடித்திருக்கும் மஞ்சு வாரியர், போலீஸ் அதிகாரியாக நடித்திருக்கும் ரித்திகா சிங், அரசு பள்ளி ஆசிரியையாக நடித்திருக்கும் துஷாரா விஜயன், கிஷோர், ஜி.எம்.சுந்தர், ராவ் ரமேஷ், ரமேஷ் திலக், அபிராமி, ரோகிணி, ரக்‌ஷன் என படத்தில் நடித்த நடிகர்கள் அனைவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் 

அனிருத் இசையும் ,ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் . 


நாட்டில் நடக்கும் அவலமான சமூக பிரச்சனையான கல்வியை வியாபாரமாக்கும் திட்டத்தில் சிக்கி சீரழியும் நடுத்தர ,ஏழை மக்களின் கதையை மையமாக கொண்டு திரைக்கதையை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் நகர்த்தி சூப்பர் ஸ்டாரின் ரசிகர்கள் கொண்டாடும் வகையில் கிரைம் திரில்லர் சஸ்பென்ஸ் படமாக படத்தை இயக்கியுள்ளார்  இயக்குநர் டி.ஜே.ஞானவேல். 


ரேட்டிங் - 3 .5  /  5



Comments


©2020 by MediaTalks. 

bottom of page