தமிழ் திரையுல சினிமாவில் நடிகராக வேண்டும் என்று ஆசைப்படும் கவினின் தந்தையான லால் அதில் சாதிக்க முடியாமல் போக தொழில் முறை புகைப்பட கலைஞர் ஆகிறார்.
பள்ளி பருவ காலம் முதல் கவினுக்கு நடிப்பில் ஆர்வத்தை உண்டாக்கி இளைஞரான பின் கவின் நடிப்பதற்கான முயற்சிகளுக்கு அவருக்கு பக்க துணையாக இருக்கிறார் .
ஒரு பக்கம் கவின் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி தீவிர கவனம் செலுத்துகிறார். மற்றொரு பக்கம் நாயகி ப்ரீத்தி முகுந்தன் கவின் இருவரும் காதலிக்கின்றனர் .வெற்றி பட இயக்குனர் ஒருவரின் படத்தில் நடிக்க வாய்ப்பு வரும் நிலையில் எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கும் கவினுக்கு முகத்தில் தழும்பு போன்ற காயங்கள் ஏற்படுகிறது.
இந்நிலையில்காதலியான ப்ரீத்தி முகுந்தனும் சில காரணங்களால் கவினை விட்டு பிரிந்து செல்கிறார்.
முடிவில் விபத்தில் ஏற்பட்ட காயத்தினால் மனமுடைந்த கவின் இறுதியில் நடிகராக வெற்றி பெற்றாரா? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் 'ஸ்டார்'
நாயகன் கவின் சினிமாவில் நடிகராக சாதிக்க ஆசைப்படும் கலை என்ற கதாபாத்திரமாகவே கல்லூரி காலங்களில் நடனம், காதல் என துறு துறு இளைஞனாக,,,, பட வாய்ப்புகளுக்காக ஏங்கும்போதும் ,,,,விபத்திற்கு பின் தன் முகத்தில் ஏற்படும் காயங்களை பார்த்து கலங்கும்போதும் உணர்வுப்பூர்வமான நடிப்பில் சிறப்பான நடிப்பை பாராட்டும்படி வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகிகளாக நடித்திருக்கும் ப்ரீத்தி முகுந்தன் மற்றும் ஆதித்தி பொஹங்கர் இருவரும் கதைக்கேற்றபடி இயல்பான நடிப்பில் நடித்துள்ளனர் .
முக்கிய கதாபாத்திரத்தில் கவினின் தந்தையாக நடித்திருக்கும் லால்,,,, அம்மாவாக நடித்திருக்கும் கீதா கைலாசம் ,மாறன், காதல் சுகுமார், நிவேதிதா ராஜப்பன், தீப்ஸ், ராஜா ராணி பாண்டியன், சஞ்சய் ஸ்வரூப், தீரஜ் என நடித்த அனைவரும் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர் .
மற்றொரு நாயகனான யுவன் சங்கர் ராஜா படத்திற்கு பக்க பலமாக இசை தாண்டவமாக அசத்தலான இசையை வழங்கியுள்ளார்.
ஒளிப்பதிவாளர் எழில் அரசின் ஒளிப்பதிவும் ,,படத்தொகுப்பாளர் பிரதீப் இ.ராகவ் படத்தொகுப்பும் படத்திற்கு பக்க பலம் .
நடிகனாக வேண்டும் என்கிற கனவுடன் போராடும் ஒருவனது வாழ்க்கையை கதையாக கொண்டு முதல் பாதி ஜாலியான கல்லூரி வாழ்க்கையில் நடனம் காதல் என விறு விறுப்பாகவும் இடைவேளைக்கு பின் வரும் அழுத்தமான திரைக்கதை அமைப்பில் யாரும் எதிர்பார்க்காத முடிவுடன் இளைஞர்கள் கொண்டாடும் படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் இளன்.
ரேட்டிங் - 3.5 / 5
コメント