top of page

தற்போது வெளியாகியுள்ள "அனிமல்" படத்தின் தமிழ்ப் பாடல் ‘போகாதே’

mediatalks001

அன்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் "அனிமல்" படத்தின் அருமையான தமிழ்ப் பாடல் டிராக் ‘போகாதே’ தற்போது வெளியாகியுள்ளது !!


அனிமல் படத்திலிருந்து வெளியான ‘நீ வாடி’ பாடல் பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில் தமிழ் ரசிகர்கள் கொண்டாட மீண்டும் ஒரு அருமையான பாடல் தற்போது அனிமல் படத்திலிருந்து வெளியாகியுள்ளது. புகழ் பெற்ற பிறகு தமிழ் பார்வையாளர்கள் மற்றும் இசை ஆர்வலர்கள் உற்சாகத்துடன் இருப்பதற்கு மற்றொரு காரணத்தை அளித்து, அன்பை மாறுபட்ட கோணத்தில் வெளிப்படுத்தும் இந்த போகாதே பாடல் திருமணத்திற்கு பிறகான உறவின் சிக்கல்களை அழுத்தமாகப் பிரதிபலிக்கிறது.



பாடகர் கார்த்திக் குரலில் வெளிவந்திருக்கும் ‘போகாதே’ பாடல், அனிமல் படத்தில் நடித்திருக்கும் அட்டகாசமான ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ராஷ்மிகா மந்தனா ஜோடியின் காதலை, அதன் வலியை, சிக்கல்களை ஆழமாக வெளிப்படுத்துகிறது. ஸ்ரேயாஸ் பூரணிக் இசையில், மோகன் ராஜன் எழுதியுள்ள ‘போகாதே’, காதலின் சிக்கலான அம்சங்களை அழகாக வெளிப்படுத்துகிறது. அனிமல் திரைப்படம் மனித ஆளுமையின் பல்வேறு அம்சங்களை வெளிப்படுத்துவதோடு மனிதன் ஆதி குணமான விலங்கின் தீவிரத்தை பிரதிபலிக்கிறது மற்றும் பிரதான சினிமாவின் வழக்கமான எல்லைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அழுத்தமான புதிய வகையிலான அனுபவத்தைப் பார்வையாளனுக்கு வழங்கவுள்ளது.


ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா, அனில் கபூர், பாபி தியோல் மற்றும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ள ‘அனிமல்’ ஒரு க்ரைம் டிராமாவாக உருவாகியுள்ளது. இப்படம் மனித உணர்வுகளின் பல்வேறு அம்சங்களை ஆராய்வதன் வழியே, பார்வையாளர்களை ஒரு பரபரப்பான சவாரிக்கு அழைத்துச் செல்லும்.


பூஷன் குமார் மற்றும் கிரிஷன் குமாரின் டி-சீரிஸ், முராத் கெடானியின் சினி1 ஸ்டுடியோஸ் மற்றும் பிரனய் ரெட்டி வாங்காவின் பத்ரகாளி பிக்சர்ஸ் ஆகியவை இணைந்து அனிமல் படத்தைத் தயாரிக்கின்றன. இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய 5 மொழிகளில் அனிமல் திரைப்படம் 1 டிசம்பர் 2023 அன்று வெளியாகிறது


Comments


©2020 by MediaTalks. 

bottom of page