இந்தியா பாகிஸ்தான் போர் பதற்றம் : 'தி வெர்டிக்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் தள்ளிவைப்பு..!
- mediatalks001
- 6 hours ago
- 1 min read

'தி வெர்டிக்ட்' படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியீட்டுத் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநரான கிருஷ்ணா சங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தை அக்னி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் பிரகாஷ் மோகன் தாஸ் தயாரித்துள்ளார்.
மேலும் வரலட்சுமி சரத்குமார், ஸ்ருதி ஹரிஹரன், சுகாசினி, வித்யூலேகா ராமன் மற்றும் பிரகாஷ் மோகன் தாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் மே மாதம் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஆதித்யா ராவ் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவாளராக அரவிந்த் கிருஷ்ணாவும், எடிட்டராக சதீஷ் சூர்யாவும் பணியாற்றி உள்ளனர். ஏற்கெனவே இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சரத்குமார் வெளியிட்டிருந்த நிலையில்,ஃபர்ஸ்ட் சிங்கிளை மதன் கார்க்கி வெளியிட்டிருந்தார்.
இந்தப் படத்தின் டீசரை குஷ்பூ வெளியிட்டு இருந்தார். இந்த மூன்றும் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது . அதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் எக்கச்சக்கமாக அதிகரித்து இருந்தது.
இந்தப் படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் காத்துக் கொண்டிருந்த நிலையில் இன்று மாலை 6 மணிக்கு இந்த படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகும் என்று அறிவித்திருந்தனர். அதில் "திருடா" என்ற பாடலை இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நிலவிவரும் போர்ப் பதற்றம் காரணமாக செகண்ட் சிங்கிள் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டு மே மாதம் 11 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.
Commenti