'டப்பாங்குத்து' படத்தின்இசைமற்றும்முன்னோட்டம்வெளியீடு
பாரதிராஜாவின்'தெற்கத்திபொண்ணு'நடிகர்சங்கரபாண்டிகதையின்நாயகனாகநடித்திருக்கும் 'டப்பாங்குத்து'
படத்தின்இசைமற்றும்முன்னோட்டம்வெளியிடப்பட்டிருக்கிறது. இதற்காகசென்னையில்நடைபெற்றபிரத்யேகஇசைவெளியீட்டுவிழாவில்
பட்டிமன்றபேச்சாளரும், நடிகரும், தயாரிப்பாளருமானதிண்டுக்கல் ஐ. லியோனி,தமிழ்திரைப்படதயாரிப்பாளர்சங்கசெயலாளர்ஃபைவ்ஸ்டார்
கதிரேசன்உள்ளிட்டஏராளமான திரையுலக பிரபலங்களும், நாட்டுப்புறகலைஞர்களும் சிறப்புவிருந்தினர்களாக கலந்துகொண்டனர்.
இப்படத்தின்இசையை திண்டுக்கல் ஐ. லியோனி வெளியிட, வருகைதந்திருந்தசிறப்புவிருந்தினர்களும், கிராமியகலைஞர்களும்பெற்றுக்கொண்டனர்.
மருதம்நாட்டுப்புறநிறுவனம்எனும்படநிறுவனம்சார்பில்தயாரிப்பாளர்எஸ்.ஜெகநாதன்தயாரித்திருக்கும்திரைப்படம் 'டப்பாங்குத்து'.இப்படத்தின்கதை, திரைக்கதை, வசனத்தைஎஸ்.டி.குணசேகரன்எழுத, கிராமியகலையின்நுட்பத்தைஆய்வுசெய்துள்ளஆர்.முத்துவீரா
இயக்கியிருக்கிறார்.
இந்தத்திரைப்படத்தில் 'தெற்கத்திபொண்ணு' புகழ்சங்கரபாண்டிகதாநாயகனாகநடிக்க, அவருக்குஜோடிகளாகதீப்தி, துர்காஎனஇரண்டுநடிகைகள்நடித்திருக்கிறார்கள்.இவர்களுடன்தெருக்கூத்துகலைஞர்களும்நடித்துள்ளனர்.ராஜாகே.பக்தவச்சலம்ஒளிப்பதிவுசெய்திருக்கும்இந்ததிரைப்படத்திற்குசரவணன்இசையமைத்திருக்கிறார்.படத்தொகுப்புபணிகளைடி.எஸ்.லட்சுமணன்கவனிக்க, சண்டைபயிற்சிகளைஆக்க்ஷன்பிரகாஷ்,நாதன்லீஆகியோர்கையாண்டிருக்கிறார்கள்.மக்கள்தொடர்பு : எஸ்.செல்வரகு.
'டப்பாங்குத்து' படத்தைப்பற்றி இயக்குநர் பேசுகையில், ''தமிழின்தொன்மையானஇசைவடிவங்களானதெம்மாங்கு, தாலாட்டு, ஒப்பாரி, வில்லுப்பாட்டு, கும்மி, நலுங்கு, நடவுஎனபலவகைஉண்டு. இவைஅனைத்தையும்ஒலிப்பதிவுநாடாகவெளியிட்டநிறுவனம் ராம்ஜிகேசட்ஸ்நிறுவனம்.இந்தநிறுவனம்வெளியிட்டநூற்றுக்கணக்கான
பாடல்களிலிருந்து15பாடல்களைதேர்வுசெய்துஅதனைஇந்ததிரைப்படத்தில்
பயன்படுத்திஇருக்கிறோம்'' என்றார்.
நடிகர்சங்கரபாண்டிபேசுகையில், '' டப்பாங்குத்துஎன்பதுதிரைப்படம்மதுரைசார்ந்துதெருக்கூத்துகலைஞர்களின்எளியவாழ்வியலைஎதார்த்தமாகவிவரிக்கும்திரைப்படத்தில்நான்கதாநாயகனாகநடித்திருக்கிறேன். இதற்காகமகிழ்ச்சிஅடைகிறேன்.மதுரையைதமிழ்திரைஉலகினர்வன்முறைக்களமாககாட்சிபடுத்திவருகிறார்கள்.ஆனால்அசலில்மதுரைஒருகலைநகரம்.
