top of page

இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்த'டங்கி'


டங்கி : ஷாருக் கான் -ராஜ்குமார் ஹிரானி கூட்டணியில் உருவான 'டங்கி' திரைப்படம், பார்வையாளர்களின் இதயங்களை வென்று இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாயைக் கடந்து வசூலித்திருக்கிறது.

ராஜ்குமார் ஹிரானியின் 'டங்கி' திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே குறிப்பிடத்தக்க வகையில் தனது முத்திரையை பதித்துள்ளது. இதயத்தை வருடும் கதையுடன் படம் பார்வையாளர்களின் இதயங்களை தொடர்ந்து வென்று வருகிறது. அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் ஈர்க்கும் முதல் தேர்வாகவும் இப்படம் அமைந்துள்ளது. இந்த திரைப்படம் என் ஆர் ஐ (NRI) பார்வையாளர்களுடன் மிகவும் தொடர்புடையதாக அமைந்திருப்பதால்... அவர்களிடமிருந்தும் அதிக அன்பைப் பெற்றுள்ளது. பார்வையாளர்களின் மனதில் அதன் முத்திரையை பதித்த பிறகு, இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் கிளப்பிற்குள் நுழைந்து.. பாக்ஸ் ஆபிஸில் தனது இருப்பை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த சாதனை.. இந்தியாவில் படம் வெளியான நான்கு நாட்களிலேயே நடைபெற்றிருக்கிறது.

'பதான்' மற்றும் 'ஜவான்' ஆகிய திரைப்படங்களுக்குப் பிறகு இந்த ஆண்டில் வெளியான ஷாருக்கானின் 'டங்கி' திரைப்படம் - இந்தியாவில் 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது. இது அவருடைய இந்த ஆண்டின் திரைப்பயணத்தில் தொடர்ந்து மூன்றாவது திரைப்படமாக 100 கோடி ரூபாய் கிளப்பில் இணைந்திருக்கிறது. இத் திரைப்படம் சனிக்கிழமையன்று 29. 25 கோடி ரூபாய் வசூல் செய்தது. ஞாயிற்றுக்கிழமையன்று 30.25 கோடி ரூபாய்க்கு வசூல் செய்ததன் மூலம் அதன் மொத்த வசூல் 102.50 கோடியாக உயர்ந்திருக்கிறது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் பெங்களூரூ போன்ற மாநகரங்களில் குடும்ப பார்வையாளர்கள் ஏராளமாக திரையரங்குகளில் குவிந்தனர். மேலும் ராஜ்குமார் ஹிரானி இயக்கிய இத்திரைப்படம்.. இந்தியாவின் வணிக வளாகங்களில் உள்ள மல்டி பிளக்ஸ்களில் தொடர்ந்து அற்புதமான வரவேற்பைப் பெற்று வருகிறது. இதன் மூலம் 100 கோடி ரூபாய் வசூல் செய்த ஷாருக்கானின் பத்தாவது திரைப்படமாக 'டங்கி' இடம்பெற்றுள்ளது. இத்திரைப்படத்திற்கான ஆதரவும், வரவேற்பும் நாள்தோறும் அதிக வேகத்தில் வளர்ந்து வரும் நிலையில்.. ஞாயிற்றுக்கிழமை இப்படத்திற்கான வசூல் சுமார் 25 சதவீதம் உயர்ந்துள்ளதாக திரையுலக வணிகர்கள் அவர்களுடைய எக்ஸ் ( ட்விட்டர் )தளத்தில் குறிப்பிட்டிருக்கின்றனர்.

ஷாருக்கானுடன் பொமன் இரானி, டாப்ஸி பண்ணு, விக்கி கௌஷல், விக்ரம் கோச்சார், அனில் குரோவர் உள்ளிட்ட பல திறமையான நடிகர்கள் அவர்களுக்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணமயமான கதாபாத்திரங்களுடன் டங்கியில் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தை ஜியோ ஸ்டுடியோஸ், ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மெண்ட் மற்றும் ராஜ்குமார் ஹிரானி ஃபிலிம்ஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் ராஜ்குமார் ஹிரானி மற்றும் கௌரி கான் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இப்படத்திற்கு அபிஜித் ஜோஷி, ராஜ்குமார் ஹிரானி மற்றும் சுனில் தில்லான் ஆகியோர் இணைந்து கதை எழுதி இருக்கிறார்கள். இந்த திரைப்படம் டிசம்பர் 21ம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது.

Kommentare


bottom of page