top of page

திருப்பதியில் வெளியிடப்பட்ட 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம்!!

mediatalks001




நடிகர் பிரபாஸ் நடிப்பில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' படத்தின் பிரத்யேக முன்னோட்டம் ஆன்மீக தலமான திருப்பதியில், நடிகர் பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.


உலகம் முழுவதும் பிரபலமான திருப்பதியில், பிரம்மாண்டமான முறையில் 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் பிரத்யேக முன்னோட்ட வெளியீட்டு விழா நடைபெற்றது. லட்சக்கணக்கில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் முன்னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், நடிகர்கள் பிரபாஸ், கிருத்தி சனோன், சன்னி சிங், தேவதத்தா நாகே, தயாரிப்பாளர்கள் பூஷன் குமார், இயக்குநர் ஓம் ராவத், பாடலாசிரியர் மனோஜ் முண்டாஷீர், இசையமைப்பாளர்கள் அஜய்- அதுல் உள்ளிட்ட படக் குழுவினர் கலந்துகொண்டு, முன்னோட்டத்தை வெளியிட்டனர்.





சீதையை மீட்டெடுக்க ராமன், வானர சேனையுடன் அசாதாரணமான பயணத்தை மேற்கொள்வதையும், தீமையின் மீது நன்மையின் வீரம், சக்தி மற்றும் வெற்றியின் ஒரு பார்வையையும் முன்னிறுத்தும் இந்த முன்னோட்டம், இம்மாதம் பதினாறாம் தேதியன்று வெளியாகவிருக்கும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தி இருக்கிறது. 'ஆதி புருஷ்' படத்தினைக் காண்பதற்கான ஆவலை பார்வையாளர்களிடத்தில் மேலும் தூண்டி இருக்கிறது.


இந்த முன்னோட்ட வெளியீட்டு விழாவில் திரண்டிருந்த பிரபாஸின் ரசிகர்களின் கரவொலி மற்றும் 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற வாசகத்தின் குரலொலி, விண்ணை பிளந்தது. இவ்விழாவின் போது நடைபெற்ற வானவேடிக்கை, ரசிகர்களின் கொண்டாட்ட உணர்வை பிரதிபலித்தது. இந்நிகழ்வு, வரலாற்றில் பொன்னான அத்தியாயத்தை உண்டாக்கியது. குறிப்பாக இளைஞர்களின் உற்சாகத்தை உத்வேகப்படுத்தியது. மேலும் ரசிகர்கள் தங்கள் மனம் கவர்ந்த நடிகரான பிரபாஸை, ராமனாக திரையில் காண்பதற்கு ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.


'ஆதி புருஷ்' திரைப்படம், காவிய கதை என்பதாலும், இதன் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது. திறமையான தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நட்சத்திர கலைஞர்களின் கூட்டு முயற்சி, பரவசமான சினிமா அனுபவத்தை வழங்கும் என்பதனை உறுதிப்படுத்துகிறது. மேலும் இந்த திரைப்படம், பார்வையாளர்களின் இதயங்களிலும், மனதிலும் அழியாத அடையாளத்தை உண்டாக்கும்.





ஓம் ராவத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன்குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர், யுவி கிரியேஷன்ஸின் பிரமோத் மற்றும் வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் ஜூன் 16ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது

Comments


©2020 by MediaTalks. 

bottom of page