top of page

'சீயான் 62' - S. U. அருண்குமார் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கும் சீயான் விக்ரம்!

  • mediatalks001
  • Oct 29, 2023
  • 1 min read

'சீயான் 62' பட அறிவிப்பு காணொளி வெளியீடு


சீயான் விக்ரம் கதையின் நாயகனாக முதன்மையான கதாபாத்திரத்தில் நடிக்கும் புதிய திரைப்படமான 'சீயான் 62' படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தொடர்பான காணொளி வெளியிடப்பட்டிருக்கிறது.


'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி', 'சிந்துபாத்', மற்றும் அண்மையில் வெளியாகி அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டைப் பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றியைப் பெற்ற 'சித்தா' திரைப்படத்தை இயக்கிய S. U. அருண்குமார் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்திற்கு 'சீயான் 62' என தற்காலிகமாக பெயரிடப்பட்டிருக்கிறது. இப்படத்தில் சீயான் விக்ரம் கதையின் நாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்திற்கு 'இசை அசுரன்' ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகும் இந்த திரைப்படத்தை ஹெச் ஆர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ரியா ஷிபு தயாரிக்கிறார்.


இயக்குநர் S. U. அருண்குமார் இயக்கத்தில் சீயான் விக்ரம் நடிப்பில் தயாராகும் புதிய திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு காணொளி வடிவில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த காணொளியில் இடம் பிடித்திருக்கும் அனைத்து அம்சங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டில் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.


'துருவ நட்சத்திரம்', 'தங்கலான்' ஆகிய படங்களின் புதிய அப்டேட்டுகளால் உற்சாகமடைந்திருக்கும் சீயான் விக்ரமின் ரசிகர்களுக்கு, 'சீயான் 62' படத்தை பற்றிய அதிகாரப்பூர்வமான அறிவிப்பின் காணொளி வெளியாகி இருப்பது மேலும் உற்சாகத்தை அளித்திருக்கிறது.


Comentários


©2020 by MediaTalks. 

bottom of page