top of page

‘தீபாவளி போனஸ்’ - விமர்சனம் !

  • mediatalks001
  • Oct 26, 2024
  • 1 min read

மதுரை மாவட்டத்தில் உள்ள நிலையூர் கிராமத்தில் வசிக்கும் நாயகன் விக்ராந்த் மனைவி ரித்விகா, மற்றும் மகன் ஹரிஷ் ஆகியோருடன் சந்தோசமாக சிறிய வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

கொரியர் நிறுவனத்தில் டெலிவரி பாய் வேலை செய்து வருகிறார் விக்ராந்த். மற்றொரு பக்கம் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை பார்த்து வருகிறார் ரித்விகா, இவர்கள் இருவருக்கும் கிடைக்கும் வருமானத்தில் குடும்பத்தை நடத்தி வருகிறார்கள்.


இந்நிலையில் தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. விக்ராந்தின் அலுவலகத்தில் தீபாவளி போனஸ் தருவதாகக் கூறி இழுத்தடித்துக் கொண்டு இருக்கின்றனர். இதனால் மகனின் நீண்ட நாள் விருப்பமான போலீஸ் உடை, மனைவி விரும்பிய சேலை வாங்கி கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.


இதனையடுத்து பணத்திற்காக நண்பன் சொன்ன வேலையை செய்ய போலீஸ் வந்து விக்ராந்த்தை கைது செய்து சிறையில் அடைகிறார்கள். மறுநாள் தீபாவளி பண்டிகை வருகிறது.

முடிவில் என்ன காரணத்திற்காக போலீசார் நாயகன் விக்ராந்த்தை கைது செய்தனர் ? தீபாவளி போனஸில் மனைவி - மகன் ஆசையை விக்ராந்த் நிறைவேற்றினாரா ? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘தீபாவளி போனஸ்’


நாயகனாக நடித்திருக்கும் விக்ராந்த் இயல்பான நடிப்பில் உழைப்பிற்கு ஏற்ற வருமானம் கிடைக்காமல் போனதை கண்டு மனதால் கலங்கும்போதும் மகன் - மனைவி ஆசையை நிறைவேற்ற போராடுவதும் மகனுக்காக காலணி வியாபாரியிடம் கெஞ்சும் காட்சிகளில் அனுபவ நடிகராக கண்கலங்க வைத்துவிடுகிறார்.


விக்ராந்த் மனைவியாக நடித்திருக்கும் ரித்விகா போட்டி போட்டு நடித்திருக்கிறார். கணவருக்கு எப்படியாவது புதிய தலைக்கவசம் வாங்கிக் கொடுக்க வேண்டும் என அவர் போராடும் இடங்களில் கவனம் பெறுகிறார். விக்ராந்த் - ரித்விகா தம்பதியின் மகனாக நடித்திருக்கும் சிறுவன் ஹரிஷ் மற்ற கதாபாத்திரத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக செய்திருக்கிறார்கள்.


இசையமைப்பாளர் மரியா ஜெரால்டு இசையில் பாடல்கள் கேட்டுக்கும் ரகம், பின்னணி இசை கதைக்கு பக்க பலம் .

ஒளிப்பதிவாளர் கெளதம் சேதுராமன் ஒளிப்பதிவில் காட்சிகள் தரம்


நடுத்தர குடும்பத்தில் பிறந்து சரியான வருமானம் இல்லாதவர்கள் எதிர் கொள்ளும் பண்டிகை நாட்களில் எதிர்பார்க்கும் பணத்திற்காக அவர்கள் படும் வலி யையும் , வேதனையையும் கதையாக அமைத்து  தங்களது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றுவதற்காக எத்தகைய போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது என்பதை திரைக்கதையில் அழுத்தமாக சொல்லும் படமாக இயக்கியுள்ளார் அறிமுக இயக்குனர் ஜெயபால். ஜெ



ரேட்டிங் - 2.5 / 5

Comments


©2020 by MediaTalks. 

bottom of page