top of page

ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய் சசுன் ஜெயின் மகளிர் கல்லூரிபெற்றஉயர்தர சான்றிணை!!



தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்றிதழ்களுக்கான ஆய்வில், ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய் சசுன் ஜெயின் மகளிர் கல்லூரி 3.64 மதிப்பெண் பெற்று A++ என்ற உயர்தர சான்றிணை பெற்றது


ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் தேசிய மதிப்பீட்டின் முடிவில் தரப்புள்ளிகளின் வரிசையின் அடிப்படையில் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர் பாய் சசுன் ஜெயின் மகளிர் கல்லூரி 3.64 மதிப்பெண் பெற்று A++ என்ற உயர்தரச் சான்றிணை வல்லுனர்கள் அறிவித்தனர்...


இந்த வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பை சசுன் கல்லூரி குழுமத்தினரும், எஸ் எஸ் ஜெயின் எஜுகேஷன் சொசைட்டி குழுமத்தினரும், கல்லூரி பேராசிரியர்களும், மாணவர்களும் ஒருவருக்கொருவர் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை கொண்டாடினர்...


இந்த நிகழ்ச்சியில் ஜெயின் கல்லூரியின் பொதுச்செயலாளர் அபய ஸ்ரீ ஸ்ரீ மால், ஜெயின் கல்லூரி செயலாளர் ஸ்ரீமதி உஷா, இணை செயலர் ஹரிஷ்-எல் மேத்தா, கல்லூரி முதல்வர் முனைவர் பத்மாவதி, துணை முதல்வர் முனைவர் ருக்குமணி ஆகியோர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்...





மேலும் சிறப்பு விருந்தினர்கள் பேசுகையில், வரும் காலங்களில் ஏ ப்ளஸ் ப்ளஸ் அங்கீகாரத்தை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அதற்கு உறுதுணையாக உயர்கல்வி மற்றும் கூடுதல் கல்வித் திறனை வளர்க்கும் என்றும் உறுதியளித்தனர்.


மேலும் கல்லூரியின் பொதுச்செயலாளர் அபய ஸ்ரீ ஸ்ரீ மால் ஜெயின் அவர்கள் உரையாற்றுகையில், 2005 இல் தொடங்கப்பட்டு 18 ஆண்டுகள் கடந்து வந்த சசுன் கல்லூரி தேசிய மதிப்பீடு மற்றும் தரச் சான்றிதழில் மூன்றாவது சுழற்சியில் உயர்தர சான்று பெற்றது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

Comments


©2020 by MediaTalks. 

bottom of page