1850ம் வருடமான 19 ஆம் நூற்றாண்டில் தமிழகத்தின் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள வேப்பூர் கிராமத்தில் வசிக்கும் ஆதிக்குடியினர் அனைவரும் மிராசுதார் முத்துகுமாரிடம் தங்களது நிலங்களை பறிகொடுத்துவிட்டு, அதே நிலங்களில் வேலை செய்து அவரது பண்ணை அடிமைகளாக இருக்கும் நிலையில் நாயகன் சீயான் விக்ரம் தனது சொந்த நிலத்தில் மனைவி பார்வதியுடன் சேர்ந்து குடும்பத்தோடு மகிழ்ச்சியாக விவசாயம் செய்துக் கொண்டிருக்கிறார்.
இதை பொறுத்துக்கொள்ளாத மிராசுதாரர் முத்துக்குமார் சாமர்த்தியமாக சதி செய்து, தீ வைத்து கொளுத்தி நிலத்தை விக்ரமிடம் இருந்து பறித்துக்கொள்வதுடன் அவரையும், அவரது குடும்பத்தாரையும் மிராசுக்கு அடிபணிந்த அடிமைகளாக்கி விடுகிறார்.
இந் நிலையில், அப்பகுதியில் தங்கம் இருப்பதாக நம்பும் பிரிட்டிஷ்காரர் டேனியல் அந்த தங்கத்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதோடு, அந்த பணியில் ஆதிக்குடி மக்களை ஈடுபடுத்த முடிவு செய்கிறார். கிடைக்கும் தங்கத்தில் பங்கு தருவதோடு, தினமும் கூலி, உணவு மற்றும் இருப்பிடம் போன்ற வசதிகளை செய்துகொடுப்பதாக சொன்னாலும், தங்கத்தை தேடி செல்லும் பயணம் ஆபத்தானது என்பதால் அதில் ஈடுபட மக்கள் தயங்குகிறார்கள்.
ஆனால், பண்ணைகளில் கொத்தடிமைகளாக சுயமரியாதை இன்றி தினம் தினம் செத்துக் கொண்டிருப்பதை விட, நம் வாழ்க்கையை மாற்றி, இழந்த நிலங்களை மீட்பதற்கான வாய்ப்பாக தங்கம் தேடும் பயணத்தை பார்க்கும் விக்ரம் மிராசுவின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலைபெற ஆங்கிலேயர்களுக்கு தங்கத்தை கண்டுபிடிக்க முடிவு செய்கிறார் ,
சாவுக்கு துணிந்து தனது சகாக்களான பசுபதி ,ஹரிகிருஷ்ணன் என சிலருடன் பிரிட்டிஷ்காரர் டேனியல் தலைமையில் தங்கம் தேடி பயணிக்கிறார்.
அந்த தங்கம் இருக்கும் இடத்தை பல காலங்களாக ஒரு அமானுஷ்ய சக்தி பாதுகாத்து வருகிறது.
முடிவில் அமானுஷ்ய சூனிய சக்தியான மாளவிகா மோகனன் எதற்காக தங்கம் இருக்கும் நிலத்தை பாதுகாத்து வருகிறார் ?
பிரிட்டிஷ்காரர் டேனியல் விக்ரமின் திறமையினால் தங்கம் இருக்கும் இடத்தை கண்டுபிடித்தாரா ? இல்லையா ? என்பதை சொல்லும் படம்தான் ‘தங்கலான்’.
தங்கலான் என்ற கதாபாத்தில் நடித்திருக்கும் விக்ரம் ஆதிக்குடி மனிதராக உருமாறி தங்கலான் என்ற ஆதிக்குடி விவசாயியாக நிலத்தில் வேலை செய்யும் விதம் ,,, மற்றொரு கதாபாத்திரத்தில் பூட்டனாக தங்கம் எடுக்கும் வயதான தோற்றம் என்று அனைத்து தோற்றங்களிலும் உடல்மொழி, வசன உச்சரிப்பு, உடலமைப்பில் மாற்றம் என ஒவ்வொரு காட்சியிலும் பிரமிக்க வைக்கும் நடிப்பில் தங்கலான் கதாபாத்திரத்தின் தனித்துவத்தினால் நடிகர் விக்ரமுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைக்க போவது உறுதி !!
தங்கத்தை பாதுகாக்கும் பழங்குடியின தலைவி ஆரத்தியாக நடிப்பில் மிரட்டியிருக்கும் மாளவிகா மோகனன், விக்ரமின் மனைவியாக கங்கம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் பார்வதி,ராமானுஜர் வழியில் பயணிக்கும் பசுபதி,தங்கத்தை தேடும் பிரிட்டிஷ்காரராக நடிக்கும் இங்கிலாந்து நடிகர் டேனியல், விக்ரமுடன் பயணிக்கும் ஆதிக்குடி மக்கள், மிராசுதாரராக நடித்திருக்கும் முத்துக்குமார், ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட படத்தில் நடித்திருக்கும் அனைத்து நடிகர்களும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர் .
ஜி.வி.பிரகாஷ் குமாரின் அசுரத்தனமான பின்னணி இசையுடன் ,படம் பார்க்கும் ரசிகர்கள் கொண்டாடும் விதமாக பாடல்களை கொடுத்துள்ளார் .
ஒளிப்பதிவாளர் ஏ.கிஷோர் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பக்க பலம் .
படத்தொகுப்பாளர் செல்வா ஆர்.கே, கலை இயக்குநர் எஸ்.எஸ்.மூர்த்தி, சண்டைப்பயிற்சியாளர் ஸ்டன்னர் சாம், மேக்கப் கலைஞர் பால்தேவ் வர்மா, ஆடை வடிவமைப்பாளர் ஏகன் ஏகாம்பரம் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் பணிகள் பாராட்டும்படி இருக்கின்றது .
வீரம் நிறைந்த ஆதிக்குடிகளின் வாழ்வியலை,,,, அடிமைத்தனத்துடன் கலந்த நிலத்தின் அரசியலை புதிய முயற்சியாக அதற்கான கடினமான உழைப்போடு சர்வ தேச அளவில் பிரம்மாண்ட படைப்பாக ஒரு தரமான படமாக படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.
ரேட்டிங் - 4 / 5
சர்வ தேச அளவில் பிரம்மாண்ட படைப்பாக ஒரு தரமான படம்
Comentarios