top of page

'பேச்சி’ நண்பர்களால் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படம்- இயக்குநர் ராமச்சந்திரன்

  • mediatalks001
  • Jul 25, 2024
  • 3 min read




வெயிலோன் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கோகுல் பினாய் மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) சார்பில் ஷேக் முஜீப் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராமச்சந்திரன்.பி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘பேச்சி’. ராஜேஷ் முருகேசன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு பார்த்திபன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இக்னேசியஸ் அஸ்வின் படத்தொகுப்பு செய்ய, குமார் கங்கப்பன் கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார். விக்னேஷ் செல்வராஜன், தனிஷ்டன் ஃபெர்னாண்டோ, ராஜராஜன் ஞானசம்பந்தம், சஞ்சய் சங்கர் ஆகியோர் இணை தயாரிப்பு செய்துள்ளனர்.


பால சரவணன், காயத்ரி சங்கர், தேவ், முரளி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் வரும் ஆகஸ்ட் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு மற்றும் வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் (Verus Productions) நிறுவனத்தின் அறிமுக நிகழ்ச்சி இன்று (ஜூலை 23) சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், மூத்த பத்திரிகையாளர்கள் தேவி மணி மற்றும் மக்கள் குரல் ராம்ஜி சிறப்பு விருந்தினர்களாக கலந்துக்கொண்டு வெரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்தை அறிமுகம் செய்து வைத்தனர்.


நிகழ்ச்சியில் ஒளிப்பதிவாளர் பார்த்திபன் பேசுகையில், “’பேச்சி’ உருவான விதமே ஒரு அனுபவமாக இருந்தது. படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன் விளம்பர பட இயக்குநர், அவருடன் நான் பல விளம்பர படங்களில் பணியாற்றியுள்ளேன். அப்படி நாங்கள் பணியாற்றிவிட்டு ஏற்காடுக்கு செல்வோம், அங்கு தான் இந்த கரு உருவானது. பிறகு இதை படிபடியாக டெவலப் செய்து திரைப்படமாக உருவாக்க முடிவு செய்தோம். இந்த படம் உருவாக முக்கியமான நபர் கோகுல் பினாய். ஒளிப்பதிவாளராக பல படங்கள் செய்திருக்கும் அவர், நண்பர்களுக்காக இந்த படத்தை பண்ணார். பல பேர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வேறு ஒரு துறையில் முதலீடு செய்து நல்லபடியாக வாழ்கிறார்கள். ஆனால், கோகுல் பினாய் சினிமாவில் சம்பாதித்த பணத்தை சினிமாவில் முதலீடு செய்து இந்த படத்தை தயாரித்திருக்கிறார். இந்த சமயத்தில் அவருக்கு மட்டும் இன்றி அவரது குடும்பத்தாருக்கும் நன்றி சொல்லியாக வேண்டும். இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தான் தொடங்கினோம். பிறகு படத்தின் பட்ஜெட் அதிகமானது. படத்திற்கு தேவைப்பட்டதால் அதை நாங்கள் செய்தோம். எனக்கு என்னவெல்லாம் தேவைப்பட்டதோ அது அனைத்தையும், பட்ஜெட் பார்க்காமல் செய்து கொடுத்தார்கள், அதனால் தான் படத்தின் அவுட்புட் மிக சிறப்பாக வந்திருக்கிறது. இந்த படத்தின் நிலப்பரப்பு மிக கடினமானது, இதில் எதையும் எளிதில் செய்ய முடியாது. அதனால் அனைவரும் மிகவும் கஷ்ட்டப்பட்டு தான் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறோம். எனவே, இந்த படத்திற்கு ஊடகங்கள் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” என்றார்.


படத்தொகுப்பாளர் இக்னேசியஸ் அஸ்வின் பேசுகையில், “இந்த படம் எனது நெருங்கிய நண்பர் ராம் மூலமாக கிடைத்தது. இந்த படத்தில் பணியாற்ற எனக்கு வாய்ப்பு கொடுத்த கோகுல் பினாய்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். படம் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது, திரையரங்கிற்கு சென்று பாருங்கள், நன்றி.” என்றார்.


நடிகர் முரளி ராம் பேசுகையில், “இத்தனை கேமராக்கள் எங்கள் நிகழ்ச்சியை கவரேஜ் செய்கிறார்கள் என்பதே பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. பிரபஞ்சத்திற்கு நன்றி. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒரு படம் பெஞ்ச் மார்க் படமாக அமையும். அதாவது, ‘மைனா’, ‘பீட்சா’ என இப்படி வெற்றி பெற்ற படங்களை திரும்ப பார்த்தோம் என்றால் அந்த படங்கள் அனைத்தும் நண்பர்கள் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படமாக தான் இருக்கும். அந்த வரிசையில் ‘பேச்சி’ படமும் இடம் பிடிக்கும். இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் பெரிய மனதோடு பணியாற்றினார்கள், ஒவ்வொருவரும் தங்களது சொந்த படம் போல வேலை பார்த்தார்கள். இப்படிப்பட்ட ஒரு படத்தில் நானும் இருக்க வேண்டும் என்பதற்காக நானே கேட்டு தான் சேர்ந்துக் கொண்டேன். நான் இரண்டு நாட்கள் பணியாற்றினேன். இயக்குநர் ராமச்சந்திரன் சார், வங்கியில் நல்ல பதவியில் இருந்தார், ஆனால் சினிமா ஆசையால் அந்த வேலையை விட்டுவிட்டு, சினிமாத்துறைக்கு வந்திருக்கிறார். அதேபோல், அவரது குடும்பத்தாரும் அவரது ஆசையை புரிந்துக்கொண்டு அவரை இந்த துறைக்கு அனுப்பி வைத்தார்கள். நிறைய விளம்பர படங்களை செய்தார். இப்போது படம் பண்ண வந்திருக்கிறார். ஒளிப்பதிவாளர், கோகுல் பினாய் என அனைவருமே அவரிடம் இருந்து வந்தவர்கள், அவரது தம்பிகள். தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பது போல், அனைத்து தம்பிகளும் சேர்ந்து அண்ணனுக்காக இந்த படம் பண்ணியிருக்கிறார்கள். அவர்களது முயற்சி நிச்சயம் வெற்றி பெறும். படத்தை வெளியிடும் வெரூஸ் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.” என்றார்.


