top of page

நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வரும் நடிகை சாந்தி பாலச்சந்திரன்!

mediatalks001

நடிகை சாந்தி பாலச்சந்திரன் குறித்து:


திரைப்படத் துறையில் பாரம்பரியமான மற்றும் அதே சமயத்தில் வசீகரமான நடிகைகள் அரிதாகவே இருப்பார்கள். இத்தகைய கலைஞர்கள் விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பாராட்டு மற்றும் நேர்மறையான வரவேற்புடன் கொண்டாடப்படுவார்கள். நடிகை சாந்தி பாலச்சந்திரன் அப்படியான நடிகைகளில் ஒருவர். சமீபத்தில் அமேசான் ஒரிஜினல் வெப் சீரிஸில் வெளியான 'ஸ்வீட் காரம் காபி' என்ற தொடரில் நிவியாக அவரது அற்புதமான நடிப்பு பார்வையாளர் மற்றும் விமர்கர்களின் பாராட்டையும் அன்பையும் பெற்றது.


இந்தியாவில் இருந்து அதிகாரப்பூர்வமாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்ட லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் திரைப்படமான ’ஜல்லிக்கட்’டில் சோஃபியாக அவரது நடிப்பு மறக்க முடியாததாக இருந்தது. வித்தியாசமான மற்றும் சவாலான பாத்திரங்களை எளிதில் இவரால் கையாள முடியும் என்ற நம்பிக்கையை முன்னணி திரைப்பட தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் மற்றும் நடிகர்களிடம் அவர் ஏற்படுத்தியுள்ளார்.


சாந்தி பாலச்சந்திரனின் திறமை நடிப்புத் துறையில் மட்டும் நின்றுவிடவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் வெளியிட்ட இவரது எக்ஸ்பிரிமெண்ட்டல் இசை வீடியோ ‘Oblivion’ மூலம் எழுத்தாளராகவும் தனது திறமையை நிரூபித்துள்ளார். தற்போது, அவர் கோ-ரைட்டராகவும் ஒரு திரைப்படத்திற்கு வசனம் எழுதுகிறார்.



‘தி லவ்வர்’ மற்றும் ’எ வெரி நார்மல் ஃபேமிலி’ போன்ற விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்ட மேடை நாடகங்களிலும் நடிப்பின் மூலம் முத்திரை பதித்துள்ளார். இப்படி நம்பிக்கைக்குரிய நடிகையாக வலம் வரும் இவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். விரைவில் அது குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் தயாரிப்புத் தரப்பில் இருந்து வெளியாகும்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page