


இலங்கை போரின் முடிவுக்கு பின் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த போராளிகள் சயனைடு குப்பியை உட்கொண்டு தற்கொலை செய்துக் கொள்ள முயற்சிக்கிறார்கள்.
அந்நேரத்தில் நாயகன் புதியவன் இராசையா பெண் போராளியான நாயகி நவயுகாவை காப்பாற்றி தான் வாழும் வீட்டில் அடைக்கலம் கொடுக்கிறார்
குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் அனாதையாக இருந்த சிறுமிக்கும் அடைக்கலம் கொடுத்து தனது மகளாக வளர்க்கிறார்.
இந்த மூவரும் போருக்குப் பிந்தைய தங்களது எதிர்காலத்தை நோக்கி பயணிக்கிறார்கள்.
அப்போது ஈழத் தமிழ்ப் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல் இருப்பதை கண்டு வருந்தும் புதியவன் இராசையா, பெண்களை ஒன்றிணைத்து ஒரு சங்கம் தொடங்கி அதன் மூலம் அவர்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முயற்சிக்கிறார்.
முடிவில் புதியவன் இராசையா வின் முயற்சி வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ’ஒற்றைப் பனை மரம்’.
கதையின் நாயகியாக நவயுகா, அஜாதிகா புதியவன், பெருமாள் காசி, நூர்ஜகான்,மாணிக்கம் ஜெகன் என நடித்த நடிகர்கள் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்
இலங்கையில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் மஹிந்தே அபிசிண்டே மற்றும் இந்திய பகுதிகளில் படமாக்கப்பட்ட காட்சிகளை ஒளிப்பதிவு செய்திருக்கும் சி.ஜெ.ராஜ்குமார் என இருவரின் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம்
அஷ்வமித்ராவின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு பக்க பலமாக உள்ளது
நாயகனாக நடித்திருப்பதோடு, படத்தை இயக்கவும் செய்திருக்கும் புதியவன் இராசையா, இலங்கை இறுதி போருக்குப் பிறகு புலிகள் அமைப்பில் இருந்த வீரர்களின் நிலை படுமோசமாக மாறிவிட்டது, என்பதை அழுத்தமாக பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார். குறிப்பாக, போரில் பலியான வீரர்களின் மனைவிகள் மற்றும் குழந்தைகள் பல நாட்கள் பட்டினியால் வாடுவதாகவும், சில பெண்கள் தங்கள் பிள்ளைகளை காப்பாற்றுவதற்காகவும் பசி கொடுமைகளில் இருந்து மீண்டு வர விலைமாதுவாக மாறியதோடு, அவர்களை தங்களது இச்சைக்கு தமிழர்களே பயன்படுத்திக் கொள்கிறார்கள் என வெளிப்படையாக காட்சிகளாக படமாக்கியிருப்பது பாராட்டுக்குரியது
ரேட்டிங் - 3 / 5
Comments