இன்ஜினியரிங் முடித்துவிட்டு நாயகன் ஜஸ்டின் விஜய் ஒரு கார் கம்பெனியில் வேலை செய்கிறார்.
இவர் ஒரு காரை முழுதாக பழுது பார்ப்பதற்குள் அந்த காரை டெலிவரி செய்துவிடுகின்றனர்,
அந்த கார் பிரேக் பிடிக்காமல் விபத்துக்குள்ளாகி காரில் வந்தவர் இறந்து விடுகிறார்.
இந் நிலையில் அவரது நண்பர்கள் அமானுஷ்ய சக்தியை பற்றி சொல்கின்றனர். அமானுஷ்ய சக்தி மேல் ஆர்வம்கொண்ட நாயகன் ஜஸ்டின் விஜய்அதனை முழுதாக படித்து தெரிந்துகொள்கிறார். ஆவிகளுடன் பேசும் ஒருவரைப் பேட்டி எடுக்க யூடியூபரான கதாநாயகி வித்யா பிரதீப் வருகிறார். ஓஜா போர்டு மூலம் இறந்து போன ராஜேந்திரன் என்ற ஆவியோடு பேச ஆரம்பிக்கிறார்கள்
ஆவியுடன் பேசும் முயற்சியை நாயகன் தொடரும் போது அந்த ஆவி கதாநாயகி உடம்பில் புகுந்து கொண்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறது. பிறகு அந்த முயற்சியில் ஈடுபடும் நாயகன், நாயகியை ஆவி ஆட்டி வைக்கிறது.
முடிவில் ஆவியிடம் இருந்து ஜஸ்டின் விஜய்- வித்யா பிரதீப் உயிர் பிழைத்தார்களா? இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘ஸ்ட்ரைக்கர்’
நாயகனாக வரும் ஜஸ்டின் விஜய் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .
நாயகி வித்யா பிரதீப் கதைக்கேற்றபடி சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.
ராபர்ட் மாஸ்டர், கஸ்தூரி சங்கர் என படத்தில் நடித்த அனைவரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.
விஜய் சித்தார்த் இசையும் , மனீஷ் மூர்த்தி ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
ஒரு திகில் படத்தை கொடுக்க நினைத்த இயக்குனர்,,, ஆவிகளுடன் பேசும் ஓர் அம்சத்தை மட்டுமே திரைக்கதையாக அமைத்துள்ளது கதைக்கு பலவீனமாக அமைகிறது .ஆவியை வரவழைத்து ஆவியுடன் பேசும் காட்சிகளில் பரபரப்புடன் பதற்றமான பயத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறார் இயக்குனர் எஸ்.ஏ.பிரபு.
ரேட்டிங் ; 2 / 5
Comments