நடிகர் ஜனா பேசுகையில், “’பேச்சி’ படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த இயக்குநர் மற்றும் தயாரிப்பாளருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இது மிகவும் வித்தியாசமான ஒரு திகில் திரைப்படமாக இருக்கும். திரையரங்குகளில் பார்க்கும் போது ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை கொடுக்கும், நிச்சயம் ரசிகர்கள் படத்தை எஞ்சாய் பண்ணுவார்கள், நன்றி.” என்றார்.

படத்தின் இயக்குநர் ராமச்சந்திரன்.பி பேசுகையில், “’பேச்சி’ என்னுடைய முதல் படம். நண்பர்களால் நண்பர்களுக்காக எடுக்கப்பட்ட படம். முதல் நன்றி நான் கோகுலுக்கு தான் சொல்ல வேண்டும். நாங்கள் விளம்பர படங்கள் எடுக்கும் போது சேலம் சென்றால், அப்படியே ஏற்காடு சென்று வருவோம். அப்படி ஒரு பயணத்தின் போது, நாம் ஒரு படம் பண்ணலாம் என்று சாதாரணமாக பேசியது தான் இந்த பிரஸ் மீட்டில் வந்து நின்கிறது. 10 வருடங்களுக்கு முன்பு என் நண்பர் வசந்த் ஒரு பக்க கதையாக எழுதியதை தான் நான் ஒரு குறும்படமாக எடுத்தேன், இப்போது அது தான் ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது. வசந்தும் நானும் சேர்ந்து தான் இந்த கதையை எழுதியிருக்கிறோம்.


ஊடக நண்பர்கள் எங்களைப் போல் பலரை பார்த்திருப்பீர்கள், அவர்களுடைய பேச்சுக்களை கேட்டிருப்பீர்கள், அவர்கள் சொன்னது போல் நாங்களும் பல கஷ்ட்டங்களை கடந்து தான் இந்த படத்தை முடித்திரு…

நடிகர்கள் அனைவரும் எங்களுக்கு மிகப்பெரிய ஒத்துழைப்பு கொடுத்தார்கள். குறிப்பாக காயத்ரியின் ஒத்துழைப்பு சாதாரணமல்ல. அவரை தவிர வேறு யாராவது நடித்திருந்தால் நிச்சயம் இரண்டு நாட்களில் படப்பிடிப்பு நின்று போயிருக்கும், அந்த அளவுக்கு கடினமான் நிலப்பரப்பு அது, அதில் எந்தவித கஷ்ட்டத்தையும் வெளிக்காட்டாமல் நடித்துக் கொடுத்தார். நல்ல குழு அமைந்தாலே நமக்கு பெரிய நம்பிக்கை வரும், அப்படி ஒரு நம்பிக்கையை படத்தில் பணியாற்றைய அனைவரும் கொடுத்தார்கள். பாலசரவணன் பண்ணையாரும் பத்மினியும் படத்தில் இருந்தே நண்பர். ஏதோ வந்தோம், நடித்தோம் என்று அவர் இருக்க மாட்டார். ஒரு கதாபாத்திரம் என்று சொன்னால் அதன் வசனம் உள்ளிட்ட அனைத்தையும் முன் கூட்டியே வங்கிக்கொண்டு, அந்த கதாபாத்திரத்தை எப்படி இன்னும் சிறப்பாக செய்யலாம், என்று யோசிக்க தொடங்கி விடுவார். அவரை காமெடி வேடத்தில் காட்டாமல் வித்தியாசமான வேடத்தில் காட்ட வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அதை அவர் விலங்கு தொடரில் செய்துவிட்டார். அதன் பிறகு இந்த படத்தில் செய்திருக்கிறார்.


படம் முடிந்துவிட்டது, அதன் பிறகு அந்த படத்தின் மீது ஒரு ஒளி விழ வேண்டும் அல்லவா அது தான் வெரூஸ் நிறுவனம், முஜீப், சஞ்சய், ராஜராஜன், டனிஸ் ஆகியோருக்கு நன்றி. முஜீப் சார் வந்த பிறகு தான் இந்த படம் பெரிய அளவில் உருவானது. நான் பல வருடங்களாக உங்களை சந்தித்துக் கொண்டிருக்கிறேன், நீங்கள் அனைவருக்கும் உங்களது ஆதரவை பலருக்கு கொடுத்து வருகிறீர்கள், எங்களுக்கும் உங்கள் ஆதரவு தேவை என்று கேட்டுக்கொள்கிறேன். ‘பேச்சி’ ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகிறது, திரையரங்குகளில் சென்று பாருங்கள் நன்றி.” என்றார்.

コメント


©2020 by MediaTalks. 

bottom of page