top of page

19வது ஆசிய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜிக்கு பரிசு வழங்கிய M.செண்பகமூர்த்தி

  • mediatalks001
  • Oct 13, 2023
  • 1 min read

ree

சைனாவில் நடந்த 19வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற நித்யா ராமராஜ் அவர்களுக்கு ரெட் ஜெயன்ட் மூவிஸ் M.செண்பகமூர்த்தி பரிசு வழங்கி பாராட்டு.  


கோயம்புத்தூரில் ஏழைத்தாயுடன் எளிமையான குடும்பமாக வாழ்ந்து வரும் வித்யா, நித்யா,இந்த இரட்டையர்கள் இருவரும், சிறு வயது முதலே விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இவர்களின் திறமையறிந்து சென்னை மாவட்ட  மூத்தோர் தடகள சங்கத்தின் தலைவர்,திரு M.செண்பகமூர்த்தி, இருவரையும் ஊக்கப்படுத்தி, பல உதவிகள் செய்து வருகிறார். ஆசிய போட்டிகளில் இவர்கள் கலந்து கொள்வதற்கு ,அவர்களுக்கு தேவையான காலணி முதல் பல பரிசுகளை வழங்கி  உதவிகளைச் செய்துள்ளார்.


ஆசிய போட்டியில் வித்யா 400 மீட்டரில் தங்கப்பதக்கம் வாங்கி சாதித்ததுடன் மேலும் பல சாதனைகள் செய்துள்ளார். நித்யா 400 மீட்டர் தடை தாண்டி ஓடுதல் போட்டியில் கலந்துகொண்டு வெண்கல மெடல் பரிசும், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் வெள்ளி பதக்கம் மற்றும், 400 மீட்டர் கலப்பு ஓட்டத்தில் சில்வர் மெடல் பெற்று சாதனை செய்துள்ளார். ஆசிய போட்டிகளில் மட்டுமல்லாது தேசிய அளவிலான போட்டிகளிலும் தமிழகம் சார்பில் இந்த இரட்டையர்கள் கலந்துகொண்டு, பல சாதனைகள் படைத்து வருகிறார்கள். சமீபத்தில் தேசிய அளவில் மாநிலங்களுக்கு இடையிலான போட்டியில் கலந்து கொண்ட நித்யா 56.01 நொடிகளில் ஓட்ட தூரத்தை கடந்து, சாதனை செய்துள்ளார். மேலும் ஓட்ட  வீராங்கனை பி டி உஷா செய்த இந்த சாதனையை வித்யா சமன் செய்துள்ளார். என்பது மகிழ்ச்சியான செய்தி.


திரு M.செண்பகமூர்த்தி அவர்கள், சாதனை செய்த இந்த இரட்டை வீராங்கனைகளை அழைத்துப் பாராட்டியதுடன் அவர்களுக்கு நிதி உதவியையும் விளையாட்டு போட்டிகளுக்குக்குத் தேவையான உபகரணங்களையும் பரிசாக வழங்கி கௌரவித்துள்ளார்...தொடர்ந்து ஏழ்மை நிலையில் உள்ள விளையாட்டு துறையில் உள்ளவர்களுக்கு எப்போதும் தாங்கள் உதவுவோம் என்றும் மகிழ்ச்சியுடன் அவர்களை அனுப்பி வைத்தார் ..

Comments


©2020 by MediaTalks. 

bottom of page