
தசரத சக்ரவர்த்தியின் முத்த மகனான ஸ்ரீ ராமர் அயோத்தியின் அரசராக பதவி ஏற்க இருந்த நேரத்தில் தசரத சக்ரவர்த்தியின் மனைவிகளில் ஒருவரான கைய்கேயி தன் மகன் பரதன் அயோத்தி மன்னனாக நாடாள வேண்டும் முத்த மகனான ஸ்ரீ ராமர் 14 வருடங்கள் வனவாசம் செல்ல வேண்டும் என இரண்டு வரங்கள் தசரத சக்ரவர்த்தியிடம் கேட்கிறார் .
கைய்கேயியின் சூழ்ச்சியினால் அயோத்தியின் மனனனாக பதவி ஏற்க இருந்த ஸ்ரீ ராமர் மனைவி சீதா தேவி, தம்பி லக்ஷ்மனுடன் 14 வருடங்கள் வனவாசத்திற்காக காட்டிற்கு செல்கிறார் .
காட்டில் வனவாசம் இருக்கும் ஸ்ரீ ராமர் மீது ராவணனின் தங்கை சூர்ப்பனகை காதல் கொள்ள, கோபமடையும் லக்ஷ்மன் சூர்ப்பனகையின் மூக்கை அறுத்து விடுகிறார் .
ஆத்திரத்தில் ராவணனின் தங்கை சூர்ப்பனகை ஸ்ரீ ராமரின் மனைவியான சீதா தேவியின் அழகை அண்ணன் ராவணனிடம் வர்ணிக்க சீதா தேவியை அடைய ஆசைப் படும் ராவணன் திட்டமிட்டு சதி செய்து துறவி வேடத்தில் சீதா தேவியை இலங்கைக்கு கடத்தி செல்கிறார் .
இலங்கைக்கு கடத்தி சென்ற ராவணனிடம் இருந்து தன் மனைவி சீதா தேவியை மீட்பதற்காக வானர அரசன் சுக்ரீவனின் உதவிக்காக அவரை சந்திக்கும்போது ஸ்ரீ ராமருக்கு பலம் பொருந்திய தன் மந்திரி அனுமனை அறிமுகபடு த்துகிறார் சுக்ரீவன் .
இலங்கையில் துன்பப்படும் சீதா தேவியை சந்திக்க அதற்கு ஆதாரமாக ஸ்ரீ ராமர் கொடுக்கும் மோதிரத்துடன் இலங்கைக்கு செல்கிறார் அனுமன் .
இலங்கைக்கு செல்லும் அனுமன் அங்கு சீதா தேவியை சந்தித்து அதன்பின் ராவணனை பார்ப்பதற்காக அவனது அடியாட்களிடம் பிடிப்படும் போது
மன்னன் ராவணன் அனுமனின் வாலை தீயிட்டு கொளுத்த உத்தவிடுகிறார்.
மன்னன் ராவணன் அரச சபையை தனது வாலில் எரியும் தீயை வைத்து அந்த அரச மண்டபத்தை முழுவதுமாக எரித்து சாம்பலாக்குகிறார் ஸ்ரீ ராமரின் பக்தனான அனுமன்.
முடிவில் சீதா தேவியின் அழகில் மயங்கி அவரை இலங்கைக்கு கடத்தி சென்ற ராவணனிடம் இருந்து வானரப் படைகளின் உதவியுடன் ராவணனை வீழ்த்தி தன் மனைவி சீதாதேவியை ஸ்ரீ ராமர் காப்பாற்றினாரா ? என்பதை ராமாயணத்தின் கதையை அனிமேஷன் மூலம் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பார்த்து ரசிக்கும்படி உருவாக்கியுள்ள படம் ’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’
பின்னணி குரல்களாக கதையின் நாயகனான ஸ்ரீ ராமர் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்திருக்கும் செந்தில் குமார், சீதா தேவிக்கு குரல் கொடுத்திருக்கும் டி.மகேஷ்வரி, ராவணனுக்கு குரல் கொடுத்திருக்கும் பிரவீன் குமார், லஷ்மனனுக்கு குரல் கொடுத்திருக்கும் தியாகராஜன், அனுமனுக்கு குரல் கொடுத்த லோகேஷ் மற்றும் ராமாயண கதையை விவரிக்கும் ரவூரி ஹரிதா என அனைவரும் பின்னணி குரல் டப்பிங்கில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
சிறுவர்களுக்கு பிடித்த 2டி அனிமேஷன் மூலம் போர்க் காட்சிகள் மற்றும் அதில் ஈடுபடும் வானரப் படைகளின் செயல்கள் நிச்சயம் சிறுவர்களை மகிழ்விக்கும். குறிப்பாக, கும்பகர்ணனிடம் இருந்து தப்பிக்க முயற்சிக்கும் வானரப் படைகளின் காட்சிகள் ,இந்திரஜித் மற்றும் லக்ஷ்மன் இடையே நடக்கும் வான் சண்டையும், ராவணனின் புஷ்பக விமானம், கோட்டை என அனைத்துமே கிராபிக்ஸ் காட்சிகள் மூலம் மிக அழகாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
’ராமாயணா : தி லெஜண்ட் ஆஃப் பிரின்ஸ் ராமா’ சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்க வைக்கும் அனிமேஷன் படம் .
ரேட்டிங் - 3 / 5
Comments