top of page

சென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக மீண்டும் தேர்வான தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன்!

  • mediatalks001
  • Nov 11, 2023
  • 1 min read

ree

சென்னை ரைபிள் கிளப் கவுரவ செயலாளராக தயாரிப்பாளர் ராஜ்சேகர் பாண்டியன் மீண்டும் தேர்வு.


சென்னை ரைபிள் கிளப் - 1952 ஆம் ஆண்டு சென்னை மாநகரில் விளையாட்டுத் திறன், ஒழுக்கம், சுய உணர்வு ஆகியவற்றை உருவாக்கும் நோக்கத்திற்காக தொடங்கப்பட்டது.‌ எழும்பூர் மற்றும் அலமாதியில் இரண்டு துப்பாக்கி சுடும் வளாகங்களை கொண்டிருக்கிறது.


தமிழகத்தில் துப்பாக்கி சுடும் விளையாட்டின் வளர்ச்சிக்காக மறைந்த டாக்டர் பி. சிவந்தி ஆதித்தன் ஆற்றிய சேவைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இந்த துப்பாக்கி சுடும் வளாகங்களுக்கு அவரது பெயர் சூட்டப் பட்டிருக்கிறது.


மதிப்புமிக்க அர்ஜுனா விருதை வென்ற திருமதி. ரூப ஸ்ரீநாத் உன்னிகிருஷ்ணன் மற்றும் சமீபத்தில் ஆசிய துப்பாக்கி சுடும் போட்டியில் தங்கம் வென்ற பிருத்விராஜ் தொண்டைமான் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளனர்‌.



ree

இந்நிலையில் சென்னை ரைபிள் கிளப்பின் 2023 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர பொதுக் குழு கூட்டம், சென்னை எழும்பூரில் உள்ள Police Officers Mess வளாகத்தில் நடைபெற்றது. நவம்பர் 4 ஆம் தேதியன்று நடைபெற்ற இந்த கூட்டத்தில் சென்னை மாநகர காவல் ஆணையர் மற்றும் சங்க தலைவருமான திரு. சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் அவர்களும் மாநகர கூடுதல் காவல் ஆணையர் மற்றும் சங்க துணைத் தலைவருமான திரு. கபில்குமார் சி. சரத்கரி ஐபிஎஸ் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகித்தனர்.


பொதுக்குழு கூட்டத்தில் பேசிய சென்னை ரைபிள் கிளப்பின் தலைவரான திரு சந்தீப் ராய் ரத்தோர், ''துப்பாக்கி சுடும் விளையாட்டின் வளர்ச்சிக்காக தனது ஆதரவு தொடரும்'' என்று உறுப்பினர்களுக்கு உறுதியளித்தார். இதனை சங்க உறுப்பினர்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர்.


மேலும் 2023 -26 காலகட்டத்திற்கான தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் கௌரவ செயலாளராக கே. ராஜ்சேகர் பாண்டியன், கௌரவ இணைச் செயலாளராக பாலாஜி தயாளன், கௌரவ பொருளாளராக எஸ். சிபி ராஜேஷ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.‌


இதைத்தொடர்ந்து ஆர். சதீஷ்குமார், எஸ். கார்த்திக், மீரா ஜெகதீஷ், கே. முருகன், டாக்டர். பார்த்திபன் மனோகரன், ஆர். எம். அஸ்வின் குமார், டி.ஜே. ரஞ்சித் ஜெய்பிரபு, ஆர். வெங்கட்ராம், ப. கந்தவேல் ஆகிய ஒன்பது செயற்குழு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page