மதுரைநகரம்6000ஆண்டுகளுக்குமேலாகதொடர்ச்சியாககலைகளை
வளர்த்தெடுத்துவரும்நகரம்.அப்பகுதியில்வாழும்தெருக்கூத்துஎனும்
கலைவடிவத்தை...அந்தகலைஞர்களின்வாழ்வியலைஎளியபடைப்பாக
சொல்லிஇருக்கிறார்கள்.
இந்தப்படத்தில்இடம்பெற்றஅனைத்துபாடல்களும்ஏற்கனவேவெளியாகி
வெற்றிபெற்றபாடல்கள்தான்.இந்தப்பாடல்களைப்பாடிவீதியோரநாடகங்களில்நடித்துதான்நான்இந்தஇடத்திற்குமுன்னேறிவந்திருக்கிறேன்.
அந்தகாலத்துதெருக்கூத்துகலையின்கலைவடிவத்தினை 2K கிட்ஸ்களும்தெரிந்துகொள்ளும்வகையில்படைப்பைஉருவாக்கிஇருக்கும்
அனைவருக்கும்இந்ததருணத்தில்நன்றிதெரிவித்துக்கொள்கிறேன்.'' என்றார்.
திண்டுக்கல் ஐ. லியோனிபேசுகையில், '' இன்றுஇந்தஅளவிற்குபுகழ்பெற்றுஉங்கள்முன்நிற்பதற்கு
அடித்தளமிட்டவர் மதுரை ராம்ஜிகேசட்நிறுவனத்தின்ஜெகநாதன்தான். வத்தலகுண்டுபகுதியில்தான்என்னுடையபட்டிமன்றம்நடைபெற்றுக்
கொண்டிருந்தது.
அதனைத்தொடர்ந்துபேராவூரணிஎன்றஊரில்நீலகண்டவிநாயகர்ஆலய
திருவிழாவில்என்னுடையபட்டிமன்றபேச்சைஒருங்கிணைத்திருந்தார்கள்.
அப்போதுலியோனிஎன்றால்யார்?என்றேயாருக்கும்தெரியாது.அந்தநிகழ்ச்சிக்குதொடக்கத்தில்ஆறுபேர்மட்டுமேபார்வையாளராகஇருந்தனர்.அந்தநிகழ்ச்சியின்தலைப்புசிறந்தபாடலுக்கு
பொருத்தமானவர் கண்ணதாசனா பட்டுக்கோட்டையாரா?.நான்அந்தபட்டிமன்றத்தில்பேசி, பாடிக்கொண்டிருந்தபோது... ஊர்முழுக்க மைக்செட்கட்டிஇருந்ததால்அரைமணிநேரத்தில்அங்கு 15 ஆயிரத்திற்கும்மேற்பட்டவர்கள்திரண்டுவிட்டனர்.
மணிராஜ்என்பவர்ஆலங்குடிகேசட்ஸ்என்றபெயரில்என்னுடைய
பட்டிமன்றத்தைபாதியில்பதிவுசெய்துவெளியிட்டார்.
அதன்மூலமாகத்தான்என்னுடையகுரல்வெளியுலகத்திற்குதெரியவந்தது.
இந்தத்தருணத்தில்அதிகாரப்பூர்வமானமுறையில்ஒருபட்டிமன்றத்திற்கு
தலைப்புவைத்து, அதில்என்னையும்என்னுடையகுழுவினரையும்பேசவைத்து, அதைபதிவுசெய்து, உலகம்முழுவதும்கொண்டுசென்றவர்ராம்ஜிகேசட்ஸ்நிறுவனத்தினர். அதன்பிறகுஏறக்குறைய 15 தலைப்புகளில்பேசவைத்துஉலகம்முழுவதும்இன்றுவரைஎன்புகழை
பரப்புரைசெய்கிறார்கள்
மதுரைராம்ஜிகேசட்ஸ்நிறுவனம்.அந்தநிறுவனம்தயாரித்திருக்கும்
முதல்திரைப்படம் 'டப்பாங்குத்து'.
