top of page

“அகாடமி அவார்ட்ஸ்”   விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் “காந்தாரா சேப்டர் 1”  

  • mediatalks001
  • 1 hour ago
  • 1 min read

திரையரங்கில் வெளியாகி 100 நாட்களைக் கடந்த “காந்தாரா சேப்டர் 1”   தற்போது விருதுகளுக்கான களத்தில் நுழைந்துள்ளது !!


“காந்தாரா சேப்டர் 1” திரைப்படம் திரையரங்கில் வெளியானதிலிருந்து 100 நாட்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இது அதன் சினிமா பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாகவும், கலாச்சார தாக்கத்தின் அடையாளமாகவும் திகழ்கிறது. இந்திய மக்கள் மரபுகள், ஆன்மீக நம்பிக்கைகள் மற்றும் பூர்வகுடி கதைகளில் ஆழமாக வேரூன்றிய இந்தத் திரைப்படம், ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது. இதன் மூலம், இன்றைய இந்திய சினிமாவில் குறிப்பிடத்தக்க படைப்பாக  “காந்தாரா சேப்டர் 1 ” தன்னை நிலைநிறுத்தியுள்ளது.


ரிஷப் ஷெட்டி எழுத்து இயக்கத்தில், விஜய் கிரகந்தூர் தயாரிப்பில், ஹொம்பாலே ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் உருவான இப்படம், அதன் ஆழமான கதையமைப்பு, காட்சித் தன்மை மற்றும் பிரம்மாண்டமான காட்சிப்படுத்தலுக்காக பரவலான அங்கீகாரத்தையும் பாராட்டையும் பெற்றுள்ளது.


வெளியீட்டின் 100 நாட்களை கொண்டாடும் இந்நேரத்தில், “காந்தாரா சேப்டர் 1”  திரைப்படம் “அகாடமி அவார்ட்ஸ்”   விருதுகளுக்கான பரிசீலனைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இது, பண்பாட்டுச் செழுமையும் உண்மையான உள்ளூர் கதையாக்கமும் கொண்ட இந்திய திரைப்படங்களுக்கு,  உலகளாவிய அளவில் கிடைக்கும் அங்கீகாரத்தை பிரதிபலிக்கிறது.


“காந்தாரா சேப்டர் 1”  தற்போது இந்திய எல்லையைக் கடந்து,  உலகளாவிய அளவில் பெரும் அங்கீகாரத்தைப் பெற்று வருகிறது.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page