top of page

நடிகர் ரஹ்மானுக்காக விட்டுக் கொடுத்த ராதிகா !



நடிகர் ரஹ்மான் மலையாளத்தில் ஹீரோவாக நடித்து வரும் படம் சமாறா. இப்படத்தின் படபிடிப்பு முடிந்து, ரஹ்மான் தவிர அனைவரும் டப்பிங் பேசி விட்டார்கள். கேரளாவில் கொரோனா அதிகம் இருப்பதால் அங்கு சென்று டப்பிங் பேச முடியாத சூழ்நிலை. தீபாவளி சமயம் என்பதால் சென்னையில் அனைத்து ஸ்டுடியோவும் பிசியாக உள்ளது.


இதை கேள்விபட்ட ராதிகா, தனது ராடன் டப்பிங் தியேட்டரில் வந்து டப்பிங் செய்து கொள்ளுமாறு ரஹ்மானுக்கு உதவினார்.

பொதுவாக ராடன் தயாரிக்கும் படம் அல்லது டிவி சீரியல் டப்பிங் மட்டும் தான் அங்கு நடக்கும். ரஹ்மானுக்காக ஸ்டுடியோவை விட்டுக் கொடுத்தார், ராதிகா.

bottom of page