top of page

பிரபாஸின் பிறந்த நாளை வானுயர கட் அவுட் வைத்து கொண்டாடி மகிழ்ந்த ரசிகர்கள்


தென்னிந்திய சினிமாவில் இந்திய சினிமாவின் அடையாளமாக ‘பாகுபலி’ படத்தை மாற்றிய நாயகன் பிரபாஸ். தெலுங்கு ரசிகர்களால் ரெபல் ஸ்டார் என்று அழைக்கப்படுவதுடன் ‘பாகுபலி’ படத்திற்கு பின் ரசிகர்களால் இந்தியன் ஸ்டார் என்று அழைக்கப்படுகிறார் , இந்திய சினிமாவை உலகளவில் மிகப்பெரிய வியாபார சக்திமிக்க சினிமாவாக மாற்றிய பெருமை பிரபாஸை சேரும்


இந்நேரத்தில் ‘கே.ஜி.எப்’ இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடித்து வரும் ‘சலார்’ படத்தின் மீது உலகளவில் அவரது ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்க்கும் படமாக உருவாகி வருகிறது .


‘பாகுபலி’ படத்தின் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த பிரபாஸ், அப்படங்களுக்கு பிறகு நடிக்கும் படங்கள் அனைத்துமே பான் இந்திய படமாக ஹாலிவுட் ஆக்‌ஷன் படங்களுக்கு இணையாக

மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் படங்களாக இருக்கிறது .



பிரஷாந்த் நீல் இயக்கியிருக்கும் சலார் படத்தை தொடர்ந்து நாக் அஸ்வின் இயக்கும் சைன்ஸ் பிக்‌ஷன் படமாக உருவாகும் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கும் மற்றொரு பான் இந்தியப் படமான "கல்கி 2898" படத்தில்நாயகனாக நடிக்கிறார் .


இந் நிலையில், இன்று நடிகர் பிரபாஸ் தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் மட்டும் இன்றி இந்திய திரையுலகமே அவருடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறது. இதற்கிடையே, ஹைதராபாத்தில் பிரபாஸின் வானுயர கட் அவுட் வைத்து ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர் .


மிகப்பெரிய பிரமாண்ட ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ள நடிகர் பிரபாஸின் ’சலார்’ வரும் டிசம்பர் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

bottom of page