top of page

‘ராக்கெட் டிரைவர்' - விமர்சனம்

mediatalks001

நடிக - நடிகையர்


விஷ்வத் as பிரபா

சுனைனா as கமல்

நாகா விஷால் as APJ அப்துல் கலாம்

காத்தாடி ராமமூர்த்தி as சாஸ்திரி

ஜெகன் as ஆனந்த குமாரசாமி

ராமசந்திரன் துரைராஜ் as சவரி முத்து


தொழிற்நுட்ப கலைஞர்கள்


எழுத்து & இயக்கம்: ஸ்ரீராம் ஆனந்தசங்கர்

இசை : கௌஷிக் க்ரிஷ்

தயாரிப்பாளர் : அனிருத் வல்லப்

தயாரிப்பு நிறுவனம் : ஸ்டோரீஸ் பய் தி ஷோர்

ஒளிப்பதிவாளர் : ரெஜிமெல் சூர்யா தாமஸ்

படத்தொகுப்பாளர்: இனியவன் பாண்டியன்

உடை வடிவமைப்பாளர் : ஷில்பா ஐயர்

தயாரிப்பு வடிவமைப்பாளர்: பிரேம் கருந்தமலை

இணை எழுத்தாளர் : அக்ஷய் பொல்லா

வசனம் : பிரசாந்த் S

தயாரிப்பு நிர்வாகி : செல்வேந்திரன்

கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: யுவராஜ் BV

மக்கள் தொடர்பு : ஸ்ரீ வெங்கடேஷ்

விளம்பர வடிவமைப்பாளர்: ஸ்ரீ ஹரி சரண்

விளம்பர போஸ்டர்கள்: SMB கிரேஷன்ஸ் & மணிபாரதி செல்வராஜ்


படத்தின் கதை விளக்கமாக,,,,,,,,,,


கதையின் நாயகன் விஷ்வத் அப்துல் கலாமை போல சிறந்த விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் கனவோடு இருக்கும் நேரத்தில் குடும்ப வறுமை காரணமாக  ஆட்டோ ஓட்டுநராக தன் வேலையை செய்து கொண்டிருக்கும் நேரத்தில் பெண் போக்குவரத்து காவலரான சுனைனா அவர் மீது பாசமுடன் பழகுகிறார்.

இந்நிலையில் தனது ஆசை நிறைவேறாமல் போனதால் எப்போதும் சலிப்பான மனநிலையுடன் பயணிக்கும் விஷ்வத்தின் ஆட்டோவில் ஒரு நாள், 16 வயது ஏ.பி.ஜே.அப்துல் கலாம் அவரது ஆட்டோவில்  பயணிக்கிறார்.

ஒரு கட்டத்தில் 1948-ல் இருந்து நிகழ்காலத்துக்கு டைம் டிராவல் மூலம் அப்துல் கலாம் வந்திருப்பதை விஷ்வத் புரிந்து கொள்கிறார். 

 அதே சமயம், 1948-ல் இருந்து தற்போதைய காலக்கட்டத்திற்கு வந்ததற்கான நோக்கம் பற்றி தெரியாமல் 16 வயது கலாம்அப்துல்  தவிக்கிறார்.

அப்துல் கலாமின் நோக்கத்தை அறிந்து அதை நிறைவேற்றும் கட்டாயத்துக்குத் தள்ளப்படும் விஷ்வத், அப்துல் கலாமுடன் இணைந்து அவர் வாழ்ந்து மறைந்த இடமான ராமேஸ்வரத்துக்கு சென்று அதை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடும்போது அப்துல் கலாமின் பள்ளி பருவ நெருங்கிய நண்பர் வயதான காத்தாடி ராமமூர்த்தியை 16 வயது அப்துல்கலாம் சந்திக்க இருவரும் பழைய நினைவுகளை நினைக்கும்போது தான்  வந்ததற்கான நோக்கத்தின் விடையை  16 வயது அப்துல்கலாம் கண்டுபிடிக்கிறார். 

முடிவில் எந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக 16 வயது அப்துல்கலாம் 2023ல் வந்தாரோ அந்த நோக்கம் நிறைவேறியதா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘ராக்கெட் டிரைவர்’.

நாயகனாக நடித்திருக்கும் விஷ்வத் ஆர்ப்பாட்டம் இல்லாமல் அமைதியாக  இயல்பாக நடித்திருக்கிறார்.

நாயகனின் தோழியாக சில காட்சிகளில் நடித்துள்ள சுனைனா உட்பட சிறுவயது அப்துல் கலாமாக நடித்திருக்கும் நாகவிஷால் மற்றும் கலாமின் நண்பராக நடித்திருக்கும் காத்தாடி ராமமூர்த்தி இருவரும் சிறப்பாக நடிக்கின்றனர் . 

இசையமைப்பாளர் கெளஷிக் கிரிஷ், ஒளிப்பதிவாளர் ரெஜிமெல் சூர்யா தாமஸ், படத்தொகுப்பாளர் இனியவன் பாண்டியன் ஆகியோரது பணி படத்திற்கு பக்க பலம் .


வித்தியாசமான கதை களத்தில் வாழ்க்கையில் நடந்து முடிந்த சிறு சிறு விசயங்களின் பின்னணியில் நாம் செய்ய மறந்த  சிறந்த நோக்கங்கள் இருக்கின்றன, என்பதை சொல்லும் சுவாரஸ்யமான திரைக்கதை அமைப்புடன் இயல்பான எளிமையானஃபேண்டஸி டிராமா வகை கதையை  ரசிகர்கள் ரசிக்கும்படி இயக்கியுள்ளார் இயக்குநர் ஸ்ரீராம் ஆனந்தசங்கர்.  

 

ரேட்டிங்  -  3.5 / 5



Comments


©2020 by MediaTalks. 

bottom of page