மக்களின் இதயங்களை வென்ற டங்கி !! 400 கோடி வசூலைக் கடந்து சாதனை !!
இந்தியாவில் மட்டும் 200 கோடியை கடக்கவுள்ளது !
உலகம் முழுதும் பெரும் வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது டங்கி திரைப்படம். இந்த விடுமுறைக்காலத்தில் குடும்ப பார்வையாளர்களுக்கு கொண்டாட்டமாக அமைந்ததுடன் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினரும் ரசிக்கும் படியான அற்புதமான் படைப்பாக அமைந்துள்ளது டங்கி திரைப்படம்.
இந்த ஃபீல் குட் சினிமாவை ரசிப்பதற்காக குடும்பங்கள் திரையரங்குகளில் திரள்வதால், படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கிறது! டங்கி வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களைக் குவித்திருப்பதுடன், உலகம் முழுவதும் 400.40 கோடி வசூல் செய்து, சாதனை படைத்துள்ளது. மேலும் இந்திய பாக்ஸ் ஆபிஸில் விரைவில் 200 கோடியை கடக்கவுள்ளது.
டங்கி படத்தின் அற்புதமான வெற்றியின் மூலம், ஷாருக்கான் 2023 இல் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார். பதான், ஜவான், இப்போது டங்கி என ஷாருக்கான் கடந்த ஆண்டு முழுவதும் பாக்ஸ் ஆபிஸை ஆட்சி செய்துள்ளார். பதான் 1,050.30 கோடி வசூலித்தது, ஜவான் உலகளவில் வாழ்நாள் வசூல் சாதனையாக 1,148.32 கோடி வசூலித்தது. இப்போது டங்கி 400 கோடியைத் தாண்டியுள்ளது. ஒரே வருடத்தில் மூன்று பிளாக்பஸ்டர்களை தந்து, கிங்கான் ஷாருக்கான் பாக்ஸ் ஆபிஸ் மன்னன் என நிரூபித்துள்ளார்.
ராஜ்குமார் ஹிரானியின் டங்கி உலக பாக்ஸ் ஆபிஸில் 400+ கோடி கிளப்பில் இணைந்திருக்கிறது. தாயகத்தை இழந்து வாடும் ஒவ்வொருவரும் தங்கள் வாழ்கையை நெருக்கமான உணரும் படைப்பாக அவர்களின் வலியைப் பேசும் படைப்பாக இதயம் வருடுகிறது டங்கி.
இப்படத்தில் ஷாருக்கானுடன், பூமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட நட்சத்திரக் குழு 'டங்கி' திரைப்படத்தில் நடித்துள்ளது.
இத்திரைப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெயின்மென்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி பிலிம்ஸ் வழங்குகிறார்கள், ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் இணைந்து தயாரித்துள்ளனர். அபிஜத் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் கனிகா தில்லான் இணைந்து எழுதியுள்ளனர். டங்கி 2023 டிசம்பர் 21 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
Hozzászólások