top of page

‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’ - விமர்சனம்

mediatalks001



செந்தில் தலைவராக இருக்கும் கட்சியில் யோகி பாபுவும் ,சுப்பு பஞ்சுவும் அரசியல்வாதிகளாக இரு துருவங்களாக இருக்கின்றனர் .

இந்நிலையில் ஆவடி நகராட்சியில் மேயர் தேர்தல் வருகிறது .இருவரும் தங்கள் மனைவிகளுக்கு மேயர் பதவிக்கு வேட்பாளராக நிற்க கட்சி தலைவரான செந்திலிடம் சீட் கேட்கிறார்கள் .

ஆனால் செந்திலோ இருவரையும் சுயேட்சையாக நின்று யாருக்கு மக்களிடம் செல்வாக்கு இருக்கிறதோஅவர்களே மேயர் பதவிக்கு தகுதியானவர்கள் என அனுப்பி விடுகிறார் .


மற்றொரு பக்கம் அரசியல்வாதியான யோகி பாபுக்கு திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் போது, வீட்டில் வேலை செய்ய வந்த வடமாநில பெண்ணான அஷ்மிதாவுடன் நெருங்கி பழக அவருக்கும் ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.

இதனையடுத்து வடமாநில பெண்ணான அஷ்மிதா வீட்டை விட்டு வெளியே அனுப்பப்படுகிறார்.


இதனையடுத்து அஷ்மிதாவின் மகன் தனது தந்தையைப் போல் தானும் அரசியல்வாதியாகி ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசையோடு வளர்கிறார்.


மூத்த மனைவியின் மகனும் அரசியலில் தந்தையை விட பெரிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்று ஆசைப்படுகிறார்.


இவர்கள் இருவரும் கட்சி தலைவர் செந்தில் நடத்தும் பள்ளியில் ஒன்றாக படிக்க இவர்களுக்குள் கடும் போட்டி ஏற்படுகிறது.


பள்ளி படிப்பிலிருந்தே யோகிபாபுவின் இரண்டு மகன்களும் தலைவர், விளம்பரம், தேர்தல், சதி என்று அரசியல்வாதிகளுக்கான அம்சங்களுடன் வளர்கிறார்கள்.


முடிவில் ஆவடி நகராட்சி மேயர் தேர்தலில் சுயேட்சையாக நின்று போட்டியிட்ட யோகி பாபு, சுப்பு பஞ்சு இருவரது மனைவிகளில் வெற்றி பெற்ற மேயர் வேட்பாளர் யார் ?

யோகிபாபுவின் இரண்டு மகன்களில் நினைத்தபடி அரசியலில் சாதித்தது யார் ? என்பதை சொல்லும் படம்தான் ‘குழந்தைகள் முன்னேற்றக் கழகம்’.


அரசியல் கட்சித் தலைவராக செந்தில் ,கதைக்கு முக்கிய பாத்திரத்தில் யோகி பாபு சில காட்சிகளில் காமெடி செய்து சிரிக்க வைக்க முயற்சி செய்கிறார் .

கதையின் நாயகர்களாக நடித்திருக்கும் சிறுவர்கள் இமய வர்மன் மற்றும் அத்வைத் ஜெய் மஸ்தான் இருவருமே கதைகேற்றபடி சிறப்பாக நடித்துள்ளனர் .

சிறுமி ஹரிகா கதாபாத்திரம் ஜெயலலிதாவின் கதாபாத்திரத்தை நினைவு கூர்வது போல் உள்ளது.

இவர்களுடன் சுப்பு பஞ்சு, சித்ரா லட்சுமணன், மயில்சாமி, வைகா ரோஸ், அஸ்மிதா சிங், லிஸி ஆண்டனி, சரவணன் என மற்ற வேடங்களில் நடித்திருக்கும் அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

சாதகப் பறவைகள் சங்கரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்திற்கு பலம் .

ஒளிப்பதிவாளர் ஜெ.லக்‌ஷ்மண் குமாரின் ஒளிப்பதிவும் , படத்தொகுப்பாளர் ரிச்சர்ட் கெவின்.ஏ படத்தொகுப்பும் சிறப்பு .

சிறுவர்கள் வைத்து தமிழக போட்டி அரசியல் ,குடும்ப அரசியல் மற்றும் நகைச்சுவையாக நையாண்டி காட்சிகள் என அரசியல் கலந்த நகைச்சுவை படமாக இயக்கியுள்ளார் எழுதி இயக்கியிருக்கும் என்.சங்கர் தயாள்


ரேட்டிங் - 2.5 / 5

Comentários


©2020 by MediaTalks. 

bottom of page