top of page
mediatalks001

'டீன்ஸ்' - விமர்சனம் !



ஒரே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 12 சிறுவர்கள் நண்பர்களாக பழகிக்கொண்டு ஒரே பள்ளியில் ஒரே வகுப்பில் அனைவரும் படித்து வருகிறார்கள்.

இந்நிலையில் இவர்களை சிறுவர்கள் என பெற்றோர்கள்,உறவினர்கள் அழைப்பது இவர்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை.

வெளிநாடுகளைப் போல் நம்ம நாட்டிலும் சிறுவர்களுக்கு பெற்றோர்கள் அதிகமான சுதந்திரம் கொடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள்.

இநேரத்தில் இப்பொழுது நாங்கள் சிறுவர்கள் இல்லை, டீன்ஏஜ் வயதில் இருப்பவர்கள் என்று நிரூபிக்க நினைக்கிறார்கள்

அப்போது சிறுமி ஒருவர் தனது பாட்டி வசிக்கும் கிராமத்தின் அழகு மற்றும் அங்கு பேய் இருப்பதாக சொல்கிறார். அந்த பேயை நேரில் சென்று பார்க்கலாம், என்று முடிவு செய்யும் சிறுவர்கள் ஆசிரியைக்கு தெரியாமல் பள்ளி வகுப்பை தவிர்த்து பெற்றோர்களுக்கு தெரியாமல் அந்த கிராமத்திற்கு செல்கிறார்கள். கிராமத்திற்கு போகும் வழியில் போக்குவரத்து பிரச்சனை ஏற்பட, காட்டுப் பாதையில் பயணிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது.

காட்டு வழியில் செல்லும் போது, ஒவ்வொரு சிறுவர்களாக மர்மமான முறையில் காணாமல்போகிறார்கள்

காணாமல் போனவர்களை சிறுவர்கள் அனைவரும் கலக்கத்துடன் தேடும்போது ஒவ்வொருவராக மாயமாகிறார்கள். என்ன நடக்கிறது என்று புரியாமல் பயத்தில் அங்கும் இங்குமாக சிறுவர்கள் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம் ஒவ்வொருவராக மாயமாவது தொடர்ந்துக்கொண்டே இருக்கிறது.


முடிவில் சிறுவர்களின் இந்த திடீர் மாயத்தின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் ?


மாயமான சிறுவர்கள் இறுதியில் தன் நண்பர்களுடன் இணைந்தார்களா ?


அச் சிறுவர்களை காப்பாற்றிய முக்கியமான மனிதர் யார் ? என்பதை சொல்லும் படம்தான் 'டீன்ஸ்'

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் 13 சிறுவர்களாக நடித்த அனைவரும் அறிமுக நடிகர்களாக பார்ப்பவர்களுக்கு தெரியாமல் நடிப்பு, வசன உச்சரிப்பு மற்றும் உடல்மொழி அனைத்திலும் மிக சிறப்பாக நடித்துள்ளனர்.


இயக்குநர் ராதா கிருஷ்ண பார்த்திபன் நக்கலும் நையாண்டியும் கலந்த வழக்கமான பாணியை தவிர்த்து வித்தியாசமான வேடத்தில் நாசா விஞ்ஞானியாக அமைதியான நடிப்பில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் .


கேவ்மிக் ஆரி ஒளிப்பதிவும், டி இமானின் இசையும் படத்திற்கு பக்க பலம் .


அறிவியல் உலகத்தின் அதிசயங்கள் பற்றியும் அறிவியலைப் பற்றி சிறுவர்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும் என்ற ஒரே நோக்கத்தை கதையாக கொண்டு விறு விறுப்பான,,,, திரில்லரான,,,,, திரைக்கதை அமைப்புடன் சிறுவர்கள் முதல் அனைவரும் ரசிக்கும் அறிவியல் உலக படமாக இயக்கியுள்ளார் இயக்குநர் ராதா கிருஷ்ண பார்த்திபன்.


ரேட்டிங் - 3 / 5

Comentarios


bottom of page