2025 தீபாவளி பண்டிகைக்கு பிரதீப் ரங்கநாதன் நாயகனாக நடிக்கும் 'Dude'
- mediatalks001
- 4 hours ago
- 1 min read

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் கீர்தீஸ்வரன் இயக்கத்தில் தமிழ்- தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வரும் புதிய திரைப்படம் 2025 தீபாவளி பண்டிகைக்கு உலகம் முழுவதும் வெளியாகிறது!
'லவ் டுடே' படத்தில் நடிகராக அறிமுகமான பிறகு நடிகராகவும் இயக்குநராகவும் ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன். இதற்கடுத்து அவர் நடித்த 'டிராகன்' படமும் தமிழ், தெலுங்கில் வெற்றிடயடைந்தது. அடுத்தடுத்து வெற்றிகளுக்குப் பிறகு அவர் இப்போது பிரபல மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தில் புதிய பான் இந்திய படம் ஒன்றில் நடித்துள்ளார். அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் படத்தை இயக்கியுள்ளார். 'பிரேமலு' படப்புகழ் மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்திருக்க, சீனியர் நடிகர் சரத்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் டைட்டில், முதல் பார்வை மற்றும் படத்தின் வெளியீட்டு தேதியையும் இன்று படக்குழு அறிவித்துள்ளது. இளைஞர்களைக் கவரும்படி 'Dude' எனத் தலைப்பிடப்பட்டுள்ளது. முகத்தில் காயங்களோடு கையில் தாலி வைத்துக் கொண்டு பிரதீப் முதல் பார்வை போஸ்டரில் இருக்கிறார். மாடர்ன் ட்விஸ்ட்டோடு கதை இருக்கும் என்பதை போஸ்டர் தெளிவாகக் காட்டுகிறது. இந்த வருடம் 2025 தீபாவளி பண்டிகைக்கு படம் வெளியாகிறது.
இந்தப் படத்தில் பல திறமையாளர்களை மைத்ரி மூவி மேக்கர்ஸ் கொண்டு வந்துள்ளது. சாய் அபயங்கர் இசையமைத்திருக்க, நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்திருக்கிறார். தயாரிப்பு வடிவமைப்பாளராக லதா நாயுடுவும் படத்தொகுப்பாளராக பரத் விக்ரமனும் பணியாற்றியுள்ளனர்.
தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
*நடிகர்கள்*: பிரதீப் ரங்கநாதன், சரத்குமார், மமிதா பைஜு, ரோகிணி மொல்லெட்டி, ஹிருது ஹாரூன், டிராவிட் செல்வம் மற்றும் பலர்.
*தொழில்நுட்பக் குழு:*
எழுத்து மற்றும் இயக்கம்: கீர்த்தீஸ்வரன்
தயாரிப்பாளர்கள்: நவீன் யெர்னேனி, ஒய் ரவிசங்கர்,
சிஇஓ: செர்ரி,
நிர்வாக தயாரிப்பாளர்: அனில் எர்னேனி,
இசை: சாய் அபயங்கர்,
ஒளிப்பதிவாளர்: நிகேத் பொம்மி,
தயாரிப்பு வடிவமைப்பாளர்: லதா நாயுடு,
ஆடை வடிவமைப்பாளர்: பூர்ணிமா ராமசாமி,
எடிட்டர்: பரத் விக்ரமன்,
மக்கள் தொடர்பு (தமிழ்): சுரேஷ் சந்திரா, சதீஷ்
மக்கள் தொடர்பு (தெலுங்கு): வம்சி-சேகர்
மார்க்கெட்டிங்: ஃப்ர்ஸ்ட் ஷோ
Comments