top of page
mediatalks001

அதிரடி விருந்தாக ஜூலை 6ல் வெளியாகும் பிரபாஸ் நடிக்கும், "சலார்" படத்தின் டீசர் !!


அதிரடி விருந்துக்குத் தயாராகுங்கள் !, Hombale Films வழங்கும் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும், "சலார்" படத்தின் டீசர் ஜூலை 6 வெளியாகிறது !!


Hombale Films நிறுவனம் இந்த வருடத்தின் மிகப்பிரமாண்ட படைப்பான, இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், பிரபாஸ் நடிக்கும், "சலார்" படத்தின் டீசரை ஜூலை 6 ஆம் தேதி வெளியிடுவதாக அறிவித்துள்ளது !



இந்தியாவையே திரும்பிப்பார்க்க வைத்த கேஜிஎஃப் படத்தின் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில், மிகப்பெரிய சூப்பர் ஸ்டார் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இப்படத்தின் மீது ரசிகர்களிடம் வானளாவிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்த ஆண்டில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியப் படங்களில் ஒன்றாக “சலார்” படம் இருக்கிறது. இந்த மெகா பட்ஜெட் படத்தின் அப்டேட் கேட்டு ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், தயாரிப்பாளர்கள் ஒரு பெரிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இப்படத்தின் டீசர் தேதி ஜூலை 6 ஆம் தேதி, காலை 5:12 மணிக்கு வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தியத் திரையுலகில் மிகப்பெரும் படைப்பாக உருவாகி வரும் திரைப்படம் சலார். கேஜிஎஃப் மூலம் ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களையும் கவர்ந்த இயக்குநர் பிரசாந்த் நீல் மற்றும் பாகுபலி மூலம் மிகப்பெரிய சூப்பர்ஸ்டாராக உருவெடுத்திருக்கும் பிரபாஸ் ஆகியோர் முதன்முறையாக இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளனர்.



மிக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, Hombale Films நிறுவனம், இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கும் 'சலார்' படத்தின் டீசரை, ஜூலை 6 ஆம் தேதி வெளியிடவுள்ளது. அனைத்து மொழிகளுக்கும் சேர்த்து ஒரே டீசராக, இந்த டீசர் வெளியாகும். கேஜிஎஃப் 2 மற்றும் காந்தாரா போன்ற பிளாக்பஸ்டர்களுடன் 2022 ஆம் ஆண்டை வெற்றிகரமாகக் கொண்டாடிய பிறகு, Hombale Films நிறுவனத்தின் அடுத்த பிரமாண்ட படைப்பாக, பிரபாஸ் நடிப்பில், பிரஷாந்த் நீல் இயக்கத்தில், “சலார்” பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளைப் படைக்கப் போகிறது. படத்தின் டீஸர் மூலம் இந்த மிகப் பிரமாண்ட படைப்பில் சில காட்சிகளைக் கண்டுகளிக்கும் உற்சாகம் ரசிகர்களிடையே பெரும் உச்சத்தில் உள்ளது.





Hombale Films நிறுவனத்தின் “சலார்” படத்தில் பிரபாஸுடன், பிருத்விராஜ் சுகுமாரன், ஸ்ருதிஹாசன் மற்றும் ஜெகபதி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். பிரசாந்த் நீல் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் செப்டம்பர் 28, 2023 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

Comments


bottom of page