top of page

'ஸ்விக்கி' மற்றும் 'ஜொமேட்டோ' ரைடர்களுக்கு வசந்தபவன் சார்பாக பாராட்டு விழா!




இந்திய அளவில் முதன்முறையாக ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ ரைடர்களுக்கு வசந்தபவன் சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது


நம்ம வீடு வசந்த பவனின் 50வது ஆண்டு நிறைவை ஒட்டி ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ டெலிவரி ரைடர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நேற்று (06.06.2023) வடபழனி 100 அடி ரோட்டில் உள்ள நம்ம வீடு வசந்த பவனில் நடைபெற்றது. இதுபோன்ற நிகழ்வு இந்தியாவில் நடப்பது இதுவே முதல் முறையாகும்.


நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக 'நம்ம வீடு வசந்த பவனி'ன் செயல் தலைவர் ஹரிஷ், ஜொமேட்டோ தலைவர் சக்தி, ஸ்விக்கி தலைவர் சுந்தர், 'நம்ம வீடு வசந்த பவன்' சேர்மன் ரவி முத்து கிருஷ்ணன், மேனேஜிங் டிரைக்டர் ஸ்வர்ணலதா ரவி, இயக்குநர் ஆனந்த் ரவி ஆகியோர் பங்கேற்றனர்.





மழை, வெயில், கொரோனா காலம் என எதுவும் பாராமல் உழைத்து வரும் ரைடர்களை சிறப்பு விருந்தினர்கள் பாராட்டியதோடு, இனி வரும் காலங்களில் அனைத்து ரைடர்களும் தங்களின் இயற்கை அவசர தேவைகளுக்காக வசந்த பவனை பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதை தெரிவித்து அவர்களுக்கு தங்களது நன்றியை தெரிவித்து பாராட்டினர். இந்த முடிவு குறித்து நிகழ்வில் கலந்து கொண்ட பத்திரிகை மற்றும் ஊடக நண்பர்கள் வசந்த பவனுக்கு தங்களது பாராட்டுகளைத் தெரிவித்தனர்.

Comments


bottom of page