top of page

சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் உருவாகும் 'சன்னிதானம் பி.ஓ'


சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் தயாரிப்பில் அமுதாசாரதி இயக்கத்தில் யோகி பாபு, பிரமோத் ஷெட்டி நடிப்பில் குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்த திரைப்படம் 'சன்னிதானம் பி.ஓ'


சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது


மது ராவ் மற்றும் ஷபீர் பதான் ஆகியோர் சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் புதிய திரைப்படத்திற்கு 'சன்னிதானம் பி.ஓ' என்று பெயரிடப்பட்டுள்ளது.



அறிமுக இயக்குநர் அமுதாசாரதி இயக்கத்தில் யோகி பாபு மற்றும் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி முதன்மை வேடங்களில் நடிக்கும் இத்திரைப்படம் சபரிமலை பின்னணியில் தமிழ், மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் ஒரே சமயத்தில் உருவாகிறது.


திரைப்படம் குறித்து பேசிய இயக்குநர் அமுதாசாரதி, "சிறுவயதில் தொலைந்த தனது மகனை தேடும் ஒரு தாயின் கதையை குடும்ப உணர்வுகளும் நகைச்சுவையும் சரிவிகிதத்தில் கலந்து 'சன்னிதானம் பி.ஓ' சொல்லும். தாயாக சித்தாராவும், மகனாக யோகி பாபுவும் நடிக்கின்றனர். மற்றொரு முதன்மை கதாபாத்திரத்தில் கன்னட நடிகர் பிரமோத் ஷெட்டி நடிக்கிறார்," என்றார்.


தொடர்ந்து பேசிய அவர், "சபரிமலை பின்னணியில் நடக்கும் இக்கதையின் படப்பிடிப்பு சென்னையில் விரைவில் தொடங்க உள்ளது. பொள்ளாச்சி உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெறும். உணர்வுப்பூர்வமான ஒரு கதையை நகைச்சுவை ததும்ப பார்வையாளர்களுக்கு இத்திரைப்படம் வழங்கும்," என்றார்.



வர்ஷா விஸ்வநாத், மேனகா சுரேஷ், மூணார் ரமேஷ், வினோத் சாகர் மற்றும் அஸ்வின் ஹாசன் ஆகியோர் 'சன்னிதானம் பி.ஓ' திரைப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.


கதை மற்றும் திரைக்கதையை அஜினு ஐயப்பன் எழுத, இயக்குநர் அமுதாசாரதி வசனங்களை எழுதியுள்ளார். ஒளிப்பதிவை வினோத் பாரதி.ஏ, படத்தொகுப்பை பொன் கதிரேஷ், உடைகள் வடிவமைப்பை நடராஜ், ஒப்பனையை ஷிபுகுமார், கலையை விஜய் தென்னரசு, சண்டை பயிற்சியை மிரட்டல் சிவா மற்றும் மக்கள் தொடர்பை நிகில் முருகன் கவனிக்கின்றனர்.


சர்வதா சினி காரேஜ் மற்றும் ஷிமோகா கிரியேஷன்ஸ் பேனர்களில் மது ராவ் மற்றும் ஷபீர் பதான் தயாரிப்பில் அமுதாசாரதி இயக்கத்தில் யோகி பாபு, பிரமோத் ஷெட்டி முதன்மை வேடங்களில் நடிக்கும் 'சன்னிதானம் பி.ஓ' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.


Comentários


bottom of page