திகில் கதையை படமாக இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபடும் நாயகன் சச்சின் ஒரு தயாரிப்பாளரிடம் அக் கதையை சொல்ல,,,,, நாயகன் சொல்லும் கதை ஓகே ஆக,,,, திகில் கதையை படமாக இயக்கும் வாய்ப்பு சச்சினுக்கு கிடைக்கிறது.
கதை விவாதம், பட சம்பந்தப்பட்ட பணிகளுக்காக அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் புதிய வாடகை வீட்டில் குடியேறுகிறார். அடுக்குமாடி குடியிருப்பில் இருக்கும் அந்த வீட்டில் ஏற்கனவே இரண்டு குடும்பங்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதால் அந்த இடத்தில் ஆவிகள் இருப்பது சச்சினுக்கு தெரியவில்லை .
அங்கு வசிக்கும் சச்சின் தூங்கினால் திகிலான பயங்கர பேய் கனவுகள் காண்கிறார் .எல்லாமே அவர் உயிரைப் பறிக்கும் கனவுகளாக இருக்கிறது ..
நாளடைவில் அமானுஷ்ய சக்தியின் சம்பவங்களால் தூக்கம் இல்லாமல், மன அழுத்தத்திற்கு ஆளாகிறார். தனது நிலை குறித்து மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக்கொண்ட பிறகும் சச்சினின் ஒவ்வொரு நாளும் பயங்கரமானதாக இருக்கிறது.
இப் பிரச்சனையினால் அந்த வீட்டை விட்டு வெளியே சென்றாலும், தன்னை அறியாமல் அந்த வீட்டுக்குள் திரும்ப வந்துவிடுகிறார். ஒரு கட்டத்தில் அந்த வீட்டில் இருக்கும் ஆவிகளை பற்றி தெரிந்துக்கொள்ள முயற்சிக்கும் சச்சினுக்கு அதிர்ச்சிகரமான சம்பவங்கள் கண் முன்னே தெரிகிறது.
முடிவில் அந்த வீட்டில் உள்ள ஆவிகளின் பிடியில் இருந்து சச்சின் தப்பித்தாரா?
புதிய படத்தை இயக்குவதன் மூலம் பட இயக்குனராகும் கனவு சச்சினுக்கு நிறைவேறியதா ?இல்லையா? என்பதை சொல்லும் படம்தான் ‘டீமன்’
நாயகனாக நடிக்கும் சச்சின் உடல் மொழியில் ஆவிகளின் பிடியில் அவர் அலறும்போது பயம் கலந்த நடிப்பில் அனைத்து உணர்வுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி தேர்ந்த நடிகராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துகிறார் .
கதைக்கேற்றபடி நாயகியாக நடிக்கும் அபர்ணதி,, கும்கி அஸ்வின் ,ஸ்ருதி பெரியசாமி ,கே பி ஒய் பிரபாகரன் , ரவீணா தாஹா ,நவ்யா சுஜி , தரணி ,அபிஷேக் என நடித்த நடிகர்கள் நடிப்பில் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளனர்
ரோனி ரஃபேலின் இசையும் , ஆர்.எஸ்.ஆனந்த குமாரின் ஒளிப்பதிவும் படத்திற்கு பக்க பலம் !
டெல்லியில் உள்ள ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் வீட்டுக்குள் தற்கொலை செய்துகொண்ட சம்பவத்தை மையமாக கொண்டு திகில் கலந்த திரைக்கதை அமைப்புடன் வித்தியாசமாக அமானுஷ்ய சக்தியின் சம்பவங்களால் மன ரீதியாக நாயகன் பாதிக்கப்படும் காட்சிகளில் சில இடங்களில் தொய்வு இருந்தாலும் எதிர்பாராமல் கிளைமாஸ்க்கில் வரும் டெல்லி குடும்பத்தின் கதையினால் வேகமெடுக்கும் திரைக்கதையின் காட்சிகளால் திகிலான பேய் படத்தை பார்த்த உணர்வை ரசிகர்களுக்கு ஏற்படுத்துகிறார் படத்தை இயக்கிய இயக்குனர் ரமேஷ் பழனிவேல்.
வழக்கமான கதையை சொல்லாமல் திகிலான புதிய கதை களத்தில் ‘டீமன்’
ரேட்டிங் ; 3.5 / 5
Comments