டப்பாங்குத்துஎன்றசொல்எப்படிபிரபலமானதுஎன்றால், நரிக்குறவர்இனமக்கள்தங்களதுகழுத்தில்டால்டாடப்பாக்களைஅணிந்து
கொண்டுஅதில்தாளம்போட்டுபாட்டுபாடுபவர்கள்.இதைபார்த்தஇரண்டு
முதல்வர்களானஎம்ஜிஆர்- ஜெயலலிதாவும்தங்களதுகழுத்தில்அணிந்து, ஒருதிரைப்படத்தில் 'நாங்கபுதுசாகட்டிக்கிட்டஜோடிதானுங்க..' எனபாட்டுபாடிபிரபலப்படுத்தினார்கள்.
நாட்டுப்புறப்பாட்டுஎன்பதுநம்முடையவாழ்க்கையுடன்ஒன்றிணைந்தது.
கர்நாடகசங்கீதம்ஆட்சிசெய்தஅந்தகாலத்தில்முதன்முதலாக
தமிழ்திரைப்படத்தில்நாட்டுப்புறபாடல்களைஅறிமுகம்செய்தவர்கலைவாணர்என்எஸ்கே. 'நாட்டிற்குசேவைசெய்யநாகரிககோமாளிவந்தானய்யா..'எனும்
அற்புதக்கலைஞர்.
1957 ஆம்ஆண்டில்கே.வி.மகாதேவன்இசையமைத்துவெளியான 'வண்ணக்கிளி' படத்தில்இடம்பெற்ற 'சித்தாடைகட்டிகிட்டு..'என்றகிராமியபாடல்இன்றுவரைபிரபலம்.
கரகாட்டத்திற்கு 'கரகாட்டக்காரன்' என்றுஒருபடம்வந்தது.வில்லுப்பாட்டிற்கு 'வில்லுப்பாட்டுக்காரன்' என்றுஒருபடம்வந்தது.பாட்டுபடிப்பவனுக்கு 'எங்கஊருபாட்டுக்காரன்' என்றபடம்வந்தது.ஆனால்தெருக்கூத்துஎன்றஒருகலையைமையப்படுத்திவெளியாகஇருக்கும்முதல்திரைப்படம்இந்த 'டப்பாங்குத்து'.தெருக்கூத்துஎன்பதுஒருஇருபதுஅடிக்குள்தான்இருக்கும்.இங்குஒருகுழு, அங்குஒருகுழு, ஓடிஓடிஆடும்.இந்ததெருக்கூத்தில்ஆடும்கலைஞர்கள்இந்தப்பாட்டுதான்என்றெல்லாம்அனைத்துவகையானபாடல்களும்பாடுவார்கள்.மக்களை 10 முதல் 11 மணிநேரம்வரைசிரிக்கவைப்பதற்குதெருக்கூத்துகலைஞர்களால்மட்டுமே
இயலும்.இந்தகலையில்கவர்ச்சியானபாடல்வரிகள்இருக்கும்.குறிப்பாக 'மழைபெய்துஊரெல்லாம்தண்ணி...' .ஆண்களுக்குகாமம்உச்சத்தில்இருக்கும்இரவுநேரத்தில்அவர்களின்அந்த
எண்ணத்தைதிசைமாற்றி... அதனூடாககலைவடிவத்தைசொல்லி, அவர்களைசிரிக்கவைத்துதெருக்கூத்துகலையைவளர்ப்பதுஎன்பது
கடினமானது. அந்தக்கலைஞர்களின் தியாகம் போற்றுதலுக்குரியது.
தெருக்கூத்துகலைஞர்களின்கடும்உழைப்பைபோற்றும்வகையில்
உருவாகிஇருக்கும்இந்ததிரைப்படத்தைஅனைவரும்திரையரங்கத்திற்கு
சென்றுகண்டுரசித்துஆதரவளிக்கவேண்டும்எனகேட்டுக்கொள்கிறேன். '' என்றார்
Comments